Published:Updated:

``விஜய்ண்ணா `ஹக்’; செம ஹேப்பி!" - `பிகில்' பட ஷூட்டிங்கை முடித்த கதிர்

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் 'பிகில்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கதிர், தன்னுடைய போர்ஷனை முடித்துவிட்டதாக தனது ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Bigil
Bigil

'தெறி', 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ - விஜய் காம்போ இணைந்திருக்கும் படம், 'பிகில்'. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான 'சிங்கப் பெண்ணே' பாடல், யூ-டியூபில் மாஸ் ஹிட் அடித்தது.

அதுமட்டுமன்றி, கதிர், ஜாக்கி ஷெராப் போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தவிர, 'மேயாத மான்' புகழ் இந்துஜா, '96' புகழ் வர்ஷா பொல்லம்மா போன்றவர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள், பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில் தன்னுடைய பகுதியை முடித்த கதிர், "நான் சொல்ல வருவதை இந்தப் புகைப்படமே சொல்லிவிடும். விஜய் அண்ணா என்னைக் கட்டிப்பிடித்து வாழ்த்தியபோது ரொம்ப சந்தோஷமாகிட்டேன்" என எமோஷனலாகப் பகிர்ந்த கதிர், மொத்த படக்குழுவுக்கும் நன்றி சொல்லி டிவீட் பகிர்ந்துள்ளார்.

'பிகில்' நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்... சின்னத்திரையில் சமந்தா... #CinemaVikatan2020

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படம், இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இப்படத்தின் டீசர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.