Published:Updated:

ஓடிடி-யில் `த்ரிஷ்யம் 2’ ரிலீஸும் கேரள பிலிம் சேம்பர் எதிர்ப்பும்... நடந்தது என்ன?

த்ரிஷ்யம் 2 | Drishyam 2
த்ரிஷ்யம் 2 | Drishyam 2

மோகன்லாலின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்திருக்கும் கேரள பிலிம் சேம்பர், ஓடிடி-யில் வெளியாகும் திரைப்படங்களுக்கு திரையரங்க வெளியீடு மறுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மலையாளத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கி 2013-இல் வெளியான ‘த்ரிஷ்யம்’ மிகப் பெரிய வெற்றிபெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இது ரீ-மேக் செய்யப்பட்டது.
த்ரிஷ்யம் 2 | Drishyam 2
த்ரிஷ்யம் 2 | Drishyam 2
``மீண்டும் மோகன்லால் - மீனா... விரைவில் 'த்ரிஷ்யம்- 2'!'' - ஜீத்து ஜோசப்
தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வெளிவர உள்ள நிலையில், அதை முதலில் ஓடிடி தளத்தில் வெளியிட மோகன்லால் முடிவு செய்திருக்கிறார். அமேசான் ப்ரைம் தளத்தில் படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது.

இதனிடையே ட்விட்டரில் ரசிகர் ஒருவர், "'த்ரிஷ்யம் 2' ஓடிடியில் ரிலிஸான பிறகு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பிருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியதற்கு, மோகன்லால் "வாய்ப்பிருக்கிறது" என்று பதிலளித்திருக்கிறார். இது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இதைக் கடுமையாக விமர்சித்திருக்கும் கேரள பிலிம் சேம்பர், ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களுக்கு திரையரங்க வெளியீடு மறுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

திரைப்படங்கள் முதலில் ஓடிடி தளங்களில் வெளியாகும்போது, அது திரையரங்க உரிமையாளர்களை பாதிக்கும் என்று கேரள பிலிம் சேம்பர் கூறுகிறது. ஜனவரி இரண்டாம் வாரத்திலிருந்து திரையரங்குகள் செயல்படத் தொடங்கிவிட்ட நிலையில், அவர்கள் ஏன் வெளியீட்டுத் தேதியைச் சிறிது தள்ளிவைக்கக் கூடாது என்றும், ஓடிடி-யில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், இளம் இயக்குநர்களின் பொறுமை ஏன் பெரிய நடிகர்களிடம் இல்லை என்றும் அது கேள்வி எழுப்பியிருக்கிறது.

த்ரிஷ்யம் 2 | Drishyam 2
த்ரிஷ்யம் 2 | Drishyam 2

"தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் அவரது ‘மாஸ்டர்’ படத்தை ஓராண்டு காத்திருப்புக்குப் பின் திரையரங்குகளில் வெளியிட்டதைப் போன்ற முடிவை நடிகர் மோகன்லால் எடுத்திருக்கலாம்" என்று கேரள பிலிம் சேம்பரின் தலைவர் கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு