Published:Updated:

கதிர் - சினிமா விமர்சனம்

கதிர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கதிர் - சினிமா விமர்சனம்

பிரசாந்த் பிள்ளையின் இசை, பல உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

கதிர் - சினிமா விமர்சனம்

பிரசாந்த் பிள்ளையின் இசை, பல உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

Published:Updated:
கதிர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கதிர் - சினிமா விமர்சனம்

‘எப்படி வாழ்கிறோம் என்பதைவிட யாருக்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்று மெசேஜ் சொல்பவன் ‘கதிர்.’

நண்பர்களுடன் குடி, கும்மாளம் என்று ஜாலியாக வாழும் கோவை கிராமத்து இளைஞன் கதிர் ஒரு பிரச்னையால் சென்னைக்கு வருகிறார். அங்கே நண்பனின் அறையில் தங்கி வேலைக்கு முயல, ஆங்கிலம் அவருக்குத் தடையாக இருக்கிறது. நண்பனின் ஹவுஸ் ஓனர் சாவித்திரி பாட்டியுடன் சண்டையில் ஆரம்பிக்கும் உறவு, ஒருகட்டத்தில் புரிதல் உள்ள நட்பாக மாறுகிறது. முன்னாள் தலைமை ஆசிரியையான சாவித்திரி பாட்டியின் உதவியால் ஆங்கிலம் கற்று வேலையும் கிடைக்க, கதிரால் அந்த வேலைக்குச் செல்ல இயலாத நிலை. அதற்குப் பிறகு கதிர் வாழ்க்கையில் ஏற்படும் ஓர் அதிர்ச்சி சம்பவம் அவர் வாழ்க்கையையே மாற்றிப்போடுவதைச் சொல்கிறது மீதிப் படம்.

கதிர் - சினிமா விமர்சனம்

வழக்கமான ஒரு கதையை எடுத்துக்கொண்டு கலகலப்பான சம்பவங்கள், சுவாரஸ்யமான திரைக்கதை, இயல்பான நடிகர்களால் மெருகேற்றியிருக்கும் அறிமுக இயக்குநர் தினேஷ் பழனிவேலுக்கு வாழ்த்துகள்.

முதல் படம் என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு இயல்பாக நகைச்சுவை, சோகம், கோபம் என்று எதார்த்தமாகப் பல உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹீரோ கதிராக நடித்திருக்கும் வெங்கடேஷ். கொஞ்சமும் மிகையில்லாமல் சாவித்திரி பாட்டி கேரக்டரைப் பிரதிபலித்து மனம் கவர்கிறார் ரஜினி சாண்டி. மலையாளப்படங்களில் நடித்த இந்தப் பாட்டியை இனி தமிழ் சினிமாக்களில் நிறையவே பார்க்கலாம். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் தோழராக சந்தோஷ் பிரதாப், கிடைத்த சிறுவாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். நாயகியாக பாவ்யா த்ரிகா, இளம்வயது சாவித்திரியாக ஆர்யா ரமேஷ் இருவரின் நடிப்பும் கச்சிதம். ஹீரோவின் நண்பர்களாக வரும் அத்தனை பேரும் கலகலப்புக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக ஹீரோவின் மாமாவாக வரும் கொங்கு மஞ்சுநாதனும் அவரின் தனித்துவமான குரலும் சிறப்பு.

பிரசாந்த் பிள்ளையின் இசை, பல உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு வலுச்சேர்த்திருக்கிறது. ஜெயந்த் சேதுமாதவனின் கேமரா கோவை வயல்வெளிகளையும் சென்னையின் சாலைகளையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறது. கல்லூரி வளாகத்தில் நடக்கும் சண்டைக்காட்சியில் `ஸ்டன்னர்’ சாமின் ஆக்‌ஷனில் அனல்.

கதிர் - சினிமா விமர்சனம்

முதல்பாதி வரை கொஞ்சமும் சலிக்காமல் இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் திசை மாறுவது பலவீனம். கம்யூனிஸ்ட் போராளி போர்ஷன் அழுத்தமானது என்றாலும், மொத்தப்படத்தில் ஒட்டாமல் தனித்துத் தெரிகிறது. விவசாயிகள் பிரச்னை, ஆன்லைன் மூலம் விற்பனை என்று வழக்கமான க்ளிஷே பாதைக்குத் திரும்பும்போது படம் சறுக்குகிறது.

சின்னச்சின்ன பலவீனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ‘கதிர்’ ஒரு சுவாரஸ்யமான படம்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism