Published:Updated:

விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ்... சூடு பிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்

அய்யனார் ராஜன்

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது

பாக்யராஜ்
பாக்யராஜ்

நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான 'பாண்டவர் அணி'யில் தற்போதைய நிர்வாகத்தினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தனர். தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணைத்தலைவர் பதவிக்கு சென்ற முறை பொன்வண்ணன் போட்டியிட்டார்.

நாசர்
நாசர்

இம்முறை அவருக்குப் பதில் பூச்சி முருகன் போட்டியிடுகிறார். செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கோவை சரளா, மனோபாலா, குஷ்பு உள்ளிட்ட 26 பேர் போட்டியிடுகின்றனர்.

தற்போது இவர்களை எதிர்த்து, நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் அணி குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

பாக்யராஜ்
பாக்யராஜ்

இந்த அணியில் கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்கும் ஐசரி கணேஷ் பொதுச்செயலாளார் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். உதயா, குட்டி பத்மினி ஆகியோர் துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட உள்ளனர்.

குட்டி பத்மினி முதலில் விஷால் டீம் சார்பாக போட்டியிடுவதாக அறிவித்து விட்டு, தற்போது இந்த அணிக்கு வந்து விட்டார்.

அய்யனார் ராஜன்