Published:Updated:

ஃபேஸ்புக் நட்பழைப்பில் துளிர்த்த கார்த்திக் நேத்தாவின் காதல் கதை! #VikatanDiwaliMalar2019

'96' படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் ஃபேஸ்புக்ல எனக்கு நிறைய பேர் நட்பழைப்பு விடுத்திருந்தாங்க.

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா

பலரின் காதல் நாஸ்டாலஜியைத் துளிர்க்கவைத்த கவிஞர் கார்த்திக் நேத்தாவின் காதல் திருமணம் முடிந்த சில தினங்களில், அவரை அவர் குடும்பத்தினருடன் சந்தித்தோம்.

''கார்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எங்க எல்லாருக்கும் அவ்வளவு சந்தோஷம்ப்பா. கல்யாணமே பண்ணிக்காம இருந்திடுவானோன்னு நினைச்சோம். 'கல்யாணம்லாம் வேணாம்'னு சொல்லிட்டுத் திரிஞ்சவன்... அவன் 'லவ் மேரேஜ்' பண்ணிக்கிட்டதுலதான் எங்களுக்கு அதிக சந்தோஷமே...'' என்றபடி மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் கார்த்திக் நேத்தாவின் அம்மா ஜெயமணி. அவர் கூறியதை மொத்தக் குடும்பத்தினரும் தலையசைத்து ஆமோதித்தார்கள்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

ஃபேஸ்புக் நட்பழைப்பில் துளிர்த்த கார்த்திக் நேத்தாவின் காதல் கதை! #VikatanDiwaliMalar2019

''எங்க குடும்பத்துல எல்லாருமே காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கதான். நான், என் மூத்த பையன் அசோக் பிரசன்னா, கடைசிப் பையன் விவேக் பிரசன்னா எல்லாருடைய கதைகளுமே காதல் கதைகள்தான். இப்போ கார்த்திக் பிரசன்னாவுக்கும் (கார்த்திக் நேத்தா) காதல் கல்யாணம்'' என்கிறார் பிரசன்னாக்களின் அப்பா இரத்தினம். 1978-ம் ஆண்டு சாதிப் பிரச்னைகளை எதிர்கொண்டு தன் காதலியைக் கரம்பற்றியவர்.

''யார் முதல்ல காதலைச் சொன்னீங்க... சொல்லுங்க கவிஞரே...'' என்று குடும்பத்தினர் கார்த்திக் நேத்தாவுக்கு 'கேள்வி ட்யூன்' கொடுக்க பதிலெழுதினார் கார்த்திக் நேத்தா.

'' '96' படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் ஃபேஸ்புக்ல எனக்கு நிறைய பேர் நட்பழைப்பு விடுத்திருந்தாங்க. ஆனா, இவங்களோட முகநூல் விவரக்குறிப்பு பார்த்துட்டு நான்தான் இவங்களுக்கு நட்பழைப்பு கொடுத்தேன். இவங்க புகைப்படம் பார்த்தப்பவே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. 'சரி, பேசிப் பார்ப்போமே'ன்னு பேசினப்போதான் தெரிஞ்சது, இவங்க '96' படமே பார்க்கலைங்கிறது. என்னை யாருன்னே இவங்களுக்குத் தெரியலை. நான் பாடலாசிரியர். இவங்க தமிழ் ஆசிரியை. தமிழ் படிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சதும், இவங்களைத்தான் திருமணம் பண்ணிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'லவ்'வெல்லாம் சொல்லலை. 'கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு கேட்டேன். 'யோசிச்சுச் சொல்றேன்'னு சொன்னாங்க. மறுநாள் 'சரி'ன்னு சொல்லிட்டாங்க. திருமணம் பண்ணிக்கிட்டோம். அவங்ககிட்ட பேச ஆரம்பிச்சு நாலு மாசம்தான் ஆகுது. நிச்சயதார்த்தம் பண்ணினப்போதான் முதல் தடவை நேர்ல சந்திச்சோம். எங்க ரெண்டு பேரைவிட எங்க ரெண்டு குடும்பமும்தான் அதிகமா பேசிக்கிட்டாங்க. இனிமேதான் நிறைய காதலிக்கணும்'' - தன் காதல் கதையைக் கண்கள்விரிய கார்த்திக் நேத்தா சொல்ல ''காதலிப்போம்'' என்று வழிமொழிந்தார் கீதா.

ஃபேஸ்புக் நட்பழைப்பில் துளிர்த்த கார்த்திக் நேத்தாவின் காதல் கதை! #VikatanDiwaliMalar2019

- அண்ணனின் வெற்றி குறித்துப் பெருமிதப்படும் நடிகர் விவேக் பிரசன்னா, 'லைஃப் ஆஃப் கார்த்திக் நேத்தா' பகிரும் அசோக் பிரசன்னா, வாய்ப்புத் தேடி அலைந்தது முதல் '96' கொடுத்த வெற்றி வரை பூரிப்புடன் பகிரும் கார்த்திக் நேத்தா... முழுமையான வாசிப்புக்கு விகடன் தீபாவளி மலரை நாடலாம்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1