Published:Updated:

"நடிகையிடம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்காதீங்க" - மேடையில் கண்கலங்கிய கீர்த்தி பாண்டியன்!

கீர்த்தி பாண்டியன்

'தும்பா' பட பத்திரிகையாளர் சந்திப்பில் கண்கலங்கிய நடிகை கீர்த்தி பாண்டியன்.

"நடிகையிடம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்காதீங்க" - மேடையில் கண்கலங்கிய கீர்த்தி பாண்டியன்!

'தும்பா' பட பத்திரிகையாளர் சந்திப்பில் கண்கலங்கிய நடிகை கீர்த்தி பாண்டியன்.

Published:Updated:
கீர்த்தி பாண்டியன்

அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன் , கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தும்பா' படம் வரும் ஜுன் 21ம் தெதி திரைக்கு வரவிருக்கிறது. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் தங்கள் பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது பெசிய நடிகை கீர்த்தி பாண்டியன்,

கீர்த்தி பாண்டியன்
கீர்த்தி பாண்டியன்

"இந்தப் படம் எனக்கு அறிமுக படமா இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு. தர்ஷன், தீனானு ரெண்டு நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. இயக்குநர் ஹரீஷ் ராமுக்குதான் நான் நன்றி சொல்லணும். என்னுடைய உடல் தோற்றத்தைப் பத்தி எதுவும் சொல்லாமல் என்னை ஊக்கப்படுத்தி வேலை வாங்கினார். கடந்த மூன்றரை வருடமா படத்துல நடிக்க என்னை நிறைய பேர் அணுகினாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுல நான் தவிர்த்த கதைகளும் இருக்கு. நான் தவிர்க்கப்பட்ட கதைகளும் இருக்கு. காரணம், 'உங்க நிறம் கம்மியா இருக்கு, இந்த உடல்வாகு படத்துக்கு ஒத்துவராது, இந்த மாதிரி எல்லம் இருந்தால் யாரும் பார்க்கமாட்டாங்க'னு என் தன்நம்பிக்கையை இழக்கிற அளவுக்கு பேசியிருக்காங்க. ஆனா, ஹரீஷ் மட்டும்தான் என் மேல நம்பிக்கை வெச்சு இந்தப் படத்துல நடிக்க வெச்சார். ஷூட்டிங்க்கு போறதுக்கு முன்னாடி எனக்கு என் மேல நம்பிக்கையே இல்லை.

ஆனா, இயக்குநர்தான் எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. 'நீ உன் நடிப்புல மட்டும் கவனம் செலுத்து'னு சொன்னார். ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வெச்சுக்க விரும்புறேன். இயக்குநர், தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் ஒருத்தரை படத்துல நடிக்க தேர்ந்தெடுக்கும்போது, வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்காதீங்க. அப்படிப் பண்ணிணா, உண்மையா திறமை இருக்க பல பேருக்கு வாய்ப்பு கிடைக்காது. அது படத்துல வொர்க் அவுட்டும் ஆகாது" என்று கூறி மேடையில் கலங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism