Published:Updated:

ஜோதிகா இன்ஸ்டாகிராமில் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்... சூர்யா எழுதிய `வலிமை' கமென்ட்!

ஜோதிகா
ஜோதிகா

"திருமணத்துக்குப் பிறகு, அதுவும் இரண்டு குழந்தை பிறப்புக்குப் பிறகு ட்ரெக்கிங், அதுவும் காஷ்மீரில் முடியுமா?" என ஜோதிகாவிடம் பலரும் சந்தேகத்தோடு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகை ஜோதிகாவுக்கு பள்ளிக்காலத்தில் இருந்தே மலைகளில் ஏறும் சாகச பயணமான ட்ரெக்கிங் செய்ய வேண்டும் என்பது விருப்பமாம். அதுவும் இமயமலையில், காஷ்மீரில் ட்ரெக்கிங் செய்யவேண்டும் என்பது ஆசையாம். ஆனால், பள்ளி, கல்லூரி காலத்தில் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லையாம். இந்த ஆசையை கணவர் சூர்யாவிடம் சொல்ல, முதலில் தென்னிந்தியாவில் ட்ரெக்கிங் போய் வந்தவர், இப்போது தன்னுடைய கனவுப் பூமியான காஷ்மீரில் ட்ரெக்கிங் போய் இந்தியக் கொடியை பறக்கவிட்டுவிட்டு வந்திருக்கிறார்.

"திருமணத்துக்குப் பிறகு, அதுவும் இரண்டு குழந்தை பிறப்புக்குப் பிறகு ட்ரெக்கிங், அதுவும் காஷ்மீரில் முடியுமா?" என ஜோதிகாவிடம் பலரும் சந்தேகத்தோடு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், கணவர் சூர்யா மற்றும் சிவக்குமார் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் உற்சாகப்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் வெற்றிகரமாக ட்ரெக்கிங் செய்து முடித்திருக்கிறார் ஜோதிகா.

ஜோதிகா
ஜோதிகா
ஜோதிகா
ஜோதிகா
Shang-Chi: அதே மார்வெல் ஃபார்முலா, ஆனால்... எப்படி இருக்கிறார் MCUவின் புதிய சூப்பர்ஹீரோ ஷாங்க் சி?

ட்ரெக்கிங் முடித்து வீட்டுக்குத் திரும்பிய கையோடு இன்ஸ்டாகிராமிலும் அக்கவுன்ட்டைத் திறந்திருக்கும் ஜோதிகா முதல் படமாக காஷ்மீரில் ட்ரெக்கிங் செய்திருக்கும் படங்களைப் பகிர்ந்திருக்கிறார். "காஷ்மீர் பள்ளத்தாக்கில் 70 கி.மீட்டர் தூரம் ட்ரெக்கிங் போனது மறக்கமுடியாத அனுபவம். இந்தியா அழகானது" எனக் குறிப்பிட்டிருக்கும் ஜோதிகா, "வாழத்தொடங்காதவரை வாழ்க்கை என்பது வெறும் ஒரு இருப்பு மட்டுமே" என்கிற வாழ்க்கைத்தத்துவத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

ஜோதிகாவின் முதல் போஸ்ட்டுக்கு அன்பு கணவர் சூர்யா, "என் பொண்டாட்டி வலிமையானவள்... இன்ஸ்டாகிராமில் பார்ப்பது மகிழ்ச்சி" என தன்னுடைய முதல் கமென்ட்டைப் பதிவு செய்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு