Published:Updated:

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் `கபாலி' நடிகர்!

தார்மிக் லீ

`பேட்ட' படத்தைத் தொடர்ந்து தனுஷை இயக்குகிறார், கார்த்திக் சுப்புராஜ். தற்காலிகமாக `தனுஷ் 40' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ்
கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ்

`Y Not Studios' தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, `ஜில் ஜங் ஜக்' படத்தில் பணியாற்றிய ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு அமைக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கிறார். `மெட்ராஸ்' படப் புகழான கலையரசன், தற்போது இந்தக் குழுவோடு இணைந்துள்ளார். `நந்தலாலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், கலையரசன். தொடர்ந்து `அட்டக்கத்தி', `முகமூடி', `மதயானைக் கூட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின், `மெட்ராஸ்' படத்தில் அன்புவாக நடித்து பலரின் பாராட்டுகளையும், சில விருதுகளையும் பெற்றார்.

கலையரசன்
கலையரசன்
`தனுஷ் 40'

அதன் பிறகு, கதாபாத்திர தன்மையைப் புரிந்துகொண்டு படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். கடைசியாக அமுதன் இயக்கத்தில் வெளியான `ஐரா' படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தவிர, `சைனா', `டைட்டானிக்', `முகம்' உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் காம்போவில் லண்டனில் உருவாகி வரும் மற்ற குழுவோடு இவரும் இணைந்துள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்காக தனுஷ் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்வதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.