Published:Updated:

"உணர்வு ரீதியாகவும் அறிவு ரீதியாகவும்"- நடிகை குஷ்புவின் ட்விட்டர் பதிவு

குஷ்பு

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் தனது மகள்களுடன் கூடிய புகைப்படத்தையும் ஆண் குழந்தைகளைப்போலப் பெண் குழந்தைகளும் உங்களில் சரிபாதிதான் எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24, தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் பாலின சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் இந்த தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பலர் தங்களின் சமூக வலைதளங்களில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தனது கணவர் மற்றும் தன் பெண்குழந்தைகளுடன் கூடிய குஷ்புவின் டிவிட்
தனது கணவர் மற்றும் தன் பெண்குழந்தைகளுடன் கூடிய குஷ்புவின் டிவிட்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் அவர் " இன்று நாம் பெண்குழந்தைகள் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்று மிகுந்த பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம். உணர்வு ரீதியாகவும் அறிவுரீதியாகவும் ஆண்களை விடவும் அவர்கள் மிக உயர்ந்தவர்காளாக இருக்கிறார்கள். ஆண்பிள்ளைகளைப் போல பெண்பிள்ளைகளும் உங்களில் ஒருபாதிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என தனது கணவர் மற்றும் தன் பெண்குழந்தைகளுடன் கூடிய தனது புகைப்படம் ஒன்றையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி அவ்ர்களின்  டிவிட்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி அவ்ர்களின் டிவிட்

நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த தேசிய பெண்குழந்தைகள் தினத்தையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணியும் தன் பெண் குழந்தைகளின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பெண்குழந்தைகள் தினத்தைப்பற்றிக் கூறுகையில் " கல்வி, ஊக்கம்,மற்றும் அதிகாரம் என எல்லா தளங்களிலும் பெண்களுக்குச் சம வாய்ப்புகளை வழங்குவதற்கான நமது அர்ப்பணிப்பைப் புதுப்பிக்கும் நாள் இது. நம் பெண்குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடவும் பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்கவும் நாம் இந்த தேசிய பெண்குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம்" என அவர் கூறியிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism