Published:Updated:

``இவங்களையெல்லாம் இனி நடிக்க வைக்கவே கூடாது!'' - யாரை சொன்னார் கார்த்திக் சுப்புராஜ்?!

கார்த்திக் சுப்புராஜ் குடும்பம்

"எப்படியோ பையன் கார்த்திக் சுப்புராஜ் படத்துல நடிச்ச பிறகு 'முண்டாசுப்பட்டி’ மாதிரியான படங்கள்ல என்னுடைய ரோல் கவனிக்கப்பட்டு இன்னைக்கு தமிழ் சினிமா என்னையும் ஒரு நடிகனா ஏத்துக்கிடுச்சுன்னு நினைக்கிறேன்."

``இவங்களையெல்லாம் இனி நடிக்க வைக்கவே கூடாது!'' - யாரை சொன்னார் கார்த்திக் சுப்புராஜ்?!

"எப்படியோ பையன் கார்த்திக் சுப்புராஜ் படத்துல நடிச்ச பிறகு 'முண்டாசுப்பட்டி’ மாதிரியான படங்கள்ல என்னுடைய ரோல் கவனிக்கப்பட்டு இன்னைக்கு தமிழ் சினிமா என்னையும் ஒரு நடிகனா ஏத்துக்கிடுச்சுன்னு நினைக்கிறேன்."

Published:Updated:
கார்த்திக் சுப்புராஜ் குடும்பம்
``மருந்து கம்பெனி நடத்திக்கிட்டிருக்கிற குடும்பம் எங்களுடையது. டைரக்‌ஷன், நடிப்பு, தயாரிப்புன்னு சினிமாவுல இறங்கி இன்னைக்கு ஒரு கலைக்குடும்பமா மாறியிருக்கோம்னா, என்னுடைய அப்பா அம்மாவின் ஆசிதான் காரணம்னு நம்புறேன்.’’ - 'முண்டாசுப்பட்டி' முதல் தற்போது ரிலீஸாகக் காத்திருக்கும் ’ஜகமே தந்திரம்’ வரை நடிப்பில் சுமார் 50 படங்களைக் கடந்துவிட்ட கஜராஜிடம் பேசினேன். கஜராஜ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா.

‘’ரஜினி படங்கள் மூலமாகத்தான் சினிமா என் குடும்பத்துக்கு அறிமுகமாச்சு. தீவிரமான ரஜினி ரசிகன். அவரோட ஒரு படத்தைக்கூட நான் மிஸ் பண்ணதில்லை. ’தங்க மகன்’ படத்துக்கு என் குடும்பத்துக்காகவே தனியா ஒரு ஷோ எடுத்தேன். படம் பார்க்குற பருவத்துக்கு பையன் (கார்த்திக் சுப்புராஜ்) வளர்ந்ததும் அவனையும் கூட்டிக்கிட்டே தியேட்டருக்குப் போவேன். இப்படி சினிமாவை ஊட்டி விட்டதாலோ என்னவோ ஸ்கூல் படிக்கிறப்பவே ஸ்டேஜ் டிராமாவுல அவனுக்கு ஆர்வம் வந்துடுச்சு.

கஜராஜ் மனைவியுடன்
கஜராஜ் மனைவியுடன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஜினீயரிங் படிச்சான். கேம்பஸ்ல செலக்ட் ஆகி கை நிறையச் சம்பளத்துல வேலை கிடைச்சு சேர்ந்துட்டான். அப்பதான் `நாளைய இயக்குநர்’ ஷோ வந்தது. அது மூலமா சினிமாவுக்குள் வந்து இன்னைக்கு ஒரு முன்னணி இயக்குநரா வளர்ந்திருக்கான்.

டிரவுசர் போட்டுத் திரிஞ்ச காலத்துல அவனை நான் ரஜினி படத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனப்பலாம், ஒருநாள் இதே சூப்பர் ஸ்டார் படத்தை அவன் இயக்க, அதுல நானும் நடிப்பேன்னு நினைச்சுகூடப் பார்த்திருப்பேனா? ‘பேட்ட’ படத்துல அந்த அதிசயம் நடந்தது. மகன் தந்தைக்காற்றும் நன்றியா அதைச் சொல்வேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறும்படம் இயக்கிக்கொண்டிருந்த காலத்துலயே ‘ஒரு கேரக்டர் இருக்குப்பா, நீங்க நடிக்கிறீங்களா’னு கேட்டு நடிக்க வச்சான். அப்படி ரெண்டு படத்துல நம்ம மூஞ்சி தெரிஞ்சிட்டாத்தான் போதுமே, நமக்கும் ஆசை வந்துடாதா? அவன் சினிமாவுக்கு வந்த பிறகு, நானே வாய்விட்டு வாய்ப்புக் கேட்கத் தொடங்கிட்டேன். அதேநேரம் நச்சரிக்க மாட்டேன். ஒரு இயக்குநரா அவனுடைய சுதந்திரம் எனக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா என்னுடைய அப்பா எனக்கு அந்த மாதிரி சுதந்திரம் தந்துதான் வளர்த்திருந்தார்.

கஜராஜ்
கஜராஜ்

எப்படியோ பையன் படத்துல நடிச்ச பிறகு 'முண்டாசுப்பட்டி’ மாதிரியான படங்கள்ல என்னுடைய ரோல் கவனிக்கப்பட்டு இன்னைக்கு தமிழ் சினிமா என்னையும் ஒரு நடிகனா ஏத்துக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். ஒருபுறம் ஃபேமிலி, பிசினஸ், இன்னொரு பக்கம் பிடிச்ச சினிமான்னு பயணித்துக்கொண்டிருக்கேன். சினிமா தயாரிப்பை பையனும் மருமகனும் சேர்ந்து கவனிச்சிக்கிடுறாங்க. அதுல நான் தலையிட மாட்டேன்’’ என்கிறார் கஜராஜ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''பையன் கிட்ட ரீடேக்ஸ் வாங்கிய அனுபவம் இருக்கா?''

கஜராஜ்
கஜராஜ்

'' ‘பீட்சா’ல போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டுப்போய் அவன் முன்னாடி நின்னேன். ஸ்டேஷன் வாசல்ல நின்னபடி டீ சாப்பிட்டுக்கிட்டே டயலாக் பேசணும். முதன்முதலா பெரிய கேமராலாம் பார்த்ததுல எனக்குக் கொஞ்சம் சரியா பண்ண வரலை. ரீடேக்ஸ் போச்சு. ஸ்டேஷனுக்கு உள்ளே போய் பேசலாம்னு சொன்னான். அங்க போய் காட்சி எடுத்தாச்சு. முடிஞ்சதும், நான் அங்கிட்டு நகர்ந்துட்டேன்னு நினைச்சிட்டு, கேமராமேன் கோபிகிட்ட, `இனிமேல்லாம் அப்பா, அண்ணன் தம்பினு யாரையும் நடிக்க வைக்கக் கூடாது’னு சொன்னான்.

'என்னடா பண்ணணும்... என் போக்குல விடு, நடிக்கிறேன்’னு சொன்னதும், பிறகு அந்தக் காட்சி ஓகே ஆச்சு. அப்பான்னாலும் நடிப்பு சரியிலைன்னா டென்ஷனாகிடுவான்’' என்கிறார் பெருமையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism