Published:Updated:

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் கோலிவுட் பிரபலம்!

உ. சுதர்சன் காந்தி.

திரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார், சமுத்திரக்கனி!

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்

`நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படத்துக்குப் பிறகு, எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார், அல்லு அர்ஜுன். தொடர்ந்து அவர் நடித்த படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் கதைகள் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்திவந்தார். இப்போது திரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். 'AA19' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். தவிர, ஜெயராம், தபு, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இப்படத்துக்கு, தமன் இசையமைக்கிறார்.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

இந்த நிலையில், படத்தின் வில்லனாக சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ராஜமெளலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'RRR' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார், சமுத்திரக்கனி. தவிர, ராஜமெளலி மகன் கார்த்திகேயாவின் முதல் தயாரிப்பில் உருவாகும் `ஆகாஷவாணி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். தமிழில் `நாடோடிகள் 2', `அடுத்த சாட்டை', `வெள்ளையானை', `காப்பான்' உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் வெளிவரக் காத்திருக்கின்றன.