Published:Updated:

‘நகைச்சுவை ஞானி' மோகன்! - கமல் கிரேஸி மோகனுக்கு புகழாஞ்சலி

அலாவுதின் ஹுசைன்

தனது நண்பர் வசனகர்த்தா கிரேஸி மோகன் மறைவுக்கு கமல் இரங்கல்

‘நகைச்சுவை ஞானி' மோகன்! - கமல் கிரேஸி மோகனுக்கு  புகழாஞ்சலி
‘நகைச்சுவை ஞானி' மோகன்! - கமல் கிரேஸி மோகனுக்கு புகழாஞ்சலி

தமிழ், நாடக சினிமா ஆளுமைகளில் தவிர்க்க முடியாத கலைஞர் நாடக ஆசிரியர், வசனகர்த்தா கிரேஸி மோகன். மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர், சினிமா என நகைச்சுவை எழுத்தால் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் கிரேஸி மோகன். எஸ். வி சேகர் நடித்த 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்ற நாடகத்தை எழுதியதன் பிறகே 'கிரேஸி' என்ற அடை மொழியுடன் கிரேஸி மோகன் என அழைக்கப்பட்டார்.

kamal, crazy mohan
kamal, crazy mohan

கிரேஸி மோகன் வசனத்தில் அதிக படங்களில் நடித்தவர் கமல் ஹாசன். மோகனின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கும் சென்றிருந்த கமல், அவரின் மறைவு குறித்து புகழாஞ்சலி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் அதில் " நண்பர் கிரேஸி மோகனிடம் பொறாமைப்படும் ஒன்று அவரது மழலை மாறாத சிரிப்பு. ‘கிரேஸி’ என்பது அவருக்கு பொருந்தாத பட்டம்; மோகன் ஒரு ‘நகைச்சுவை ஞானி’. தன்னுடைய திறமைகளை குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாக தன்னைக் காட்டிக்கொண்டார். சாரு ஹாசன் , சந்திரஹாசன், மோகன் ஹாசன் என்றூ வைத்து கொள்ளலாம் எனக் கூறியவர் மோகன்" எனக் கூறியுள்ளார்

Vikatan
கிரேஸி மோகன் மறைவு கமல் ஹாசன் புகழாஞ்சலி
கிரேஸி மோகன் மறைவு கமல் ஹாசன் புகழாஞ்சலி

உடல்நலக் குறைவால் இன்று காலை 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன், சிகிச்சை பலனின்றி மதியம் 2 மணியளவில் காலமானார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அவரது இல்லம் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அலாவுதின் ஹுசைன்