Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: விஜய்யுடன் சமரசம் பேசப்போகும் ரஜினி டு `வலிமை'க்காக கவலைப்பட்ட அஜித் வரை!

கோலிவுட் ஸ்பைடர்

வணக்கம் மக்களே! இனி வார வாரம் தமிழ் சினிமா சீக்ரெட்ஸ், பரபர அப்டேட்ஸ், உங்க ஃபேவரைட் செலிபிரெட்டியோட அடுத்தடுத்த திட்டங்கள் என நிறைய தகவல்கள் சும்மா நச்சுன்னு நாலே வரில உங்ககிட்ட வரப்போகுது. இந்த வார ஸ்பெஷல் இதோ...

கோலிவுட் ஸ்பைடர்: விஜய்யுடன் சமரசம் பேசப்போகும் ரஜினி டு `வலிமை'க்காக கவலைப்பட்ட அஜித் வரை!

வணக்கம் மக்களே! இனி வார வாரம் தமிழ் சினிமா சீக்ரெட்ஸ், பரபர அப்டேட்ஸ், உங்க ஃபேவரைட் செலிபிரெட்டியோட அடுத்தடுத்த திட்டங்கள் என நிறைய தகவல்கள் சும்மா நச்சுன்னு நாலே வரில உங்ககிட்ட வரப்போகுது. இந்த வார ஸ்பெஷல் இதோ...

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்

* பாதிக்கும் மேல் முடிவடைந்திருந்த 'கண்ணை நம்பாதே' படத்தை மறுபடியும் ஆரம்பித்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின். கைவசம் இருக்கும் மு.மாறன், மகிழ்திருமேனி. மாரி செல்வராஜ் படங்களை முடித்து விட்டு `நெஞ்சுக்கு நீதி' படத்தை ரீலீஸ் செய்துவிட்டு உடனே தீவிர அரசியலில் இறங்கப்போகிறாராம் உதயநிதி. அதற்கான முனைப்பில்தான் படங்களை முடிக்கிறார் உதயநிதி. அரசியலுக்கு நீதி

வலிமை அஜித்
வலிமை அஜித்

* வலிமை சொன்னபடி வெளியாகாமல் போனதில் அதிகம் வருத்தமடைந்தது தயாரிப்பாளர் இல்லையாம் அஜித் தானாம். எப்போதும் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கும்போது முந்தைய படம் வெளியாகியிருக்க வேண்டும் என அஜித் விரும்புவாராம். அது மிஸ் ஆனதில் சற்று வருத்தமாம். எப்போது வந்தாலும் படம் வெற்றி என்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நிம்மதியாக இருக்கிறார். அடுத்த பட ஸ்க்ரிப்ட்டில் படு தீவிரமாக இறங்கிவிட்டார் ஹெச்.வினோத். வலிமை அளவற்ற வலிமை இதுவே இப்போதைய தேவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* விஜய்க்கும், அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் ரொம்ப நாளாக மனத்தாங்கல் ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது தெரிந்ததுதான். இப்போது எஸ்.ஏ.சி இதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். மகனுக்கும் தனக்குமான பஞ்சாயத்தை ரஜினிகாந்த் வசம் சொல்லி சமரசம் செய்ய முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். பச்சைக்கிளி... பஞ்சாயத்தை முடி!

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்

* அடுத்த படத்தின் சம்பளம் இந்தப் படத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் முந்தைய படத்தை புகழ்ந்து சொன்னாராம் ரஜினிகாந்த். இதைக் கேட்ட பலரும் அப்செட்டில் இருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க அடுத்த படத்திற்காக உடல் நிலையைத் தயார்படுத்த நல்ல ஓய்வில் இருக்கிறார். கெட்டபய சார் இந்தக் காளி

* பொன்னியின் செல்வன் படத்திற்காக உதவி இயக்குநராக மணிரத்னத்திடம் வேலை பார்த்து நல்ல பெயர் வாங்கியிருக்கிறார் அஜிதன். எழுத்தாளர் ஜெயமோகனின் மகன்தான் இந்த அஜிதன். தத்துவம் படித்துவிட்டு சினிமாவில் இறங்கிவிட்டார் அஜிதன். ஆக, எழுத்தாளர் குடும்பத்திலிருந்து இப்போது இயக்குநர் வந்துவிட்டார். ஜெயமோகன் பொன்னியின் செல்வன் படத்தின் திரைக்கதையில் பங்களிப்பு செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். ஜெயமோகனின் செல்வன்