Published:Updated:

குடும்பம், பிசினஸ், தோட்டம்னு இப்பவும் பிஸியாதான் இருக்கேன்!

அருணா
பிரீமியம் ஸ்டோரி
அருணா

‘கல்லுக்குள் ஈரம்’ அருணா

குடும்பம், பிசினஸ், தோட்டம்னு இப்பவும் பிஸியாதான் இருக்கேன்!

‘கல்லுக்குள் ஈரம்’ அருணா

Published:Updated:
அருணா
பிரீமியம் ஸ்டோரி
அருணா

‘கல்லுக்குள் ஈரம்’ புகழ் அருணா, தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானவர். 30 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகியவர், குடும்ப பொறுப்பு, பிசினஸ், வீட்டுத்தோட்டப் பராமரிப்பு எனத் தனக்குப் பிடித்தமான கூட்டுக்குள் சுதந்திரமாகவும் பிஸியாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார். சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடற் கரையை ஒட்டிய பகுதியிலிருக்கும் இவரின் வீடு கடல்போல பிரமாண்ட மாகப் பரந்து விரிந்துள்ளது. தியேட்டர், ஃபிட்னெஸ் சென்டர், நீச்சல் குளம் என சகல வசதிகளுடன் கூடிய வீட்டை, மினி மியூசியம்போல நேர்த்தியாகப் பராமரிக்கிறார்.

அருணாவின் பர்சனல் பக்கங்களை அறிந்து கொள்ள அவரின் வீட்டுக்கு விசிட் அடித்தோம். குணத்திலும் பேச்சிலும் ‘கல்லுக்குள் ஈரம்’ சோலை யாகவே உள்ளம் கவர்கிறார்.

குடும்பம், பிசினஸ், தோட்டம்னு இப்பவும் பிஸியாதான் இருக்கேன்!

“ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவுக்கு வந்து, சில வருஷங்கள்லயே 80 படங்கள்கிட்ட நடிச்சேன். என்னோடது காதல் கல்யாணம். நடிச்சவரைக்கும் போதும். இனி குடும்ப வாழ்க்கையில மட்டும் கவனம் செலுத்தலாம்னு முடிவு செஞ்சேன். ஃபிட்னெஸ் உபகரணங்களுக்கான விநியோகஸ்தரா இருந்த என் கணவரின் பிசினஸ்லயும் கவனம் செலுத்தினேன். கூடவே, எங்க நாலு பெண் குழந்தைகளையும் கவனிச்சுக்குற வேலைகளை நேசிச்சு செஞ்சதால, சினிமாவுல நடிக்காத ஏக்கமே எனக்கு ஏற்படலை. அமெரிக்காவிலுள்ள ‘லைஃப் ஃபிட்னெஸ்’ங்கிற கம்பெனியோட உபகரணங்களை, இந்தியாவுக்கான டீலர்ஷிப் எடுத்து, இறக்குமதி செஞ்சு, பல மாநிலங் களுக்கும் விற்பனை செய்யுறோம். தவிர, சென்னை, ஆழ்வார்பேட்டையில் ‘ரிவோக்’ங்கிற பெயர்ல ஃபிட்னெஸ் சென்டரை நடத்துறோம். சரத்குமார் சார், துருவ் விக்ரம், ஸ்ரீப்ரியா மேடம் குடும்பத்தினர் உட்பட செலிபிரிட்டீஸ் பலரும் அந்த சென்டருக்கு ரெகுலரா வருவாங்க. ஐந்நூறு பேர் வேலை செய்யுற எங்க ரெண்டு கம்பெனிகளையும் கணவர், நான், மூத்த பொண்ணு, அவளோட கணவர்னு குடும்பமா கவனிச்சுக்கிறோம்” என்று தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் பகிர்ந் தவர், சினிமா அனுபவங்களைப் பேசியபடியே வீட்டைச் சுற்றிக் காட்டினார்.

குடும்பம், பிசினஸ், தோட்டம்னு இப்பவும் பிஸியாதான் இருக்கேன்!

இன்டீரியர், கிச்சன் பயன்பாட்டுப் பொருள்களை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்திருப்பதுடன், எதிர்காலத் தேவைகளுக்கு முன் கூட்டியே திட்டமிட்டு, ஜிம், லிஃப்ட், தியேட்டர், சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த வீட்டைப் பழைமையுடன் நவீனத்தை இணைத்து வடிவமைத்திருக் கின்றனர். வீட்டுக்குள் நுழைந்ததுமே அழகான குளம். மொட்டைமாடிக்குச் சென்றால், கடல் அலைகளைத் தொட்டுப் பார்ப்பதுபோன்ற பரவச உணர்வு. கடலின் அழகை ரசித்த படியே சமைக்கும்படியான ஹைடெக் மாடுலர் கிச்சன். பத்து பேர் வசிக்கும் வீட்டில் சமையல் வேலைகள் முழுக்கவும் அருணாவின் கைமணம்தான். கிச்சனிலிருந்த குறிப் பேடு நம் கவனத்தை ஈர்த்தது.

குடும்பம், பிசினஸ், தோட்டம்னு இப்பவும் பிஸியாதான் இருக்கேன்!

“பணியாளர்கள் பலர் இருந்தாலும், எந்தச் சூழல்லயும் சமைக்குற வேலையை மட்டும் யார்கிட்டயும் கொடுக்கவே மாட்டேன். வெஜ், நான் வெஜ்னு எல்லா வகையான டிஷ்ஷும் சமைப்பேன். எங்க வீட்டுல இரவு 10 மணிக்கு மேல யாரும் மத்தவங்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம். வெவ்வேறு துறைகள்ல வேலை செய்யுற குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரோட டயட் உணவும் மாறுபடும். அதனால, 10 மணிக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துட்டா, ஒவ்வொருத்தரும் தங்களுக்கான அடுத்த நாள் மெனுவை என்கிட்ட சொல்லிடு வாங்க. அவங்க சார்பா இந்தக் குறிப்பேடுல எழுதி வெச்சுடுவேன். அந்த நேரத்துக்குப் பிறகு வீட்டுக்கு வர்றவங்க, மறக்காம இதுல எழுதி வெச்சுட்டுப் போயிடுவாங்க. இந்த மெனு பட்டியல்படிதான் தினமும் சமையல் செய்வேன். குடும்பத்தின ரின் பிறந்தநாள், முக்கியமான தினங்களையும் இதுல நோட் பண்ணி வெச்சு, அந்த நாள்ல ஸ்பெஷல் உணவுகள் செய்வேன்.

குடும்பம், பிசினஸ், தோட்டம்னு இப்பவும் பிஸியாதான் இருக்கேன்!

உடல்நலம், மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காம எவ்வளவு பணம் சம்பாதிச்சாலும் பயன் இருக்காது. அதனாலதான், முடிஞ்ச வரைக்கும் ஆரோக்கியமான காய்கறிகளை எங்க வீட்டுத் தோட்டத்துல உற்பத்தி செய்யுறோம். வீட்டுலயே ஜிம் இருந்தாலும், வாரத்துல சில நாளாச்சும் எங்க ஃபிட்னெஸ் சென்டருக்குப் போய் வொர்க் அவுட் பண்ணுவோம். குடும்பமா நீச்சல் பயிற்சியுடன், யோகாவும் ரெகுலரா செய்வோம். ஒவ்வொரு பெட்ரூம்லயும் பீச் அல்லது கார்டன் வியூ இருக்கும். தினமும் ஒருமுறை யாச்சும் முழுக்கவே சுத்திப் பார்த்து, வீட்டுப் பராமரிப்பை உறுதி செஞ்சாதான் எனக்குத் திருப்தி. நட்பு வட்டாரத்திலேருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வப்போது எங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம், வீட்டையும் தோட்டத்தையும் தவறாம பாராட்டுவாங்க” என்கிற அருணாவின் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளிதான் இவரின் குருநாதர் பாரதிராஜா மற்றும் நடிகர் விஜய்யின் வீடுகளும் இருக்கின்றன. அருணாவை தன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க வைக்க வேண்டும் என்பது பாரதிராஜாவின் நீண்டகால ஆசையாம்.

குடும்பம், பிசினஸ், தோட்டம்னு இப்பவும் பிஸியாதான் இருக்கேன்!

“ரெண்டாவது பொண்ணு ஆர்கிடெக்ட். மூணாவது பொண்ணு வக்கீல். நாலாவது பொண்ணு எம்.பி.பி.எஸ் படிக்கிறா. நாலு பேருக்குமே சினிமாவுல நடிக்க விருப்பமில்ல. ‘நீ மறுபடியும் நடிம்மா...’ன்னு சொல்லு வாங்க. வீட்டு நிர்வாகத்தைச் சரியா கவனிக்கலைனா, அந்த நாளே எனக்கு முழுமையடையாது. அதனாலேயே, நிறைய வாய்ப்புகள் வந்தும் இப்போவரை நடிக்காம இருக்கேன். சாயந்திரம் வாக்கிங் போகும்போது, பாரதிராஜா சாரை சந்திப்பேன். ‘உன் நடிப்புத் திறமைக்கு என் டைரக்‌ஷன்ல நல்ல வாய்ப்பு கொடுக் கணும்னு ஆசைப்படுறேன்’னு அடிக்கடி சொல்லுவார். ‘நீங்க சொன்னா நிச்சயம் நடிக்கிறேன்’னு சொல்வேன். என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பார்ப்போம்” என்றவர், ஒரு வயதாகும் பேத்தி நைராவைக் கொஞ்சிய படியே புன்னகையுடன் விடைகொடுத்தார்.