Published:Updated:

ஜெயலலிதாவாக கங்கனா!- `தலைவி' ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

`தலைவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க கட்சியில் நடந்த போட்டாபோட்டிகளைவிட அவரது பயோபிக் படத்தை எடுப்பதற்குப் போட்டி போட்டுக்கொண்டு கோலிவுட் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். மேலும், கெளதம் மேனன் ஜெயலலிதா பயோபிக்கை வெப்-சீரீஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.

நான்கு கெட்டப்பில் கங்கனா; ஹாலிவுட் கலைஞர் மேக்அப்! - `தலைவி' அப்டேட்ஸ்

அதேபோல் இயக்குநர் விஜய் இப்படத்தை இயக்குவதாகத் தகவல் வெளியானதோடு, படத்தின் பணிகளும் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டன. முதலில், ஜெயலலிதாவாக வித்யா பாலன் நடிப்பதாக இருந்தது. பின், அவருக்கு கால்ஷீட் பிரச்னைகள் இருந்ததால், கங்கனா ரனாவத் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். `தலைவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் `தலைவி’ எனப் பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது ஃபர்ஸ்ட் லுக்.