Published:Updated:

"அவர் நலமுடன் இருக்கிறார்; தவறான செய்தியைப் பரப்பாதீர்கள்" - கமீலா நாசர்

நாசர்

நாசர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் பரவியது. நாசருக்கு என்ன நேர்ந்தது? எப்படி இருக்கிறார்? என அவரின் மனைவி கமீலா நாசரிடம் பேசினோம்.

Published:Updated:

"அவர் நலமுடன் இருக்கிறார்; தவறான செய்தியைப் பரப்பாதீர்கள்" - கமீலா நாசர்

நாசர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் பரவியது. நாசருக்கு என்ன நேர்ந்தது? எப்படி இருக்கிறார்? என அவரின் மனைவி கமீலா நாசரிடம் பேசினோம்.

நாசர்

நடிகர், இயக்குநர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமையாளர் நாசர். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடந்த படப்பிடிப்பின்போது அவர் கீழே விழுந்து காயமடைந்தார் என்றும், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் பரவியது. நாசருக்கு என்ன நேர்ந்தது? எப்படி இருக்கிறார்? மருத்துவமனையில் இருந்து அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் என நாசரின் மனைவி கமீலா நாசரிடம் கேட்டோம். நாசர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து போன்ற உண்மையற்ற செய்திகளால் வருத்தத்தோடு நம்மிடம் பேசினார் கமீலா நாசர்.

கமீலா நாசர்
கமீலா நாசர்

''ரொம்ப நல்லா இருக்கார். படப்பிடிப்பு நடந்த இடத்துல ஒரு பாசி படர்ந்த பாறை ஒன்றில் அவர் கால் இடறி கீழே விழுந்துவிட்டார். கை, கால், கண்ணுக்கு பக்கத்துலனு சின்னச் சின்ன சிராய்ப்புகள் ஆகிடுச்சு. உடனே மருத்துவமனைக்கு போனோம். சின்ன சிராய்ப்புகள்தான் என்பதால் தையல் போடத்தேவையில்லை என மருத்துவர்கள் சொன்னதுடன், டி.டி ஊசி மட்டும் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் எனச் சொல்லிவிட்டார்கள். டி.டி போட்டதும் மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டோம். இதற்கிடையே அவர் ஐசியூ -வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் செய்தி பரவியது வேதனையாக இருந்தது. அவர் நலமாக இருக்கார். இன்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். எனவே தவறான செய்தியை பரப்பாதீர்கள்'' என்றார் கமீலா.