Published:Updated:

"`கலகத்தலைவன்' சீக்ரெட்ஸ், விஜய் படங்கள், சிம்பு பாடல்கள்..."- ஸ்ரீகாந்த் தேவா ஷேரிங்ஸ்

ஸ்ரீகாந்த் தேவா - கலகத்தலைவன்

"சிம்புகூட மூணு படம் பண்ணியிருப்பேன். நல்ல டெக்னீசியன். சின்ன வயசுல இருந்தே தெரியும். என்னுடைய கீ போர்டு எடுத்து மியூசிக் பண்ணுவார். அவர்கூட வேலை பார்க்குறதே ஈஸியா இருக்கும்." - ஸ்ரீகாந்த் தேவா

"`கலகத்தலைவன்' சீக்ரெட்ஸ், விஜய் படங்கள், சிம்பு பாடல்கள்..."- ஸ்ரீகாந்த் தேவா ஷேரிங்ஸ்

"சிம்புகூட மூணு படம் பண்ணியிருப்பேன். நல்ல டெக்னீசியன். சின்ன வயசுல இருந்தே தெரியும். என்னுடைய கீ போர்டு எடுத்து மியூசிக் பண்ணுவார். அவர்கூட வேலை பார்க்குறதே ஈஸியா இருக்கும்." - ஸ்ரீகாந்த் தேவா

Published:Updated:
ஸ்ரீகாந்த் தேவா - கலகத்தலைவன்
`எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி', `குத்து', `சிவகாசி', `ஆழ்வார்' உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறிய இடைவெளிக்குப் பிறகு `கலகத்தலைவன்' படத்துக்குப் பின்னணி இசையமைத்திருக்கிறார். அவரிடம் படம் குறித்துப் பேசினோம்.

'கலகத்தலைவன்' படத்துக்குள்ள எப்படி வந்தீங்க?

"இந்தப் படத்தோட இசையமைப்பாளர் அரோல் கரோலி. அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால படத்தோட பின்னணி இசைக்கு அவர் வேலை பார்க்க முடியாம ஆகிடுச்சு. இந்தச் சூழ்நிலையில் வேற யாராவது மியூசிக் டைரக்டர் போடலாம்ன்னு யோசிச்சிருக்காங்க.னவங்களுக்கு மூணு ஆப்ஷன்ஸ் இருந்திருக்கு. அதுல மூணாவது பேர் என்னுடையது. என்கிட்ட கேட்டப்போ, உடனே ஓகே சொல்லிட்டேன். இப்படித்தான் நான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். டைரக்டர் நிறைய கரெக்‌ஷன் சொல்லுவார்ன்னு கேள்விப்பட்டேன். ஆனா, மகிழ் திருமேனி அப்படி எதுவும் சொல்லல. முதல்ல டீசருக்கு மியூசிக் பண்ணச் சொல்லியிருந்தார். 'எத்தனை ஆப்ஷன் வேணும்னு' கேட்டேன். 'ரெண்டு போதும்'ன்னு சொன்னார். நாலு ஆப்ஷன் கொடுத்தேன். மகிழ் சார் ரொம்ப சந்தோஷமாகிட்டார். எனக்கு வேலை பார்க்கவும் நிறைய டைம் கொடுத்தார். மொத்தம் படத்துக்கே ரெண்டு ஆப்ஷன்ல பின்னணி இசை கொடுத்தேன். ரெண்டையுமே படத்தில் யூஸ் பண்ணியிருக்கார். படத்தோட மியூசிக் வேலை முடிஞ்சவுடனே ரொம்ப பீல் பண்ணிட்டு விடைபெற்றேன்."

ஸ்ரீகாந்த் தேவா
ஸ்ரீகாந்த் தேவா

விஜய், அஜித் படங்களுக்கு இசையமைச்சவர் நீங்க... உதயநிதிகூட வேலை பார்த்த அனுபவம் எப்படியிருந்தது?

"'சிவகாசி' படத்துக்கு விஜய்யுக்கு மியூசிக் பண்ணினேன். அந்தப் படத்துல எல்லாப் பாட்டும் செம ஹிட். 'என்னுடைய படத்துல எல்லாப் பாட்டும் ஹிட்டானது 'சிவகாசி''ன்னு விஜய் சார் சமீபத்துலகூட ஒரு ஆடியோ லான்ச்ல சொல்லியிருந்தார். அஜித்தோட 'ஆழ்வார்' படத்துலயும் எல்லாப் பாட்டும் ஹிட். 'கலகத்தலைவன்' படத்துல தீம் மியூசிக் ஒண்ணு போட்டிருக்கேன். உதயநிதி ஆடியோ லான்ச் போது 'நல்லா வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்'ன்னு சொன்னார். ஆடியோ நிகழ்வுல குழந்தை மாதிரி எல்லாரையும் ஜாலியா சிரிக்க வெச்சுட்டார். நல்லா பண்ணுனா சூப்பரா வாழ்த்துறார். குறைகள் இருந்தா அதையும் சொல்லுறார். எப்போதும் நல்லா நடிக்கக் கூடியவர். ஹியூமர் சென்ஸ் அதிகமா இருக்கு. 'ஆதவன்' படத்துல ஒரு சீன்லகூட நல்லா பண்ணியிருப்பார். 'கெத்து' படத்தில் அளவா நடிச்சிருப்பார். 'நிமிர்' படமும் அப்படித்தான். இந்தப் படம் ஆக்‌ஷன்ல நல்ல பெயரை அவருக்கு வாங்கித் தரும். ஹாலிவுட் சூப்பர் ஹீரோ மாதிரி சரியா நடிச்சிருக்கார். பாடி லாங்குவேஜ் பக்காவா ஃபாலோ பண்ணியிருக்கார்."

சிம்புவுக்கு நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கீங்க. அவரோட ஒர்க் பண்ணதுல மறக்க முடியாத சில விஷயங்கள்...

"சிம்புகூட மூணு படம் பண்ணியிருப்பேன். நல்ல டெக்னீசியன். சின்ன வயசுல இருந்தே தெரியும். என்னுடைய கீ போர்டு எடுத்து மியூசிக் பண்ணுவார். அவர்கூட வேலை பார்க்குறதே ஈஸியா இருக்கும். 'சாணக்கியா' பாட்டுக்கு வேறு வரி இருந்தது. அதை முதல்ல கேட்டு 'வரி நல்லாயில்லை'ன்னு சொன்னார். அப்புறம் 'சாணக்கியா'ன்னு மாத்தினேன். உடனே, ஹிட்டாகும்ன்னு சொல்லிட்டார். அவ்வளவு சினிமா சென்ஸ் இருக்குற நபர் சிம்பு."

ஸ்ரீகாந்த் தேவா
ஸ்ரீகாந்த் தேவா

நாயகர்களுக்கான ஒப்பனிங் சாங்ஸ் நீங்க நிறைய ஹிட் கொடுத்திருக்கீங்க. அந்தக் கலாசாரத்தை எப்படிப் பார்க்கறீங்க?

"பாட்டுக்கும், ஹீரோவுக்கும் ரொம்ப தூரம்ன்னு நினைக்கிறாங்க. ஆனா, ரொம்ப கனெக்ட் இருக்கு. கமர்ஷியல் பாட்டு ஹீரோவுக்குப் பெரிய பக்கபலம். சில ஹீரோவுக்கு மெலடி மட்டுமே இருக்கும். அவங்க பெரிய மாஸ் கமர்ஷியல் ஹீரோ லிஸ்ட்ல இருக்க மாட்டாங்க. ஆனா, என்னைக் கேட்டா கமர்ஷியல் பாட்டு ஹீரோவுக்கு ரொம்ப முக்கியம்."