Published:Updated:

`சாட்சி' நரேனை கொலை செய்யத்துடிக்கும் பஹத் - விஜய் சேதுபதி' - விக்ரம் படத்தின் கதை இதுதானா?!

'' கொரோனாவால் கமல் பாதிப்புக்குள்ளானதால், அவரை தவிர மற்றவர்களின் போர்ஷன்கள் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஷூட் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஒரு மில் ஒன்றில் பரபரப்பாக நடந்து வருகிறதாம்...''

கமலின் 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் நான்காவது கட்ட படப்பிடிப்பு இப்போது கோவையில் நடந்து வருகிறது. வருகிற ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் ஏப்ரலில் விஜய்யின் 'பீஸ்ட்'டும், மணிரத்னத்தின் பிரமாண்டமான 'பொன்னியின் செல்வன்', 'கே.ஜி.எஃப்.2'வும் வரவிருப்பதால் 'விக்ரம்' படத்தை ஏப்ரலில் வெளியிடாமல் முன்கூட்டியே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

ஆனால், இதை விட முக்கியமான தகவலாக, படத்தை கதை இதுதான் என ஒரு கதை கோடம்பாக்கத்தில் சுற்றுகிறது . படத்தில் முக்கியமான சாட்சியாக (விட்னஸ்) நரேன் இருக்கிறார். அவரை விஜய்சேதுபதியும் பஹத் பாசிலும் சேர்ந்து தீர்த்து கட்ட முயல்கின்றனர்.

விக்ரம்
விக்ரம்

அண்ணன்- தம்பி, அரசியல்வாதிகளாகவும் வலம் வரும் வி.சே. மற்றும் பஹத் இருவரிடமிருந்து நரேனை கமல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள். கமல் இதில் கண் பார்வையற்றவராகவும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது, கைதி திரைப்படம்போலவே இந்தத் திரைப்பட ஒரே இரவில் நடக்கும் கதை என்றும் சொல்கிறார்கள்.

நான்காவது கட்ட பிடிப்பு இப்போது கோவையில் நடந்து வருகிறது. கொரோனாவால் கமல் பாதிப்புக்குள்ளானதால், அவரை தவிர மற்றவர்களின் போர்ஷன்கள் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஷூட் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஒரு மில் ஒன்றில் பரபரப்பாக நடந்து வருகிறதாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு