Published:Updated:

சினிமா விமர்சனம்: கொளஞ்சி.

சமுத்திரக்கனி
பிரீமியம் ஸ்டோரி
சமுத்திரக்கனி

கண்டிப்பான அப்பாவுக்கும் போக்கிரித்தனமான மகனுக்குமான அன்பின் அவஸ்தைகள்தான் கொளஞ்சி.

சினிமா விமர்சனம்: கொளஞ்சி.

கண்டிப்பான அப்பாவுக்கும் போக்கிரித்தனமான மகனுக்குமான அன்பின் அவஸ்தைகள்தான் கொளஞ்சி.

Published:Updated:
சமுத்திரக்கனி
பிரீமியம் ஸ்டோரி
சமுத்திரக்கனி

னைவி சங்கவி மற்றும் இருமகன்களோடு கிராமத்தில் வாழ்கிறார் சமுத்திரக்கனி. ஊருக்குள் சாதிவெறிக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுக்கிற பகுத்தறிவாளர். அவரின் மூத்த மகன் கிருபாகரன் நண்பன் நசாத்தோடு அரிவாளைக் காட்டி ஐஸ் வாங்கிச் சாப்பிடுகிற சேட்டைக்காரச் சிறுவன். எந்நேரமும் அப்பாவிடம் அடிவாங்குகிறான். தன்னை மட்டும் அடித்து, தம்பிமீது அப்பா பாசமாக இருக்கிறார் எனத் தனிமையில் குமுறுகிறான். அப்பாவை வெறுக்கிறான்.

சினிமா விமர்சனம்: கொளஞ்சி.

எப்படியாவது சமுத்திரக்கனியிடமிருந்து பிரிந்து அம்மாவோடு மட்டும் வாழவேண்டும் என விரும்புகிறான். சமுத்திரக்கனிக்கும் சங்கவிக்கும் சண்டை வர, சங்கவி வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதையே சாக்காக வைத்து கிருபாவும் வீட்டை விட்டு அம்மாவோடு வெளியேறுகிறான். சமுத்திரக்கனி-சங்கவி ஜோடி எப்படி மீண்டும் இணைகிறது... சமுத்திரக்கனியின் கண்டிப்புக்குப் பின்னால் இருக்கிற அன்பை கிருபா எப்படிப் புரிந்துகொள்கிறான் என்பவையெல்லாம் மீதிக்கதை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முரட்டு அப்பாக்களின் ஜெராக்ஸ் காப்பியாக சமுத்திரக்கனி. மகனை விரட்டி விரட்டி வெளுப்பதிலும், க்ளைமாக்ஸில் மகனுக்காக உருகுவதிலும், சாதிவெறி பேசுபவர்களிடம் சீற்றம் காட்டுவதிலும் நடிப்பில் அப்பாக்கனி அனுபவக்கனி. மீண்டும் சங்கவி, அமைதியான அம்மாவாக அழகாக நடித்திருக்கிறார். கொளஞ்சியாக வரும் கிருபா நல்ல தேர்வு. விஷமத்தனமும் விளையாட்டுத்தன முமாக ஏராளமான எமோஷன்களைக் காட்டி அசத்துகிறார். குட்டிப்பையன் நசாத்தின் குட்டி பன்ச்கள் எல்லாமே கலகலப்பு. இளம் காதலர்கள் ராஜாஜி - நைனா சர்வார், கோயில் தர்மகர்த்தாவாக சாதிமுகம் காட்டும் மூர்த்தி என மற்றவர்களும் நிறைவாகவே செய்துள்ளனர்.

சினிமா விமர்சனம்: கொளஞ்சி.

விஜய்முனுசாமியின் கேமரா கிராமத்து வாழ்வைச் சில காட்சிகளில் அபாரமாகவும் சில காட்சிகளில் சுமாராகவும் படம்பிடித்திருக்கிறது. நடராஜ் சங்கரனின் இசையெல்லாம் இளையராஜா சாயல்... பின்னணி இசை இதம்.

இயக்குநர் தன்ராம் சரவணன் அப்பா-மகன் கதையை மட்டுமே படமாக எடுத்திருந்தால் அழகான ஒரு கிராமத்து கிளாஸிக் கிடைத்திருக்கும். ஆனால் அந்த எபிசோடை காமெடி டிராக் போலவும், ஒரு சுமாரான காதல் கதையை முதன்மையாகவும் மாற்றியதில் சறுக்கியிருக்கிறார். சென்றாயன் தத்துவப் பாடல் ஒன்று ஏன் எதற்கு என்று தெரியாமல் திணிக்கப்பட்டிருக்கிறது.

ஏகப்பட்ட கருத்துகள் சொல்ல முயன்று எதையுமே சரியாகச் சொல்லமுடியாமல் குழம்பிப்போயிருக்கிறான் இந்தக் கொளஞ்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism