பாலிவுட் திரையுலகில் நடிகை, நாடகக் கலைஞர், எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் நடிகை கல்கி கோச்சலின். இவர், தற்போது கர்ப்பமாக உள்ளார். கர்ப்ப காலத்திலும் கூட நாடக மேடை, நடிப்பு, தயாரிப்புப் பணி, பாட்காஸ்ட் பணி எனத் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார் கல்கி.
கர்ப்ப காலத்தின் எட்டாவது மாதம்வரை வேலை செய்வேன் எனத் தெரிவித்துள்ள கல்கி, குழந்தை பிறப்புக்குப் பின் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
I'm With a Child and Out of Wedlockநடிகை கல்கி கோச்சலின்
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பிலுள்ள கல்கியை, `திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெறப்போகிறார்' என ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதற்கு, `I'm With a Child and Out of Wedlock' என்ற வசனத்தைக் கூறி, சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்துள்ளார் கல்கி. ``நான் திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவள். இருந்தும், நான் குழந்தை பெறப்போகிறேன். அதனால் என்ன?" என்பதுதான் அவரின் வாதமாக இருக்கிறது!
இப்படி ட்ரோல் செய்பவர்கள் யாரும், தனக்கு நேரடியாகப் பழக்கம் இல்லாதவர்கள் என்பதால், முகம் தெரியாத இந்த நபர்களின் ட்ரோல்கள் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் சொல்லியுள்ளார் கல்கி.
கல்கிக்குத் தன்னுடைய பிரசவம், `வாட்டர் பர்த்' மூலம் நிகழ வேண்டுமென விருப்பமாம். "வாட்டர் பர்த் குறித்து நான் நிறைய தகவல்கள் தேடினேன். தேடலின் முடிவில் `சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு, பிரசவகால இடர்பாடுகளை, வாட்டர் பர்த் குறைக்கும்' என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. பனிக்குடத்தில் `அம்னியாடிக்' என்ற திரவத்தால் சூழப்பட்டிருக்கும் குழந்தை, வெளியில் வரும்போது நீர் சூழ்ந்த சூழல் அமையும்போது அதற்கு ஆக்சஜன் இடர்பாடு ஏற்படாமல் இருக்கும் என்றும் தெரிந்துகொண்டேன்.
வாட்டர் பர்த் மேற்கொள்ளும் தாய்க்கும், பிரசவத்தின்போது வலி குறைவாக இருக்குமாம். தாய் - சேய் என இருவருக்குமே பிரசவம் சௌகர்யமாக அமையும் என உணர்ந்தேன். அதனால்தான் இந்த விருப்பம்!" என்கிறார் கல்கி.