`துணிவு’ ரசிகர்களின் பாராட்டுகளை அறுவடை செய்ய, புத்துணர்வுடன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அஜித்தின் ஆஸ்தான நடன இயக்குநரான கல்யாண் மாஸ்டர் இந்தப் படத்திற்கும் களமிறங்கியிருக்கிறார். அஜித்தின் பாடல்களை எல்லாம் அடித்துத் தூக்கி ஆகாயத்தில் பறக்கவிடும் கல்யாண் மாஸ்டரிடம் `துணிவு' அப்டேட்ஸ் கேட்டோம்…
"அஜித்தின் முதல் படத்திலிருந்தே நடன இயக்குநராக இருக்கிறீர்கள். உங்களுக்கும் அவருக்குமான நட்பு குறித்து?"

"அஜித் சார் ரொம்ப தன்மையான மனிதர். நாங்க தினமும் பேசிக்கொள்வது கிடையாது. ஆனா, ரொம்ப நாள் பார்க்காம திடீர்ன்னு பார்த்துக்கிட்டாக்கூட ரொம்ப கனெக்ட் ஆகிடுவோம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல நட்பு. 'உங்களுக்கு ஞாபகம் இருக்கா கல்யாண்? கல்லூரி வாசல் படத்தப்போ ஒண்ணா ரூம்ல உட்கார்ந்து வீடியோ கேம் விளையாடுவோமே! அங்கிருந்து இவ்ளோ தூரம் வந்திருக்கோம்'ன்னு நினைவுகூர்ந்து பேசுவார். நானா அவரோட படத்துல வாய்ப்பு கேட்கிறதில்ல. அது தானாவே அமைஞ்சுடுது. வெங்கட் பிரபு சார், விஷ்ணுவர்தன் சார், சிறுத்தை சிவா சார்ன்னு எல்லார்க்கூடயும் நல்ல நட்பு இருக்கு. அவங்க என் மேல வெச்சிருக்குற நம்பிக்கையின் அடிப்படையிலதான் வாய்ப்பு கொடுக்கிறாங்க. 'நாம ஒண்ணா சேர்ந்து சாங் பண்ணினா ஏதோ மேஜிக் இருக்கு. ரொம்பவே பேசப்படுது'ன்னு அஜீத் சார் சொல்லுவாரு. அவர் இப்படிச் சொல்றது எவ்ளோ சந்தோஷமான விஷயம்!"
'துணிவு' ஒரு கடத்தல் குறித்த படம்ன்னு சொல்றாங்க... அதுல டான்ஸ் எப்படி வந்துருக்கு?
"அஜீத் சாருக்குன்னு இதுல ஒரு கெத்து சாங் இருக்கு. ஃபேன்ஸ் அதை ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க. ரொம்ப ஸ்டைலிஷா இருக்கும். அதேமாதிரி, குத்து சாங்கும் ஒண்ணு இருக்கு. ரெண்டு பாட்டுக்கும் நிச்சயமா தியேட்டர்ல எகிறி குதிச்சு டான்ஸ் ஆடுவாங்க. அதேமாதிரி, ப்ரோமோ பாட்டும் ஒண்ணு இருக்கு. அதுக்கும் ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு. ஆஃப் ஸ்கிரீன்ல இப்ப என்ன கெட் அப்ல இருக்காரோ, அதேமாதிரிதான் ஆன் ஸ்கிரீன்ல இருப்பாரு. ஹீரோங்குற கெத்து இல்லாம எப்போதும்போல எல்லோர்க்கூடவும் சேர்ந்து ஒர்க் பண்ணுவாரு. அதேமாதிரி, டான்ஸுக்கு 100 சதவிகிதம் உழைப்பைக் கொட்டுவாரு. வேணாம்னு சொன்னாக்கூட ட்ரை பண்ணலாமேன்னு சொல்லுவாரு. நமக்கு எந்த விதத்திலேயும் ப்ரஷர் கொடுக்கமாட்டாரு".
பிரபுதேவா, ராஜு சுந்தரம், பிருந்தா மாஸ்டர்கள் எல்லாம் திரைப்பட இயக்குநர்கள் ஆகிட்டாங்க. நீங்க எப்போ?
"நான், நாலஞ்சு வருசமா கதை வெச்சுக்கிட்டு சுத்துக்கிட்டிருக்கேன். கரெக்டா அமையமாட்டேங்குது. த்ரில்லர், ஃபேன்டஸி, ஸ்போர்ட்ஸுன்னு மூணு ஜானர்ல கதை வெச்சிருக்கேன். எது டேக் ஆஃப் ஆகுதோ, அதை பிக் அப் பண்ணிப்பேன். பாட்டெல்லாம் நாலு நாள்னா அதுக்கான சரியான நேரத்துல முடிச்சுக் கொடுத்துடுவேன். தயாரிப்பாளர்கள் என் மேல நம்பிக்கை வைக்கணும். விரைவில் நடக்கும்ன்னு நம்புறேன்".