Published:Updated:

``கன்னடத்தில் மட்டுமே படம் எடுக்க விரும்புறேன்" - `காந்தாரா' பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி

ரிஷப் ஷெட்டி

இயக்குநர் ரிஷப் ஷெட்டி, தனக்குக் கன்னட மொழியில் மட்டுமே படம் எடுக்க விரும்பம் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் `காந்தாரா'. ரிஷப் ஷெட்டி, இப்படத்தை இயக்கி, நடித்தும் இருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, தனக்குக் கன்னட மொழியில் மட்டுமே படம் எடுக்க விரும்பம் என்று தெரிவித்திருக்கிறார்.

'காந்தாரா'
'காந்தாரா'

இது பற்றி பேசியுள்ள அவர், ``தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பலரிடமிருந்து படம் பண்ணுவதற்காக அழைப்புகள் வந்தன. ஆனால், நான் கன்னடத்தில் மட்டுமே படம் எடுக்க விரும்புகிறேன்" என்றார். மேலும், ``பி.காம் முடிந்து இரண்டு முறை எம்பிஏ முயற்சி செய்தும் அதை முடிக்க முடியவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.