Published:Updated:

`கிடாரி' - `96' காம்போவில் புதிய படம்!

பிரசாத் முருகேசன்
பிரசாத் முருகேசன்

'கிடாரி' பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2016 ஆம் ஆண்டு சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம், 'கிடாரி'. சசிகுமார், நிகிலா விமல், வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு பிறகு, பிரசாத் முருகேசனின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. ஆனால், அவரிடமிருந்து எந்தவோர் அறிவிப்பும் வராதிருந்த நிலையில், தற்போது அவரின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

ஆதித்யா பாஸ்கர்
ஆதித்யா பாஸ்கர்

இதில் '96' படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து பாப்புலரான ஆதித்யா பாஸ்கர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக ஹீரோயின் ஒருவர் நடிக்கிறார். துரோகமும் ரத்தமும் நிறைந்திருந்த 'கிடாரி' படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இந்த முறை காதலை மையமாக வைத்து இயக்கவிருக்கிறார். 'கிடாரி' படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் தர்புகா சிவாதான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். 'மகளிர் மட்டும்', 'கீதா கோவிந்தம்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய மணிகண்டன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜூலை மாதம் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு