சினிமா
தொடர்கள்
Published:Updated:

“கபடி ரெடி களமும் ரெடி!”

ஜீவா, அருள்நிதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீவா, அருள்நிதி

“ ‘மனம் கொத்திப் பறவை’, ‘தேசிங்குராஜா’ படங்கள்ல எழில் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.

பிறகு, ‘மாப்ளசிங்கம்’ படத்தை எடுத்தேன். அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறல. ஆனா, இந்த முறை அப்படி நடக்காது, களத்தில் சந்திப்போம்!” உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், ‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் இயக்குநர் ராஜசேகர்.

“இரண்டாவது படமே டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமா?”

“ஒரு சிட்டி சப்ஜெக்ட் கதையைத்தான் ஜீவா சாருக்குச் சொன்னேன். அவருக்கும் கதை பிடிச்சுப்போகவே, ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ பேனர்லேயே பண்ணலாம்னு சொல்லி, வேலைகளை ஆரம்பிச்சோம். அந்தப் படத்துல ஜீவா - ராஷ்மிகா மந்தனா நடிக்கிறதா இருந்தது. அந்தச் சமயத்துல சினிமா ஸ்ட்ரைக் வந்ததனால நினைச்ச தேதியில படத்தைத் தொடங்க முடியல.

பிறகு, ஜீவா சாரும் பிஸியாகிட்டார். ஆறு மாசம் கழிச்சு ‘புனித் ராஜ்குமார் பண்ற மாதிரி கதையேதும் வெச்சிருக்கியா?’ன்னு கேட்டார் செளத்ரி சார். ரெண்டு கதை சொன்னேன்.

“கபடி ரெடி களமும் ரெடி!”

அதுல ஒண்ணு, டூயல் ஹீரோ கதை. அதுல அவருக்கு டூயல் ஹீரோ கதை பிடிச்சிருந்தது. ‘இந்தக் கதையில ஜீவா - ஆர்யா நடிச்சா நல்லா இருக்கும்’னு என் கருத்தைச் சொன்னேன். ‘சரிதான்.

உன் முதல் படம் சரியா போகல. அதனால, ரெண்டாவது படமா டபுள் ஹீரோ கதையைப் பண்ணுனா உன் கரியருக்கு நல்லா இருக்கும்’னு சொல்லிட்டு, செளத்ரி சாரே ஆர்யாவுக்குக் கதை சொல்ல டைம் வாங்கிக் கொடுத்தார்.

ஆனா, ஆர்யாவுக்குக் கதை சரியா பிடிபடலபோல! பிறகு, ஜீவாதான், அருள்நிதி பண்ணுனா நல்லா இருக்கும்னு, அவர்கிட்ட பேசினார். அவருக்குக் கதை பிடிச்சிருந்தது. ‘களத்தில் சந்திப்போம்’ படத்தைத் தொடங்கிட்டோம்.”

“ ‘களத்தில் சந்திப்போம்’ - என்ன களம்?”

“பொதுவா, ரெண்டு நண்பர்களுக்குள்ளே சிந்தனைகள், ரசிக்கிற விஷயம்னு பெரும்பாலான விஷயங்கள் பொருந்திப்போகும். ஆனா, இந்தப் படத்துல ரெண்டுபேரும் வெவ்வேற மாதிரி. ஆனாலும், இவங்களுக்குள்ள ஆத்மார்த்தமான நட்பு இருக்கும். உதாரணத்துக்கு, ஒருத்தருக்குக் கறுப்பு பிடிக்கும்னா, இன்னொருத்தருக்கு வெள்ளை. ஒருத்தர் ‘தல’ ரசிகர்னா, இன்னொருத்தர் ‘தளபதி’ ரசிகர். இப்படி இருக்கிற ரெண்டுபேருக்குள்ள இருக்கிற உண்மையான நட்பைப் பற்றிதான் படம் பேசும். படத்துல ஜீவா - அருள்நிதி ரெண்டுபேரும் நெருக்கமான நண்பர்கள்தான். ஆனா, கபடின்னு வந்துட்டா, பரம எதிரியாகிடுவாங்க.

“கபடி ரெடி களமும் ரெடி!”

படத்துல ஜீவா பெயர் அசோக், அருள்நிதி பெயர் ஆனந்த். ரெண்டுபேரும் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில வேலை பார்ப்பாங்க. பிரச்னைகளைப் பேசியே டீல் பண்றது அசோக் ஸ்டைல். ஆனா, கோபம் வந்தா உடனே ஆக்‌ஷன்ல இறங்குறது ஆனந்த் ஸ்டைல். ரெண்டுபேரும் வெறித்தனமான கபடி பிளேயர்ஸ். ஊர்ல இருக்கிற ரெண்டு பெரிய கபடி டீமுக்கு ஜீவாவும் அருள்நிதியும் கேப்டன்கள். உண்மையைச் சொன்னா, என் நண்பன் அசோக் கேரக்டர்ல ஜீவாவும், என் கேரக்டர்ல அருள்நிதியும் படத்துல நடிக்கிறாங்க.”

“ரெண்டுபேருக்குமே கபடி புதுசு. எப்படி விளையாடினாங்க?”

“நாம என்ன சொன்னாலும் ‘பண்ணிடலாம் சார்; பார்த்துக்கலாம் சார்’னு சொல்லி அசால்ட் பண்ணுவார் ஜீவா. ஆனா, ‘நாம இது பண்ணுனா எப்படியிருக்கும், இது சரியா இருக்குமா இருக்காதா’ன்னு பல முறை யோசிச்சு, அதுக்கான முழு உழைப்பைப் போட்டு, சொன்னதைவிட பயங்கரமான அவுட்புட் கொடுக்கிறவர் அருள்நிதி.

“கபடி ரெடி களமும் ரெடி!”

என் நண்பர்கள்தான் இவங்களுக்குக் கபடி சொல்லிக்கொடுத்தாங்க. ரெண்டுபேருமே முறைப்படி கபடி கத்துக்கிட்டுதான் நடிச்சாங்க.”

“மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் இவங்களுக்கு என்ன ரோல், வேறு யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?”

“படத்துல மஞ்சிமா பெயர் காவ்யா. ஜீவாவுக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. ஆனா, அருள்நிதிக்கு காவ்யா மாமா பொண்ணு. பிரியா பவானி சங்கர் பெயர் சோஃபியா.

“கபடி ரெடி களமும் ரெடி!”

கிறிஸ்தவப் பெண். இவங்கதான் அருள்நிதிக்கு ஜோடி. இவங்களுக்கான காதல் ரொம்ப எமோஷனலா இருக்கும். இந்த ரெண்டு புதுக் கூட்டணிக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தவிர, ரோபோ சங்கர், பாலசரவணன், ராதாரவி எல்லோரும் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க.”

“யுவன் இசையில் பாடல்களெல்லாம் எப்படி வந்திருக்கு?”

``அசத்தலா வந்திருக்கு. படத்துல நான்கு பாடல். ஜீவா - அருள்நிதி நட்புக்கு ஒரு பாட்டு போட்டுக் கொடுத்திருக்கார், யுவன். அதை விவேகா எழுதியிருக்கார்.

“கபடி ரெடி களமும் ரெடி!”

‘என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்’ பாட்டு மாதிரி இந்தப் பாடல் நிச்சயம் கவனம் பெறும். மற்ற மூணு பாடல்களை பா.விஜய் சார் எழுதியிருக்கார்.”