Published:Updated:

தேசிய விருது பெற்ற முதல் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்... 37 வயதில் அகால மரணம்!

கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்

தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

தேசிய விருது பெற்ற முதல் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்... 37 வயதில் அகால மரணம்!

தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

Published:Updated:
கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்

2020 மற்றும் 2021 பல திரைக் கலைஞர்களை நம்மிடம் இருந்து பிரித்திருக்கிறது. பாலிவுட்டில் ரிஷி கபூர், சுஷாந்த் சிங்... தமிழில் எஸ்.பி.பி, இயக்குநர் ஜனநாதன், விவேக், கே.வி.ஆனந்த் தொடங்கி எண்ணற்ற கலைஞர்கள்... மலையாளத்தில் இயக்குநர் சச்சி, நாரணிபுழா ஷாணவாஸ் என ஒவ்வொரு சினிமா துறையில் இருந்து அடிக்கடி இறப்பு செய்திகள் நம்மை வந்தடைகின்றன. இந்நிலையில் நேற்று கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் விபத்தில் உயிரிழந்த செய்தி கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கன்னட திரை பிரபலங்கள், கர்நாடக முதலமைச்சர் ஆகியோர் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சஞ்சாரி விஜய்... 2011 கன்னட சினிமாவில் அறிமுகமானவர். அப்பா நடிகர், அம்மா பாடகி என இருவரும் சினிமா துறையில் இருந்தாலும் இவர் பொறியியல் படித்து முடித்துவிட்டு கல்லூரி பேராசியராக பணியாற்றி வந்தார். திடீரென நடிப்பு மீது ஆர்வம் வர, சஞ்சாரி நாடகக் குழுவில் இணைந்து நடிப்பு கற்றுக்கொண்டு சினிமாவில் களமிறங்கினார். 'ரங்கப்பா ஹோக்பிட்னா' என்ற படத்தில் அறிமுகமானவர் ஆரம்பத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பிரகாஷ் ராஜ் இயக்கிய 'ஒக்கரனே' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்
கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்

ட்ரைலிங்குவலாக உருவான இந்தப் படம் தமிழில் 'உன் சமையலறையில்' என்ற பெயரில் வெளியானது. 'ஹரிவு' என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து அந்தப் படம் கவனம் பெற, அடுத்தடுத்து இவரை நாயகனாக வைத்து படங்கள் வந்தன. 'நான் அவனல்ல... அவளு' என்ற படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இதில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது மட்டுமல்லாது அந்த வருடத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் முதல் கன்னட நடிகர் இவர்தான். இந்தப் படம் 'லிவிங் ஸ்மைல்' வித்யா எழுதிய 'I am Vidhya' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து வெளியான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருடத்திற்கான தேசிய விருது மட்டுமல்லாது கர்நாடக மாநில அரசு கொடுக்கும் விருது, ஃபிலிம்ஃபேர் என விஜய்க்கு விருதுகள் குவிந்தன.

ராம் கோபால் வர்மா இயக்கிய 'கில்லிங் வீரப்பன்' கதையில் STF போலீசாக நடித்திருந்தார் சஞ்சாரி விஜய். அதன் பிறகு, நாயகனாக தேசிய விருது வாங்கிவிட்டோம் என்பதால் இனி தொடர்ந்து கதாநாயகனாகதான் நடிப்பேன் என்றில்லாமல் எல்லா கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'ACT 1978'. தவிர, இவர் நடித்த மூன்று படங்கள் தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் இருக்கின்றன.

கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்
கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்

மருந்துகள் வாங்குவதற்காக தன்னுடைய நண்பரோடு பைக்கில் சென்றபோது, சறுக்கி கீழே விழுந்திருக்கிறார். அப்போது அவரது தலை அருகிலிருந்த மின்விளக்கு தூணில் மோத நினைவிழந்திருக்கிறார். பின், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு அவருக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. பிறகு, அவரது குடும்பத்தார் ஒப்புதலோடு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. 37 வயதில் அவருக்கு இப்படியொரு நிலை வந்திருக்கக்கூடாது என அவரோடு பணியாற்றிய பலரும் அவரின் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உடல் இல்லையென்றாலும் மற்றவர்களுகுக்கு கொடுத்த உறுப்புகளால் என்றும் அவர்கள் மூலம் சஞ்சாரி விஜய் உயிரோடுதான் இருப்பார்.