Published:Updated:

அமலா பால் நடிக்கும் `ஆடை' பட டீசர்!

அறிமுக இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அமலா பாலை வைத்து ஹீரோயின் சென்ட்ரிக் படமொன்றை இயக்குவதாக தகவல்கள் வந்தன. 'ஆடை' என்ற பெயருடன் வெள்ளை நிற கந்தல் துணியுடன் அமலா பால் கதறி அழுவது போல இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால், அந்த சுதந்திரத்துக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதை த்ரில்லர் ஜானரில் எடுத்துள்ளார், இயக்குநர் ரத்னகுமார்.

ஆடை - அமலா பால்
ஆடை - அமலா பால்

விவேக் பிரசன்னா, பிஜிலி ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'மேயாத மான்' படத்திற்கு இசையமைத்த பிரதீப் குமார்தான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு