Published:Updated:

கடன் `வில்லன்' பிடியில் நாயகர்கள்! - கோலிவுட் மந்தநிலை பின்னணி

பெரியளவு கடனில் இருக்கும் தனுஷ், கடனை முழுமையாக அடைப்பதற்காகத் வெளித்தயாரிப்புகளில் தொடர்ந்து நடிக்கக் கால்ஷீட்

tamil cinema
tamil cinema

கோடிகளில் கடன்களோடு தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள் கோலிவுட் நடிகர்கள். சொந்தத் தயாரிப்பில் இறங்கிய தனுஷ், விஜய்சேதுபதி, விஷால் எனப் பல நடிகர்களும் கடன் பிரச்னையில் சிக்கித்தவிக்கிறார்கள். தொடர் தோல்விகளால் கடன் பிரச்னை ஒருபுறம், பேசப்பட்ட சம்பளம் சரியாக வராத நிலை இன்னொருபுறம் எனக் கடுமையான நெருக்கடிகளில் நடிகர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2mkszwU

சமீபத்தில் 'அசுரன்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் "சில தயாரிப்பாளர்கள் சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள்'' என்று வெளிப்படையாகவே பேசினார் தனுஷ். 'மரியான்' தொடங்கி 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' வரை பல படங்களுக்கு அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் வரவில்லை என்கிறார்கள். அதேபோல் அவரது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் கடுமையான நஷ்டத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதனால் பெரியளவு கடனில் இருக்கும் தனுஷ், கடனை முழுமையாக அடைப்பதற்காகத் வெளித்தயாரிப்புகளில் தொடர்ந்து நடிக்கக் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தனுஷின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் கடனில் சிக்கியதுபோலவே விஜய் சேதுபதியும் மிகப்பெரிய கடனில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவன வேலைகளை நிறுத்திவிட்டு வெளித்தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் மும்முரமாக இறங்கிவிட்டார் சிவகார்த்திகேயன்.

"ஒவ்வொரு படமும் ரிலீஸூக்கு வரும்போது பஞ்சாயத்து வரும். உடனே தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு அல்லது பாதி சம்பளத்துக்கு நடித்துக்கொடுத்துவிட்டு படம் ரிலீஸாக உதவுவது விஜய் சேதுபதியின் வழக்கம். இதனாலேயே பல கோடிகளை அவர் இழந்திருக்கிறார்'' என்கிறார் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர்.

இரண்டு படங்களைத் தயாரித்த பிறகு, தயாரிப்பு நிறுவன வேலைகளை நிறுத்திவிட்டு வெளித்தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் மும்முரமாக இறங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். சொந்தப் படத்தில் தானே ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய சந்தானம் கடன் வலைக்குள் சிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து வியாபாரத்தில் சுணங்க மிகப்பெரிய கடன் பிரச்னையில் சிக்கியிருக்கிறார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'அமரகாவியம்' படங்கள் மூலம் சொந்தத் தயாரிப்பில் இறங்கிய ஆர்யாவின் நிலைமையும் இதேதான். நடிகர் சங்கச் செயலாளர் விஷாலும் விதிவிலக்கல்ல.

Actors
Actors

சினிமாவில் இந்த நாயகர்கள் பல வில்லன்களைச் சந்திக்கலாம். நிஜ வாழ்க்கையில் இவர்களுக்கு வில்லாதி வில்லன், இந்தக் கடன் பிரச்னைதான்.

> தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் கடன் பிரச்னைகளுக்கான பின்னணியையும், காரணங்களையும் விரிவாக அடுக்கும் ஆனந்த விகடன் கவர் ஸ்டோரியில் வாசிக்க > கடன் பிரச்னையில் டாப் ஹீரோக்கள்! - தத்தளிக்கும் தமிழ் சினிமா https://cinema.vikatan.com/tamil-cinema/top-heroes-are-facing-loan-repayment-issues