Published:Updated:

`ஏவி.எம் வேப்பமரம், முதல் ரசிகன், ரகசியப் பேச்சு!’ - ரஜினி நட்பின் சீக்ரெட்டை உடைத்த கமல்

ராஜ் கமல் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்புவிழாவில் தனக்கும் ரஜினிக்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றிப் பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்ததாள் மற்றும் சினிமா துறையில் 60 ஆண்டுகள் நிறைவு ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இன்று கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா நடந்தது. அதனுடன் மறைந்த இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்புவிழாவும் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினி, இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ் ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து போன்ற பலர் கலந்துகொண்டனர்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ``இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் (International Film Festival of India) தாமதமாகக் கௌரவித்திருந்தாலும், தக்க மனிதரை (ரஜினி) கௌரவித்துள்ளனர். தன்னைப் பற்றி நினைத்துக்கொள்ளாமல் அவர் பட்டபாடு, படத்தைப் பற்றி அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை என்னைவிடச் சற்றும் குறையாது. அவர் வேறு பாணி, நான் வேறு பாணி அவ்வளவுதான். இதை நாங்கள் 20 வயதில் ஏவி.எம்-மின் வேப்பமரத்தில் பேசி முடிவெடுத்தது. இது எங்கள் இருவரின் பாதை.

`வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி

எனக்கு அந்த இளைஞர்களை இப்போது நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது. அப்போதே அவ்வளவு தெளிவாக இருந்தார்களே என்று. இப்போது அந்தத் தெளிவு உள்ளதா என்பது தெரியவில்லை. அன்று நாங்கள் பேசியதை யாராவது ஒட்டுக்கேட்டால் மகா கர்விகள் என்று எங்களைக் குறி வைத்துத் தாக்கியிருப்பார்கள். சில காலங்கள் கடந்த பிறகு நாங்களே எங்களுக்குள் ஒரு முடிவு செய்துகொண்டோம். இனி நாம் இருவரும் நமக்குள் மிக மரியாதையாகப் பேசிக்கொள்ள வேண்டும் என்று.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

காரணம், எதிர்காலம் நமக்கு நல்ல வாழ்க்கையை அளிக்கத் தயாராக உள்ளது. நாமும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டது இன்றுவரை நீடிக்கிறது. எங்கள் ரசிகர்களாகப் பலர் மாறுவதற்கு முன்னால், எங்களின் முதல் ரசிகர்களும் விமர்சகர்களும் நாங்கள்தான். எங்களை நாங்களே மாறி மாறி விமர்சித்துக்கொள்வோம். எங்களையே நாங்கள் பாராட்டியும் கொள்வோம்; மகிழ்ந்துகொள்வோம். இது வைரமுத்துவுக்கும் பொருந்தும், மணிரத்னத்துக்கும் பொருந்தும்.

‘பலர் கேட்கலாம்... முடிவெடுக்க வேண்டியது நான்தான்!’ - முதல் பேட்டிக்கு மறுவிளக்கம் கொடுத்த ரஜினி

பலர் இங்கு வந்துதான் கற்றுக்கொண்டேன் எனக் கூறினார்கள். உண்மையில் இங்கு கற்றுக்கொள்வதற்கான எந்த வசதியும் இல்லை. யாராவது கனிந்து தன் வேலை போக கற்றுக்கொடுத்தால்தான் உண்டு. எனவே, இங்கு எல்லோரும் எல்லோருக்கும் குருதான். என்னிடம் இருந்து கற்றுக்கொண்டேன் எனக் கூறுபவர்கள் உணராமல் இருப்பது, நான் அவர்களிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். `நேற்று வந்து இவர் தெளிவாக இருக்கிறாரே' என மணிரத்னம் முதல்படம் பண்ணும்போது அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

ரஜினியும் மணிரத்னமும் இணைந்து எடுத்த `தளபதி’ படம் முடிவான பிறகு ஒரு திருமண மண்டபத்தில் என்னிடம் தலைப்பைக் கூறினார் ரஜினி. அது என் காதில் `கணபதி' எனக் கேட்டுவிட்டது. எப்படி இருக்கிறது எனக் கேட்டார். நான் நன்றாகவே இல்லை எனக் கூறிவிட்டேன். அதைக் கேட்டு அவர் வியந்துவிட்டார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் எனக் கேட்டார், பிறகுதான் சொன்னார் அது தளபதி என்று. அதைக் கேட்டு பிரமாதமாக இருப்பதாக நான் கூறினேன். இப்படி நாங்கள் பேசிக்கொள்வது அனைத்தும் மிகவும் எளிமையாக இருக்கும்.

தெளிவான புரிதலுடன் ரஜினி - கமல்... வீணாகும் பி.ஜே.பி-யின் `விருது' அரசியல்!

ஒரு படம் வெற்றி, தோல்வியின்போது நாங்கள் பேசிக்கொள்வதைக் கேட்டால் இவ்வளவு தானா என நினைப்பீர்கள். ஆனால் எங்கள் ரசிகர்கள், நாங்கள் தனியாக இருக்கும்போது என்ன பேசுவோம் எனக் கேட்டால் வியந்துபோவார்கள். அவர்கள்தான் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள், நாங்களும் அதை அப்படியே விட்டுவைத்துவிட்டோம். ஏனென்றால் இரண்டு கோல் போஸ்ட்டுகளாக எங்களை வைத்து நடுவில் அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். கோல் போஸ்ட் இருந்தால் தான் போட்டி சந்தோஷமாக இருக்கும். ஒருநாள் ரஜினி என்னிடம் வந்து, `இது எனக்குப் பிடிக்கவில்லை. நான் திரைத்துறையை விட்டுச் செல்கிறேன்' எனக் கூறினார். நீங்கள் அப்படிச் செய்தால் நடப்பதே வேறு. நீங்கள் சென்றால் என்னையும் போகச்சொல்வார்கள் வேண்டாம் எனக் கூறினேன். அதனால் அவரின் பல வெற்றிப் படங்களில் எனக்கும் பங்கு உண்டு.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

சினிமா துறையில் பொறாமை, கோபம், அவமரியாதை எனப் பல உள்ளன. இவை இருந்தாலும் என்னையும் ரஜினியையும் பிரிக்க முடியாது. யார் எங்களைப் பற்றிக் குறை சொன்னாலும் அதை நம்பாமல் நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்வோம். அதனால் பிறர் பேசுவதைக் காதில் போட்டுக்கொள்ளமாட்டோம். வெளியில் உள்ளவர்கள் இதை அறிந்த பிறகு அவரைப் பற்றி என்னிடம் கூறுவதும், என்னைப் பற்றி அவரிடம் குறை கூறுவதும் குறைந்துவிட்டது.

என் போனில் இருந்து அழிக்கமுடியாத சில தொலைபேசி எண்களில் பாலசந்தர் எண்ணும் ஒன்று. அவரின் சிலையை என் அலுவலகத்தில் நிறுவியது பெரு மகிழ்ச்சி. நான் தினமும் அலுவலகம் வரும்போது அவர் என்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்ற பயம் எனக்கு இருக்கும். என் பிறந்தநாளைவிட ராஜ்கமல் நிறுவனத்தின் நிகழ்ச்சியைத்தான் நான் அதிகம் கொண்டாடுவேன். விரைவில் ராஜ்கமல் நிறுவனத்தின் ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு பிரமாண்டமாக அறிவிக்கப்படும்” எனப் பேசிமுடித்தார் கமல்.