Published:Updated:

`இந்தியன் 2'வில் கமலுக்கு வில்லன் இவர்தான்!

தார்மிக் லீ

கமல்ஹாசன் - ஷங்கர் காம்போவில் பரபரப்பாகத் தயாராகி வருகிறது `இந்தியன் 2'. ஊழலைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்துல்களை `இந்தியன் 2' பேசப்போவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Indian 2
Indian 2 ( Kamal Haasan )

அதிக பொருள் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங் எனப் பல்வேறு நடிகர்கள் இதில் இணைந்திருந்தனர். எந்தக் காலத்துக்கும் பொருந்திப்போகும் ஊழல் பிரச்னையைப் பற்றி `இந்தியன்' முதல் பாகத்தில் பேசியிருந்தார் ஷங்கர். இதைத் தொடர்ந்து 2-ம் பாகமான இதில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அவலங்களைப் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

பாபி சிம்ஹா
பாபி சிம்ஹா
இந்தியன் 2

மேலே சொன்ன நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் விவேக்கும் இப்படக்குழுவில் சமீபத்தில்தான் இணைந்தார். ஷங்கரின் இயக்கத்தில் ஏற்கெனவே `பாய்ஸ்', `அந்நியன்', `சிவாஜி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் விவேக். அதுமட்டுமன்றி, விவேக் இளங்கோவன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கிய `வெள்ளைப்பூக்கள்' படத்தில் விவேக்கின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், படத்தின் வில்லனாகத் தற்போது பாபி சிம்ஹா கமிட்டாகியுள்ளார். இதுவரை வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது பாபி சிம்ஹாவே வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.