Published:Updated:

ராணா காதலிக்கும் மிஹீகா பஜாஜ்... காதல் மலர்ந்தது எங்கே, எப்படி?

ராணா
News
ராணா

'பாகுபலி' ராணாவுக்குக் கல்யாணம் என லாக்டெளனிலும் கொண்டாட்ட மோடில் இருக்கிறது டோலிவுட். த்ரிஷாவுடன் காதல், ரகுலுடன் டேட்டிங் என கிசுகிசுக்கப்பட்ட இந்த லவ்வர் பாய்க்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ராணா... தெலுங்கு தேசத்தின் செம ரிச் கிட். டோலிவுட்டின் முன்னணி ஹீரோ. பிரபல தயாரிப்பாளர் ராமநாயுடுவின் பேரன், சுரேஷ் பாபுவின் மகன். நடிகர் வெங்கடேஷின் அண்ணன் மகன். வழக்கமான டோலிவுட் நாயகர்களைப் போல் இல்லாமல் மற்ற மொழிகளிலும் இறங்கி அடிக்க எப்போதும் காத்திருக்கும் நல்ல நடிகன். இவர் நடிப்பில் 'லீடர்', 'பாகுபலி', 'காஸி அட்டாக்' எனப் பல படங்கள் சூப்பர் ஹிட். தவிர, இவர் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விதமே தனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது எனப் பல தெலுங்கு நடிகர்களே புகழ்பாடுவார்கள்.

சில பல வருடங்களுக்கு முன், ராணாவும் த்ரிஷாவும் காதலிக்கிறார்கள் என்பது ஹாட் டாபிக். அதை உறுதிப்படுத்தும் விதமாக பொது விழாக்களில் அவர்களது பேச்சுகளும் இருக்கும். திடீரென்று இருவருக்கும் பிரேக் அப் எனத் தகவல் வெளிய கசியத் தொடங்க, த்ரிஷா பற்றிய கேள்விகளை மீடியாக்களிடமிருந்து தவிர்த்துவந்தார், ராணா. சில நேரங்களில் கோபப்பட்டதும் உண்டு. பிறகு ரகுல் பிரீத் சிங்குடன் கிசுகிசுத்தார்கள். அதன்பின், ராணாவின் திருமணத்தைப் பற்றிய எந்தச் செய்தியும் வராமல் இருந்தது. தெலுங்கில் தி மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலராக பாகுபலியும் (பிரபாஸ்) பல்வாள்தேவனும் (ராணா) இருந்து வந்த நிலையில், இந்த லாக்டெளனில் ஒற்றை போட்டோவில் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார், ராணா டகுபதி.

ராணா - மிஹீகா
ராணா - மிஹீகா

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணோடு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை 'And She Said Yes #MiheekaBajaj' என்ற கேப்ஷனோடு பதிவிட்டிருந்தார். அதைக் கண்ட இணைய உலகம் அந்தப் பெண் யார் என்று தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில் டோலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து வுட்டில் இருந்தும் ராணாவுக்கு வாழ்த்து மழை பொழிந்தது. சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், "க்யூப்பிடால் பல்வாள்தேவன் மாட்டிக்கொண்டான். #LockDown #Wedlock ஆனது" என்று தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யார் இந்த மிஹீகா பஜாஜ்?

சுரேஷ் பஜாஜ் - பண்டி பஜாஜ் ஆகியோரது மகள்தான் மிஹீகா பஜாஜ். இவரது தாய் பண்டி ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ஜுவல்லரி டிசைனிங் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மிஹீகாவும் ராணாவும் குடும்ப நண்பர்கள். மும்பையில் இன்டீரியர் டிசைனிங்கில் இளங்கலை படித்த மிஹீகா, லண்டன் சென்று சால்சியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தற்போது மும்பையில் 'டியூ டிராப்' எனும் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி ஒன்றை நடத்தி வரும் மிஹீகா, தனது அம்மாவுடன் சேர்ந்து ஜுவல்லரி பிஸினஸையும் கவனித்து வருகிறார்.

தாயுடன் மிஹீகா பஜாஜ்
தாயுடன் மிஹீகா பஜாஜ்

குடும்ப நண்பர்கள் என்பதால் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள். இருவரின் கடந்தகால வாழ்க்கைகளும் இருவருக்குமே தெரியும் என்பதால் நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. மும்பை செல்லும்போதெல்லாம் மிஹீகாவுடனான மீட்டிங் மிஸ் ஆகாதாம். ''And she said yes'' என கேப்ஷன் போட்டு, தான் முதலில் ப்ரோப்போஸ் செய்ததையும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் ராணா. இவர்கள் திருமணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடக்கும் எனத் தெரிகிறது. கொரோனா காலம் முடிந்த பிறகு, அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறதாம். ராணாவின் கைவசம் தற்போது 'காடன்' (மூன்று மொழிகளில்), 'விரட்டப்பர்வம்' ஆகிய படங்கள் உருவாகி வெளியாகக் காத்திருக்கின்றன. தவிர, தயாரிப்பிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

வாழ்த்துகள் ராணா - மிஹீகா!