Published:Updated:

``வஞ்சப் புகழ்ச்சிதான் `ஹேராம்' படமும்!" - கமல் டீகோடிங் @ விகடன் பிரஸ்மீட்!

கமல்

இறைமறுப்பைவிட, பகுத்தறிவது முக்கியம் என்பதை என்னுடைய இவ்வளவு கால வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன். அதற்காக 'அரசியலுக்கு வந்ததும் அடிச்சார் பார் பல்டி' என இதைப் புரிந்துகொள்ளக்கூடாது

``வஞ்சப் புகழ்ச்சிதான் `ஹேராம்' படமும்!" - கமல் டீகோடிங் @ விகடன் பிரஸ்மீட்!

இறைமறுப்பைவிட, பகுத்தறிவது முக்கியம் என்பதை என்னுடைய இவ்வளவு கால வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன். அதற்காக 'அரசியலுக்கு வந்ததும் அடிச்சார் பார் பல்டி' என இதைப் புரிந்துகொள்ளக்கூடாது

Published:Updated:
கமல்

"நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரேமாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?''

- கதிரேசன்.

"அதை நாங்கள் இருவரும் அல்லவா பேசவேண்டும்! நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதில் எங்கள் இருவருக்கும் மாற்றுக்கருத்துகள் இல்லை. இருவரும் பேசி முடிவு செய்யவேண்டும்.'' விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/36FN8Xs

"நீங்கள் ஒரு நாத்திகராக அறியப்பட்டாலும், உங்கள் திரைப்படங்களில் வைணவம் சார்ந்த குறியீடுகள், பெயர்கள், தொன்மங்கள் இடம்பெறு கின்றன. என்ன காரணம்?''

- சுகுணா திவாகர்

"குணாவில் அது இருக்காது. எல்லாம் சிவனாக இருக்கும். 'அன்பே சிவம்' படத்திலும் சிவன் இருக்கும். கண்ணப்ப நாயனார் கதையில் சிவனும் புலாலும் வராமல் அதைச்சொல்ல முடியாது. 'என்னங்க இது சிவனுக்கு முன்னாடி மட்டனை வெச்சிட்டீங்களே?' என்றால், அந்தக் கதை அப்படி. நான் ஏற்கெனவே சொன்னதுதான். நோய் இல்லாமல் மருந்தைச் சொல்ல முடியாது. எம்.ஆர்.ராதா பட்டை பட்டையாக விபூதி போட்டுக்கொண்டு படத்தில் வருவார். ஆனால் அவர் சொல்லும் கருத்துகள் வேறு மாதிரியிருக்கும்.

இறைமறுப்பைவிட, பகுத்தறிவது முக்கியம் என்பதை என்னுடைய இவ்வளவு கால வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன். அதற்காக 'அரசியலுக்கு வந்ததும் அடிச்சார் பார் பல்டி' என இதைப் புரிந்துகொள்ளக்கூடாது. இது என்னுடைய பரிணாம வளர்ச்சியின் அடையாளம். இதற்கும் அரசியலுக்கும், சம்பந்தம் இல்லை. என்னுடைய பகுத்தறிவு பற்றி வெளியில் சொல்லத்தேவையில்லை. என்னுடைய புரிதல் எப்படியிருக்கிறது என்பதைத்தான் 'தசாவதாரம்' படத்தில் காட்டியிருக்கிறேன். ஓட்டு வாங்குவதற்கோ, ஒரு குலத்தின், ஒரு இனத்தின் சந்தோஷத்தை சம்பாதிப்பதற்கோ நான் பார்ப்பன விரோதி என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? என் தாயும் தகப்பனும் அதுவல்லவா! அந்தப் பொய்யெல்லாம் நான் சொல்லமாட்டேன். எனக்கு அவர்களைப் புரியும். அவர்களைத் தெரியும். ஆனால் என் பாதை வேறு.''

``வஞ்சப் புகழ்ச்சிதான் `ஹேராம்' படமும்!" - கமல் டீகோடிங் @ விகடன் பிரஸ்மீட்!

" 'ஹேராம்' படத்தை இன்றுவரை ஒரு இந்துத்துவ திரைப்படம் என்று விமர்சிக்கிறார்களே, அதுகுறித்த உங்கள் கருத்து என்ன?''

- கார்த்தி

"ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் மார்க் ஆண்டனியின் கடைசிப்பேச்சு சீஸரின் கிரீடத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்கான பேச்சு என்று யாராவது சொன்னால் என்ன செய்யமுடியும். புரூட்டஸுக்கு ஆதரவான பேச்சு என்று சொன்னால் என்ன செய்யமுடியும். ஏனென்றால், அதை மறுக்கவும் முடியாது. 'Brutus is an honurable man' என்கிற வரி அதில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும். ஒருவகையான வஞ்சப் புகழ்ச்சிதான் அது. அதேபோலத்தான் 'ஹேராம்' படமும்.

என்னுடைய மன்னிப்புக் கோரல்தான் 'ஹேராம்' படமே. ஒரு வைணவக்குடும்பத்தில் பிறந்து, பெரிய பக்திச் சூழலில் வளர்ந்த பையன் எப்படி பகுத்தறிவை நோக்கிப்போனானோ அதேபோல், காந்தி வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய என்னுடைய மன்னிப்புக்கோரல்தான் 'ஹே ராம்.'

ஒரு வாரப்பத்திரிகையில் காந்தி அவர்களின் பிறந்தநாளுக்காக ஒரு கட்டுரை கேட்டபோது 'டியர் மோகன்' என ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில் ஒரு மன்னிப்புக்கோரல் இருக்கும். '54-ல் பிறந்த ஒரு பையன்... உன்னைச் சுட்டதற்காக சாரி... உன்னுடன் உரையாட வேண்டும். மறுபடியும் மறுபடியும் உன்னைச் சந்திக்க முயற்சி செய்கிறேன். ஆனால் உன் தலைக்குப்பின்னால் இருக்கும் சூரியவட்டம் என்னைத் தெரியவிடாமல் செய்கிறது. நான் கூட்டத்தில் இருந்து கை காட்டினால் நீங்கள் என்னைப் பார்ப்பதும் எனக்குத் தெரிய வேண்டாமா? எவ்வளவு நாள்தான் உங்களுக்குத் தெரியாமல் கைகாட்டிக்கொண்டே இருப்பது. உங்களைச் சுற்றியிருக்கும் காதி கமாண்டோக்களைக் களையுங்கள். நான் உங்கள் அருகில் வரவேண்டும்' என எழுதியிருந்தேன். அதன் நீட்சிதான் 'ஹேராம்' படம்."

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"சமூக ஒழுக்க மதிப்பீட்டில் கமல் எப்போதுமே சிக்கிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் எதையெல்லாம் மறுத்தாரோ அது திருமணமோ, ஆண்-பெண் உறவோ அதையெல்லாம் பிக்பாஸ் மேடையில் பேசுவதாகத் தோன்றுகிறது. பொதுப்புத்தியில் இருக்கும் ஒழுக்க மதிப்பீடுகளைத் தற்போது பின்பற்ற ஆரம்பித்துவிட்டாரா கமல்? இது தனிப்பட்ட கமலிடம் நிகழ்ந்திருக்கும் மாற்றமா அல்லது அரசியலுக்குத் தேவை என்று மாற்றிக்கொண்டதா?"

- கார்க்கி பவா

நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்தக் குழந்தை ரயிலின் ஓரத்துக்குப்போய் விளையாடினால் 'ஏய் அங்கெல்லாம் போகக்கூடாது' என அதட்டுவது அவசியம். எனக்குப் பிள்ளைகள் விளையாடினால் பிடிக்கும்.

"தனிப்பட்ட முறையில் கமல்ஹாசன் படிப்படியாக அதே திசையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இம்மானுவேல் கான்ட் என்கிற தத்துவஞானி சொன்ன விஷயம் என் அண்ணன் வழியில் எனக்கு வந்தது. 'YOUR LIFE SHOULD BE LIVED TO THE FULLEST WITH MINIMUM DISCOMFORT TO YOUR CO HUMAN BEINGS' இதுதான் அவர் சொன்னது. அதிக சேட்டைகள் செய்யும் உங்கள் பிள்ளையை ரயிலில் அழைத்துவருகிறீர்கள். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்தக் குழந்தை ரயிலின் ஓரத்துக்குப்போய் விளையாடினால் 'ஏய் அங்கெல்லாம் போகக்கூடாது' என அதட்டுவது அவசியம். எனக்குப் பிள்ளைகள் விளையாடினால் பிடிக்கும். ஆனால் உங்களுக்கு எப்படியோ என எனக்குத் தெரியாது. அதனால் உங்கள் சார்பாகச் சொல்வதுதான் அது. மற்றபடி என்னுடைய சிந்தனைகள் முன்பு எப்படி நவீனப்பட்டிருந்தனவோ இன்னும் அதே நவீனத்துடன் என்னுள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன."

> " '16 வயதினிலே' படத்தை ரீமேக் செய்தால் பரட்டை, சப்பாணி, மயில் கேரக்டர்களில் இப்போது நடிக்க உங்கள் சாய்ஸ் யார் யார்?''

> "கமல் படத்தின் இயக்குநர் யாராக இருந்தாலும் கமல்தான் படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுவது பற்றி..?''

> "விஜய் சமீபகாலமாக அதிகம் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார். 'நான் முதலமைச்சரானால் இதையெல்லாம் செய்வேன்' என்றுகூட விளையாட்டாகச் சொல்லியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தால், உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? விஷால், சூர்யா எனப் பல நடிகர்களும் அரசியல் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் ஒரு குடைக்குள் கொண்டுவந்தால் உங்களுடைய இலக்கை அடைய இலகுவாக இருக்கும் என நினைக்கிறீர்களா?''

> "நீங்கள் சந்தித்த மிகப்பெரிய பாராட்டு, மிகப்பெரிய அவமானம் பற்றிச் சொல்ல முடியுமா?''

> "இந்திய சினிமாவில் நீங்கள் யாருடைய நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறீர்கள்? கமலின் சினிமா வாரிசு யார்?'

- இந்தக் கேள்விகளுக்கு கமல் அளித்துள்ள பதில்களை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > விகடன் பிரஸ்மீட்: "விஜய் விளையாட்டாகப் பேசியிருக்கக்கூடாது!' https://www.vikatan.com/government-and-politics/cinema/vikatan-press-meet-kamalhaasan-about-vijay

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism