Published:Updated:

"கே.பியும், பாக்யராஜும் அங்க மறைத்து வைத்திருந்த சில சூத்திரத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க!" - கமல்

சந்தோஷ் நாராயணன், ஷங்கர், கமல், பார்த்திபன்

பார்த்திபனுடைய `ஒத்த செருப்பு' படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வு

"கே.பியும், பாக்யராஜும் அங்க மறைத்து வைத்திருந்த சில சூத்திரத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க!" - கமல்

பார்த்திபனுடைய `ஒத்த செருப்பு' படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வு

Published:Updated:
சந்தோஷ் நாராயணன், ஷங்கர், கமல், பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் `ஒத்த செருப்பு சைஸ் 7'. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியராக விவேக், ஒளிப்பதிவளராக ராம்ஜி, சவுண்ட் டிசைனராக ரசூல் பூக்குட்டி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். படத்திற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைதுறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக, கே.பாக்யராஜ், கமல்ஹாசன், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, ஏ.எல்.விஜய், போன்றவர்கள் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

முதலில் பேசிய ஷங்கர், ``எந்தவொரு நிகழ்வுக்கும் வித்தியாசமான முறையில் அன்பளிப்பைக் கொடுக்கக்கூடிய நபர் பார்த்திபன். அவருடைய சினிமா வாழ்க்கையில் 25 வருடம் கடந்து மத்தவங்களையும் சந்தோஷப்படுத்திட்டிருக்கார். `ஒத்த செருப்பு' படத்துல நிறைய பேர் வேலை பார்த்திருக்காங்க. கதைக்கு பொருத்தமான ஒளிப்பதிவை ராம்ஜி செய்திருக்கிறார். பாடலாசிரியர் விவேக் ரொம்ப சூப்பரா எழுதக்கூடியவர். சந்தோஷுடைய இசையைக் கேட்டாலே இதை இவருடையதுதான்னு சொல்லிடலாம். ஆனா, இந்தப் படத்துல ரசூல் பூக்குட்டி வொர்க் பண்ணியிருக்கார்னு நினைக்கும்போது ஆச்சர்யமா இருந்தது. ஒரு புது அனுபவம் கிடைக்கப் போகுதுனு ஃபீல் பண்ணினேன். படத்துக்காகக் காத்திருக்கேன்'' எனப் பேசி முடித்தார்.

ஷங்கரைத் தொடர்ந்து பார்த்திபனின் குருவான பாக்யராஜ் பேசினார். அவர், ``எனக்கு இதுல பார்த்திபனைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி. பார்த்திபன் என்னோட சிஷ்யன் அப்படிங்குறதுனால இல்லை. அவர் நிறைய விஷயங்களில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருந்திருக்கார். இந்த விழாவின் தொடக்கத்தில் `ஒத்த செருப்பு' எந்த மாதிரியான ஜானர்ங்கிறதை எடுத்துச் சொல்ல நிறைய  போஸ்டர்களைக் காட்டினாங்க. அதில் எனக்கு ஒரே ஒரு படம் மட்டும்தான் தெரிஞ்சது. உதவி இயக்குநரா நான் முதலில் வேலை பார்த்த படம் `பதினாறு வயதினிலே'. என்னோட அதிர்ஷடம் அந்தப் படத்துல, ரஜினி, கமல், ஶ்ரீதேவினு எல்லோரும் இருந்தாங்க. `சப்பாணி அவனுடைய கல்யாணதுக்காக மாலை வாங்கிட்டு சந்தைக்குப் போயிட்டு வர்ற மாதிரியான காட்சி வரும். எங்க டைரக்டர் இந்தக் காட்சியை மைசூரில் படமாக்கிட்டிருந்தார். ஷாட் ரெடி ஆகிடுச்சு அப்போ கமல்கிட்ட போய், `சார் சும்மா நடந்து வராதீங்க. ஏதாவது பாட்டு பாடிட்டு வாங்க'னு சொன்னேன். `தீடீரென்னு சொன்னா என்னய்யா பாடுறது'னு கேட்டார். அப்புறம், டைரக்டர் டேக்னு சொன்னவுடனே, `கமல் ரெண்டு அடி நடந்து வந்து பாடினார்'. எங்க டைரக்டர் என்னை திரும்பிப் பார்த்தார். டேக் முடிஞ்சதும், `உங்க ஆளுதான் திடீரென்னு பாடச் சொன்னார். உங்களைவிட இந்தாள் படத்துக்காக நிறைய யோசிக்கிறார்'னு கமல், பாரதிராஜா சார்கிட்ட சொன்னார். பழைய விஷயத்தை நான் சொல்றப்போ சிலர் கதை விடுறார்னு நினைப்பாங்க. அதுக்காகத்தான் கமலை பக்கத்துல வெச்சிக்கிட்டே சொல்றேன்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``உதவி இயக்குநர்கள்லாம், `நம்ம உதவி இயக்குநர் மட்டும்தானே'னு தயவுசெஞ்சு நினைக்காதீங்க. அந்தப் படத்துடைய இயக்குநர் நம்மதான்னு நினைச்சு வொர்க் பண்ணுங்க. எனக்கு அப்படி கிடைச்ச ஒரு ஆள்தான் பார்த்திபன். நான் தூங்குற நேரத்துலகூட என் படத்துக்காக பார்த்திபன் யோசிப்பார். எல்லோருக்கும் அப்படி அமையாது. `சின்ன வீடு' படத்துல ஒரு காட்சிக்காக ரொம்ப யோசிட்டிருந்தேன். அப்போ பார்த்திபன், `மாமா உங்க தோள்ல தொங்குற துண்டு அளவுக்கு எனக்கு தகுதி இல்லனாலும், கால்ல போடுற செருப்புளவுக்கு இருப்பேன்'னு கல்பனா கேரக்டர் பேசினா நல்லாயிருக்கும்'னு சொன்னார். படத்துல அதுவும் வந்தது. உதவி வசனம் `பார்த்திபன்'னு கிரெட்டிட் கொடுத்தேன்" எனப் பேசி முடித்தார்.

கமல் பேசும்போது, "`புதிய பாதை' படத்துல நடிக்கிறதுக்கா பார்த்திபன் என்கிட்ட கேட்டிருந்தார். அப்போ எனக்கு கால்ஷீட் பிரச்னை இருந்ததால நடிக்க முடியலை. நல்ல வேலை, அதை அவருக்காக விட்டு வைத்துவிட்டேன். அவர் நடிப்பில் `புதிய பாதை' படத்தைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. `பதினாரு வயதினிலே' படத்துல பாக்யராஜ் நாட்டு வைத்தியரா வருவார். அப்போ எனக்குத் தெரியாது, `பின்னாளில் தமிழ் சினிமாவுக்கே இவர் நாட்டு வைத்தியரா வருவார்'னு. அதே மாதிரிதான் `ஜென்டில் மேன்' படத்துகாக பிரசாத் லேப்பில் நானும், ஷங்கரும் சந்திச்சோம். அப்புறம் அது நடக்கமாப் போயிடுச்சு. இப்போ `ஒத்த செருப்பு' படத்தை, பார்த்திபன் பண்ணியிருக்கார். என்னோட ஃபேவரைட் நடிகர் Tom Hardy வரிசையில் பார்த்திபனும் சேர்ந்துட்டார். வாழ்த்துகள் வளர்க்கிற அளவுக்கு தன்னம்பிக்கை வளர்க்காது. அவரை எல்லோரும் வாழ்த்திட்டே இருக்கணும். பார்த்திபன் எனக்கு காந்தியுடைய வரலாற்று புத்தகம் கொடுத்தார். திரும்பத் திரும்ப அந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டிருக்கேன்.  

படத்தைப் பத்தி மட்டும்தான் பேசணும்னு நினைச்சேன். ஆனா அரசியல்வாதிகள் எல்லா மேடையும் தன் மேடையா மாத்திப்பாங்க. இது என் குடும்பத்தின் மேடை. இதை அரசியலாக்க மாட்டேன். பார்த்திபன் பற்றி எல்லோரும் சொன்னது சரிதான். எஸ்.பி.முத்துராமன் சார் எல்லோருடைய விழாவையும் தன் விழாவாக எடுத்து நடத்துவார். அந்த வரிசையில அடுத்ததா பார்த்திபனை நினைக்கிறேன். உங்களுக்கு அடுத்த தலைமுறை இளைஞர்களும் இதைச் செய்ய வேண்டும். `ஒத்த செருப்பு' இன்னும் பார்க்கலை. பார்க்க வெயிட் பண்ணிட்டிருக்கேன். பார்த்திபன் இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கார். எனக்குப் பிடிச்சதை சொல்லணும்னுதான் நானே தயாரிப்பாளர் ஆனேன். ஹீரோ அப்போதான் என் பாக்கெட்டில் இருப்பான். டெக்னீஷியனா இருக்கும்போது சின்ன ஈகோவால் ஷூட்டிங் தாமதம் ஆகுறதைப் பார்த்து வயிறு எரியும். கே.பி.சாரும், கே.பாக்யராஜ் சாரும் அவங்களுடைய உதவி இயக்குநர்களுக்கு மறைத்து வைத்திருந்த சூத்திரத்தைக் கத்துக் கொடுத்தாங்க. அது, 'உன்கிட்ட ஏதாவது இருந்தா சொல்லு'னு கேட்டு வாங்குறது. அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு பாக்யராஜ் சார்!'' என்றார் கமல்.