Published:Updated:

``வெற்றி மாறனிடம் வாய்ப்பு வாங்கித் தந்த அப்பா சொன்ன அட்வைஸ்!" - கென் கருணாஸ்

கென்
கென்

40 டிகிரி வெயிலில் அதுவும் மண்ணுக்குள்ள உருண்டு, புரண்டுன்னு செம ரிஸ்க். அந்தச் சண்டை நல்லா வந்ததுக்குக் காரணம் தனுஷ்

மாடிப்படிக்கட்டுகளில் ஏறும்போதே வீட்டுக்குள்ளிருந்து கானாப் பாடல்கள் காதில் விழுகின்றன. கானாவுக்கு ஏற்றபடி ஸ்டெப்ஸ் போட்டபடி கருணாஸ் குடும்பம் வீட்டுக்குள் வரவேற்கிறது.

"சினிமாவுல நான் நடிச்சு நாலு வருஷம் ஆச்சு. அதனால, 'என்னை வெச்சு ஒரு படம் பண்ணுங்க'ன்னு வெற்றி கிட்ட கேட்டுட்டே யிருந்தேன். 'யோசிச்சு சொல்றேன்'னு சொன்னார். அப்புறம் ஒருநாள் அவர்கிட்ட பையனுக்காகப் பேசினேன். ஏன்னா, அவன் ஸ்கூல், காலேஜ்ல கல்ச்சுரல் புரோகிராமில் கலந்துக்குவான். நானும் அவனை மாதிரிதான் படிக்குற காலத்துல இருந்தேன்" கருணாஸ் சொல்ல, கென் தொடர்ந்தார்...

"அப்பா என்கிட்ட 'உனக்காக நான் வாய்ப்புதான் வாங்கித் தரமுடியும். அதை நீதான் தக்க வெச்சிக்கணும்'னு சொல்லியிருந்தார். 68 கிலோ இருந்த நான் 14 கிலோ குறைஞ்சேன். உடம்பைக் குறைக்க நான் படுற கஷ்டத்தைப் பார்த்துட்டு அப்பாவே ரொம்ப ஃபீல் பண்ணினார்" என கென் சொல்ல, கருணாஸ் சீனுக்குள் வந்தார்.

கென்
கென்

"வெற்றியோ தோல்வியோ அவன் சராசரியா எடுத்துக்கிட்டு எல்லாரையும் மதிச்சு நடந்துக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. இதைத்தான் கென்னுகிட்டயும் சொல்லுவேன்" எனக் கருணாஸ் சொல்ல, "என்ன சீரியஸாவே பேசிட்டிருக்கீங்க" என ட்ராக் மாற்றினார் டயானா.

- ஆனந்த விகடன் ஸ்பெஷல் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > "எல்லாத்தையும் பாட்டாவே பாடிடுவோம்!" https://cinema.vikatan.com/tamil-cinema/an-exclusive-interview-karunas-family

"நானும் சிவசாமியா வாழ ஆரம்பிச்சேன்!" - பீட்டர் ஹெய்ன்

' 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 15 வருஷங்கள் கழிச்சு தனுஷோடு சேர்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு 'அசுரன்' படத்தில் கிடைச்சது. இத்தனை வருஷங்களா நாங்க சேர்ந்து படங்கள் பண்ணாம இருந்தாலும், எங்க நட்பு தொடர்ந்துட்டுதான் இருந்துச்சு. வெற்றிமாறன் சார் என்கிட்ட கதையைச் சொன்னபோதே, எனக்கு பயங்கர ஆர்வமா இருந்துச்சு. 'நிச்சயமா இந்தப் படத்தைப் பண்றேன் சார்'னு சொன்னேன். கமிட்டான நாளிலிருந்து நானும் சிவசாமியா வாழ ஆரம்பிச்சேன்.

``வெற்றி மாறனிடம் வாய்ப்பு வாங்கித் தந்த அப்பா சொன்ன அட்வைஸ்!" - கென் கருணாஸ்

அப்படி எனக்குள்ள இருந்த சிவசாமிதான் அசுரனை ரொம்ப அழகா செதுக்க உதவினான். இந்தப் படத்தோட இடைவேளைக் காட்சியில் வரும் சண்டையைப் படமாக்க அவ்ளோ கஷ்டப்பட்டோம். 40 டிகிரி வெயிலில் அதுவும் மண்ணுக்குள்ள உருண்டு, புரண்டுன்னு செம ரிஸ்க். அந்தச் சண்டை நல்லா வந்ததுக்குக் காரணம் தனுஷ், கென் மற்றும் என் ஃபைட்டர்கள்தான்'' என்று பீட்டர் சொல்ல, ''என் ஃப்ரெண்ட்ஸும் அந்தச் சண்டைக்காட்சியை ரொம்பவே பாராட்டுனாங்க' எனக் கைத்தட்டுகிறார் பார்வதி.

- 'தர்பார்', 'இந்தியன் - 2' என உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரு பக்கம்; பாலிவுட் படங்கள் ஒரு பக்கம்; 'தானே இயக்கும் பட வேலைகள் ஒரு பக்கம் எனச் சுழன்றுகொண்டிருக்கும் பீட்டர் ஹெய்ன் அளித்த விரிவான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க > https://cinema.vikatan.com/tamil-cinema/cinema-stunt-master-peter-hein-interview

'ஒத்த சொல்லால' பெரிய வெளிச்சம் கொடுத்தது!

தனிப்பாடல்களோடு சினிமாப் பாடல்களையும் எழுதி வருபவர் ஏகாதசி. ஒத்த சொல்லால (ஆடுகளம்), கோணக்கொண்டைக்காரி (மதயானைக் கூட்டம்), கம்பத்துப் பொண்ணு (சண்டைக்கோழி-2), கத்தரிப் பூவழகி (அசுரன்) உள்ளிட்டவை இவரின் ஹிட் லிஸ்ட். இரண்டு வகைகளிலும் எளிய மக்களின் மகிழ்ச்சியை, இழப்பைப் பதிவு செய்பவர்.

``வெற்றி மாறனிடம் வாய்ப்பு வாங்கித் தந்த அப்பா சொன்ன அட்வைஸ்!" - கென் கருணாஸ்

"இயக்குநராக வேண்டும் என்பதுதான் இலக்காக இருந்தது. ஏனோ சினிமா உலகம் பாட்டு எழுதுபவர்களுக்கு கமர்ஷியல் படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறது. அதனாலேயே சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்ததும் பாடலாசிரியர் முகத்தை மறைத்துவிட்டேன். 'வெயில்' படத்தில் சின்னப் பாட்டு ஒன்றுஎழுதும்போதே ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் கிடைத்தது. அது அசுரன் வரை தொடர்கிறது. அவள் பேர் தமிழரசி, ஆடுகளம், ஈட்டி எனப் பல படங்களில் பாடல்களை எழுதினேன். 'ஒத்த சொல்லால' பாடல் எனக்குப் பெரிய வெளிச்சம் கொடுத்தது."

- பாடலாசிரியர் ஏகாதசி அளித்துள்ள விரிவான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "என் முகத்தை விற்க விரும்பவில்லை!" https://www.vikatan.com/news/general-news/a-catch-up-with-lyricist-ekadasi

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு