Published:Updated:

ஒரு படத்தின் பாடலை வேறொரு படத்தில் பயன்படுத்துவது எப்படி? என்ன சொல்கிறது காப்பிரைட்ஸ்?

காப்புரிமை
News
காப்புரிமை

ஓர் இசையமைப்பாளர் இசையமைக்கும் பாடலுக்கும் அவருக்குமான உறவு, வணிக ரீதியானதா, மானசிகமானதா? ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும் அவர் தயாரித்த படங்களின் பாடலுக்கும் என்ன சம்பந்தம்?

இளையராஜாவின் சர்ச்சைக்குரிய பேட்டிக்குப் பிறகும் சரி, ‘ராயல்டி இல்லாமல் எஸ்.பி.பி தன் பாடல்களைப் பாடக்கூடாது’ என அவர் சொன்னபோதும் சரி, நம் காதில் விழுந்த வார்த்தை 'காப்பிரைட்ஸ்'. ஓர் இசையமைப்பாளர் இசையமைக்கும் பாடலுக்கும் அவருக்குமான உறவு, வணிக ரீதியானதா, மானசிகமானதா? ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும் அவர் தயாரித்த படங்களின் பாடலுக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்விகளுக்குச் சட்டம் என்ன பதில் சொல்கிறது?

பாடல் காப்புரிமை
பாடல் காப்புரிமை

ஒரு படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் எல்லாத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சம்பளம், வேலை அளவு, கால அவகாசம் உள்ளிட்டவை பரஸ்பரம் தயாரிப்பாளருடன் பேசி ஒப்பந்தம் போடப்படும். அந்த வகையில் படத்தின் இசையமைப்பாளருடனும் பாடலாசிரியர்களுடனும் தயாரிப்பாளர் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இந்திய சினிமாவில், குறிப்பாக, தமிழ் சினிமாவில் தயாரிக்கப்படும் ஒரு படத்தில் முதலில் விற்கப்படுவது ஆடியோ உரிமம்தான்.
ஆடியோ ரைட்ஸ்

ஒப்பந்தத்தில் படத்தின் டியூனுக்கான காப்புரிமை, பாடல் வரிகளுக்கான காப்புரிமை போன்ற உரிமங்களை ஆடியோ நிறுவனங்களுக்கு விற்பதற்கு இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்களின் இசைவுக்கான ஒப்பந்தமாகவும் இருக்கும். சுருங்கச் சொன்னால் படத்தின் முதலாளிக்கும் (தயாரிப்பாளர்) ஒரு வேலையை முடித்துத்தருவதற்குத் தொழில்நுட்ப வேலை செய்பவர்களுக்குமான ஒப்பந்தம் இது.

இந்திய சினிமாவில், குறிப்பாக, தமிழ் சினிமாவில் தயாரிக்கப்படும் ஒரு படத்தில் முதலில் விற்கப்படுவது ஆடியோ உரிமம்தான். அதைத் தொடர்ந்தே படத்தின் டிரெய்லர்கள், பாடல்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஆடியோ நிறுவனங்களின் யூடியூப் சேனல்களில் பகிரப்படுகின்றன. 2012-ம் ஆண்டின் பதிப்புரிமை சட்டத் திருத்தத்துக்குப் பிறகு, இசையமைப்பாளர் சம்மதம் இல்லாமல் ஒரு தயாரிப்பாளர் தன் படத்தின் பாடல்களின் பதிப்புரிமையை எந்த மூன்றாம் நபருக்கும் (ஆடியோ நிறுவனம்) விற்க முடியாது.

பாடல் காப்புரிமை
பாடல் காப்புரிமை

விஜய் சேதுபதி நடித்த 'ரம்மி' பட 'கூடை மேல கூடை வச்சு' பாடலின் ரிங் டோன்களின் வருமானம் மட்டுமே இன்றைய தேதியில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. 'நேரம்' படத்தில் வரும் 'பிஸ்தா' பாடல், ஐபிஎல் விளம்பரங்களுக்காக பெரிய விலைக்கு விற்கப்பட்டது. ‘ரோஜா’ படப் பாடல்களின் டியூன்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் ராயல்டி வாங்கி வருகிறார். காப்புரிமை மூலம் வரும் வருமானங்களுக்கு இவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

இந்தப் பாடல்களை உபயோகிக்க செல்போன் நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் யாரிடம் உரிமம் பெற்றிருக்கக் கூடும், இத்தகைய உபயோகத்தால் வரும் வருமானம் யாருக்குப் போய்ச் சேரும், ஒரு படத்தின் பாடலை இன்னொரு படத்தில் உபயோகிப்பதற்கு யாருடைய அனுமதியைப் பெற வேண்டும் எனப் பல கேள்விகள் எழுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தயாரிப்பாளர் தான் தயாரித்த படப் பாடல்களின் காப்புரிமையை ஆடியோ நிறுவனங்களுக்கு விற்ற பிறகு, அதில் எந்த உரிமையையும் அவர் கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட அந்தப் பாடல்களுக்கான காப்புரிமைக்காகக் கொடுக்கப்படும் தொகையான ராயல்டி (Royalty) மூலம் வரும் வருமானத்தில் முதன்மை பங்கு ஆடியோ நிறுவனத்துக்குப் போய்ச் சேரும். இந்த ராயல்டி தொகையில் படைப்பாளிகளான இசையமைப்பாளர், பாடலாசிரியர்களுக்கான பங்கினை ஐ.பி.ஆர்.எஸ் (The Indian Performing Right Society) என்ற அமைப்புப் பெற்றுத் தருவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இந்த சொசைட்டியில் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி.

இந்தக் காப்புரிமைகள், பதிப்புரிமை (பப்ளிஷிங் ரைட்ஸ்) மற்றும் நேரடி நிகழ்ச்சிக்கான உரிமங்கள் (லைவ் பர்ஃபாமன்ஸ் ரைட்ஸ்) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஐ.பி.ஆர்.எஸ்
ஐ.பி.ஆர்.எஸ்
The Indian Performing Right Society

பதிப்புரிமை: இந்த உரிமையை மொத்தமாக வாங்குபவர்கள் ஆடியோ நிறுவனங்கள். ஓர் இசையமைப்பாளர் படைத்த இசையையும் பாடலாசிரியர் வரியையும் சேர்த்துப் பதியப்பட்ட பாடலை டி.வி நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், இன்டர்நெட் நிகழ்ச்சிகள் என எங்கெல்லாம் பயன்படுத்துகிறார்களோ அதற்கான பதிப்புரிமையைச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அல்லது ஆடியோ கம்பெனியிடம் இருந்து பெற வேண்டும். இதற்கு பப்ளிக் பர்ஃபாமன்ஸ் லைசன்ஸ் (PPL) என்று பெயர். இதற்காகப் பெறப்படும் தொகையின் ஒரு பங்கு ஐ.பி.ஆர்.எஸ்ஸிலும் சேரும்.

நேரடி நிகழ்ச்சிக்கான உரிமங்கள்: ஓர் இசையமைப்பாளரால் உருவாக்கப்பட்ட பாடலை பொது வெளியில் பாடுவதற்கு இந்த உரிமத்தைப் பெற வேண்டும். இதற்கான ராயல்டியை ஐ.பி.ஆர்.எஸ்ஸில் கட்டினால் போதுமானது. இதற்கும் ஆடியோ நிறுவனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஒரு நேரடி நிகழ்ச்சிக்காக நமக்கு ஒரு பாடல் தேவையென்றால் பாடலின் படைப்பாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஐ.பி.ஆர்.எஸ்ஸில் பணம் செலுத்தினால் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியருக்கு அவை சென்றுசேர்ந்துவிடும்.

திரைப்படங்கள் அல்லது விளம்பரங்களில் உபயோகிக்கப்படும் பாடல்களுக்கான உரிமைகளுக்கு சின்க் ரைட்ஸ் (sync rights) என்று பெயர். இந்த உரிமை பதிப்புரிமைகள் கீழ் வரும். இந்த உரிமையை ஆடியோ நிறுவனங்கள் வசமே இருக்கும்.
சின்க் ரைட்ஸ்

எந்த ஓர் உரிமையையும் யாருக்கு விற்க வேண்டும், எந்த அளவு விற்க வேண்டும் என்ற அளவுகோலைக் காப்புரிமைச் சொந்தக்காரர்களான ஆடியோ நிறுவனங்களே முடிவு செய்கின்றன. இதில் படைப்பாளர்களின் படைப்புக்கான ராயல்டியை சரிவரச் செலுத்த வைப்பது ஐ.பி.ஆர்.எஸ் போன்ற அமைப்புகளின் வேலை.