வெள்ளிக்கிழமை.... மங்களம் பொங்க... மனம் மகிழ... கமல்ஹாசனின் 'விக்ரம்' பட ஷூட்டிங் தொடங்கிவிட்டது. 2021 தேர்தலுக்கு பின், சினிமாவில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் மக்கள் நீதி மய்யத் தலைவர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு படங்கள் நடித்துவிடவேண்டும் என்பது உலகநாயகனின் விருப்பம்.
கடந்த ஜூலை 10-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட 'விக்ரம்' இயக்குநர் இன்று ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார். ஆழ்வார் பேட்டையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் வைத்தே முதல் நாள் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் நான்காவது படம் இது. இன்று கமல்-விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


இந்தப் படத்திலும் 'மாஸ்டர்' காம்பினேஷனான விஜய்சேதுபதி அனிருத் மற்றும் 'கைதி' நரேன், ரத்னகுமார் என பலருடன் கூட்டணி அமைத்திருக்கிறார் லோகேஷ். மலையாளத்தில் 'ஹே ஜூட்', 'ஜல்லிக்கட்டு', 'கோல்ட் கேஸ்' படங்களின் ஒளிப்பதிவாளரான கிரீஷ் கங்காதரன் விஜய்யின் 'சர்கார்' படத்திற்குப் பிறகு மீண்டும் 'விக்ரம்' மூலம் தமிழுக்கு வருகிறார்.