Published:Updated:

வாலி: எம்.ஜி.ஆர் வீட்டு மீன் குழம்பு; எஸ்.ஜே.சூர்யா கொடுத்த தங்கச்சங்கிலி! - நினைவுதினப் பகிர்வு

கவிஞர் வாலி

வாலியைச் சந்தித்து ஐந்து பவுன் சங்கிலி பரிசளித்தார். `யோவ் இத்தனை வருஷத்துக்குப் பிறகும் இந்தப் பாட்டு எனக்குத் தங்கத்தைச் சம்பாதிச்சுக் கொடுத்திருக்கு' என மகிழ்ந்திருக்கிறார் கவிஞர்.

வாலி: எம்.ஜி.ஆர் வீட்டு மீன் குழம்பு; எஸ்.ஜே.சூர்யா கொடுத்த தங்கச்சங்கிலி! - நினைவுதினப் பகிர்வு

வாலியைச் சந்தித்து ஐந்து பவுன் சங்கிலி பரிசளித்தார். `யோவ் இத்தனை வருஷத்துக்குப் பிறகும் இந்தப் பாட்டு எனக்குத் தங்கத்தைச் சம்பாதிச்சுக் கொடுத்திருக்கு' என மகிழ்ந்திருக்கிறார் கவிஞர்.

Published:Updated:
கவிஞர் வாலி
* கவிதைச் சுரங்கம்... ரைமிங் பொயட் வாலியின் நினைவு நாள் இன்று. 2013 ஜூலை 18-ல் அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்து, நம் நினைவுகளில் வாழ்ந்துவருகிறார். அவரைப் பற்றிய சுவாரஸ்ய நினைவலைகளில் சில இங்கே!

* வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சினிமாவில் அவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்திருந்தாலும், பாடலாசிரியர் ஆகவேண்டும் என்று அவர் ஆரம்பக்காலங்களில் எண்ணியதில்லை. திருச்சி வானொலியில் அவர் நாடகங்களுக்கான கதைகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதன்பின், சினிமாவில் தன் கதைகள் படமாக வேண்டும் என ஆசைப்பட்டே கதை, வசனம் எழுத வேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், காலம் அவரைக் கவிஞராக்கியது. டி.எம்.செளந்தரராஜனுடன் ஏற்பட்ட பழக்கத்தைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர் சினிமாவில் பாடல் எழுதத் தொடங்கினார்.

கவிஞர் வாலி
கவிஞர் வாலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* வாலியை சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்த பெருமை பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு உண்டு. வாலி. ரங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பாடலை ஒரு தபால் அட்டையில் எழுதி டி.எம்.சௌந்தரராஜனுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பாடல் பின்னர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு இனிமையான குரலில் பரவசப்படுத்தியது.

* நடிகர் நாகேஷும் வாலியும் இணைபிரியாத சிநேகிதர்கள். இருவரும் வறுமையில் உழன்றபோது பட்டினியோடு சினிமா வாய்ப்புகள் தேடித் திரிந்ததுண்டு. இருவரும் ஒருநாள் பசியோடு இருக்கும் போது நாகேஷ், வாலியிடம் சொல்லியிருக்கிறார்... 'ஒரு சார்மினார் சிகரெட் வாங்கி, `புகைக்கலாம், சிகரெட்டை ஒரு இழு இழுத்துவிட்டு புகையை வெளியே விடாமல் அடக்கி வைத்து, தண்ணீர் குடித்தால் ரெண்டு நாள்களுக்குப் பசியெடுக்காது' எனச் சொல்லியிருக்கிறார். அப்படியொரு வறுமையையும் கடந்து வந்து சாதித்தவர்கள் அவர்கள் இருவரும்!

* வாலிக்கு மீன் குழம்பு ரொம்பவே பிடிக்கும். அதிலும் எம்.ஜி.ஆர் வீட்டு மீன் குழம்பு என்றால் அலாதி பிரியம். முதல் நாள் வைத்த மீன் குழம்பு எம்.ஜி.ஆர் வீட்டில் ரொம்பவே ஸ்பெஷல். வாலி- கலைஞர் இருவரின் நட்பை ஊர் அறியும்.

வாலி
வாலி

* அப்போதைய இளம் இயக்குநர்களில் வாலியின் மனதில் இடம் பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. 'வாலி' படம் வெளியானதும் எஸ்.ஜே.சூர்யாவைக் கூப்பிட்டு, 'உன் படம் வொண்டர்புல். உன்னை எனக்கு நிரம்பப் பிடிக்கும். ஏன்னா, என் பெயரில்தான் நீ படமே எடுத்திருக்கே' எனப் புன்னகை பூரித்துச் சொல்ல... வெட்கத்தில் நெளிந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

* வாலியின் பாடல்கள் பலவும் ரீமிக்ஸ் ஆனாலும்கூட ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'நியூ'வில் வந்த 'தொட்டால் பூ மலரும்' பாடலை ரீமிக்ஸ் செம ஹிட் ஆனது. அந்தப் பாடல் வெளியானதும் எஸ்.ஜே.சூர்யா வாலியைச் சந்தித்து ஐந்து பவுன் சங்கிலி பரிசளித்தார். 'யோவ், இத்தனை வருஷத்துக்குப் பிறகும் இந்தப் பாட்டு எனக்குத் தங்கத்தைச் சம்பாதிச்சுக் கொடுத்திருக்கு' என மகிழ்ந்திருக்கிறார் கவிஞர்.

கருணாநிதியுடன் வாலி
கருணாநிதியுடன் வாலி

* தமிழக முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் என அத்தனை பேரிடமும் நெருக்கமான நட்புண்டு. வாலியின் ஆரம்பக்காலத்தில் கை தூக்கிவிட்ட எம்.ஜி.ஆருக்காக 'என்னைப் பாட வைத்தவன் ஒருவன்... என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்' என நன்றி மிகுதியோடு பாடல் எழுதியிருக்கிறார். ஜெயலலிதாவைக் குறிப்பிடும்போது, 'இந்தியாவே புகழும் சந்தியாவின் மகளே' எனப் பாராட்டியும் இருக்கிறார். கலைஞரை இன்னும் அதிக உரிமையாய் நேசித்தவர் 'ஏ.எம் முதல் பி.எம் வரை உழைக்கும் ஒரே சி.எம். இவர்' என நெஞ்சிலிருந்து பாராட்டியதும் உண்டு.

* வாலி தன் கடைசி நாள்களில் மருத்துவமனையில் இருந்தபோது பாடல் எழுதுவதற்காக அவர் வாங்கி வைத்திருந்த அட்வான்ஸ் தொகையை (சில லட்சங்கள் இருக்குமாம்), அதைக் கொடுத்த அத்தனை பேரையும் கூப்பிட்டு, படுக்கையில் இருந்தபடியே செக் போட்டுத் திருப்பிக் கொடுத்த நற்பண்பாளர் என்பார்கள்.