Published:Updated:

Karthi: கார்த்திக்கு வில்லனாகும் ராஜமெளலி பட ஹீரோ!

ராஜூமுருகன் - கார்த்தி

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் அப்டேட் !

Karthi: கார்த்திக்கு வில்லனாகும் ராஜமெளலி பட ஹீரோ!

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் அப்டேட் !

Published:Updated:
ராஜூமுருகன் - கார்த்தி

நடிகர் கார்த்திக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படம் வெளியாகின்றன. ஆகஸ்ட் மாதம் 'விருமன்', செம்படம்பரில் 'பொன்னியின் செல்வன்' அக்டோபரில் 'சர்தார்' ஆகியவையே அந்த வரிசை. தீபாவளி வெளியீடாக 'சர்தார்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் அவர் அப்பா - மகன் என டபுள் ஆக்‌ஷனில் நடித்திருக்கிறார். அடுத்ததாக, இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் முன்னரே வெளியாகிவிட்டது. 

சுனில்
சுனில்

அந்தப் படத்தில் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 முதல் தொடங்கவிருக்கிறது. தவிர, இந்தப் படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் சுனில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கு படங்களில் காமெடியாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருக்கும் இவர், ராஜமெளலி இயக்கிய 'மரியாதை ராமண்ணா' என்ற படத்தின் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு சந்தானம் நடிப்பில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயூதம்' என்ற பெயரில் வெளியானது. சமீபமாக வெளிவந்த, 'புஷ்பா' திரைப்படத்தில் முதன் முதலாக வில்லன் அவதாரம் எடுத்து மங்களம் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார் எனச் சொல்லப்படுகிறது. படத்தின் பெயர் 'ஜப்பான்' என்ற தகவலும் பல நாட்களாக உலவி வருவது நிஜம்தான் என்கிறார்கள் !