Published:Updated:

'சபாஷ் நாயுடு' டிராப்; 'தலைவன் இருக்கின்றான்' ஷூட்டிங் ஸ்டார்ட்!

எம்.குணா

'சபாஷ் நாயுடு' படத்துக்குப் பதிலாக, 'தலைவன் இருக்கின்றான்' படம்.

Kamal, AR Rahman
Kamal, AR Rahman ( Twitter/@arrahman )

பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் 'இந்தியன் 2' தயாரிப்பு விஷயத்தில் நீண்ட நாள்களாகப் பனிப்போர் நடந்துவந்தது. கடந்த 21-ம் தேதி நடந்த 'காப்பான்' இசை வெளியீட்டு விழாவுக்கு ஷங்கரும் சுபாஷ்கரனும் சேர்ந்துவர, சினிமா பிரபலங்கள் மூக்கின்மேல் கை வைத்து ஆச்சர்யத்தோடு பார்த்தனர். அடுத்து, கமலுக்கும் லைகாவுக்கும் மனக்கசப்பு என்றொரு செய்தி உலா வந்தது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் கமல் எடுத்த போட்டோவுடன், லைகா தயாரிப்பில் 'தலைவன் இருக்கின்றான்' திரைப்படம் உருவாகிறது என்று வெளிவந்த செய்தி, எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 'இந்தியன் 2' திரைப்படத்தின் ஷூட்டிங், ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருக்கிறது.

அதுசரி, ஏற்கெனவே கமல் இயக்கத்தில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்த 'சபாஷ் நாயுடு' படத்தின் நிலை என்ன? என்ற கேள்வியை சினிமா உலகின் முக்கியப் புள்ளியிடம் முன் வைத்தோம். ''கமல் இயக்கி நடித்த 'சபாஷ் நாயுடு' படத்தை லைகா தயாரித்தது. தற்போது அந்தப்படம் டிராப். அதற்குப் பதிலாக, 'தலைவன் இருக்கின்றான்' படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். முதல் பிரின்ட் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்துக்கு 80 கோடி பட்ஜெட் என்று திட்டமிட்டுள்ளனர்.

கமல்
கமல்

'சபாஷ் நாயுடு' டிராப் ஆனதற்காக 30 கோடி கழித்துக்கொண்டு, 50 கோடி கமலுக்குத் தருவதற்கு லைகா நிறுவனம் ஒப்புக்கொன்டிருக்கிறது. ஆக, 'சபாஷ் நாயுடு' படத்தை டிராப் செய்யும் கமல், 'தலைவன் இருக்கின்றான்' படத்தைத் தொடங்க இருக்கிறார். வழக்கமாக, ஒரு படத்தை உருவாக்க இரண்டு வருடம் எடுத்துக்கொள்வார். 'தலைவன் இருக்கின்றான்' திரைப்படத்தின் ரிலீஸ் 'இந்தியன் 2' படத்துக்கு முன்பா, பின்பா என்பது இன்னும் முடிவாகவில்லை.