Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: `தளபதி' மோடில் மீண்டும் இணையும் JD - பவானி; விஜய் சேதுபதி ரூட்டில் தனுஷ்?!

கோலிவுட் ஸ்பைடர்

வணக்கம் மக்களே! இனி வார வாரம் தமிழ் சினிமா சீக்ரெட்ஸ், பரபர அப்டேட்ஸ், உங்க ஃபேவரைட் செலிபிரெட்டியோட அடுத்தடுத்த திட்டங்கள் என நிறைய தகவல்கள் சும்மா நச்சுன்னு நாலே வரில உங்ககிட்ட வரப்போகுது. இந்த வார ஸ்பெஷல் இதோ...

கோலிவுட் ஸ்பைடர்: `தளபதி' மோடில் மீண்டும் இணையும் JD - பவானி; விஜய் சேதுபதி ரூட்டில் தனுஷ்?!

வணக்கம் மக்களே! இனி வார வாரம் தமிழ் சினிமா சீக்ரெட்ஸ், பரபர அப்டேட்ஸ், உங்க ஃபேவரைட் செலிபிரெட்டியோட அடுத்தடுத்த திட்டங்கள் என நிறைய தகவல்கள் சும்மா நச்சுன்னு நாலே வரில உங்ககிட்ட வரப்போகுது. இந்த வார ஸ்பெஷல் இதோ...

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்

விஜய்யின் ‘பீஸ்ட்‘ படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துவிட்டது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் படத்தின் பேட்ச் ஒர்க் எல்லாம் முடித்துவிட்டு, நேற்று முன்தினம் சென்னை திரும்பியிருக்கிறது நெல்சன் டீம். அந்தப் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்கவில்லை. சில வாரங்களுக்கு முன்னரே அவரது முழு போர்ஷனையும் முடித்துவிட்டு ஃப்ரீ ஆகிவிட்டார். இது துண்டு செய்திதான்.

ஹாட் டாபிக்காக பரவிய செய்தி என்னவென்றால் இதே 'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன் படுபயங்கரமான வில்லன் ரோலில் நடிக்கிறார் என்பதுதான். ஒருவேளை அவ்வளவு தூரம் எதிர்மறையான ரோலில் செல்வா இறங்கிவிட்டாரா என்று விசாரித்தால் அவருக்கு வில்லன் ரோல் கிடையாதாம். விஜய்க்கு வேண்டியவராக, துணைக்கு நிற்கிறவராகத்தான் படம் முழுக்க வருகிறாராம். பதிலாக விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் ரோலில் நடிக்கிறார் எழுத்தாளரும், இசை விமர்சகருமான ஷாஜி. 'பீஸ்ட்' மோட் ஆன்!

விஜய், நெல்சன்
விஜய், நெல்சன்

கொச்சி ஷெட்யூலோடு ‘நட்சத்திரம் நகர்கிறது‘ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் பா.இரஞ்சித். அடுத்து ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் பட வேலைகளில் இறங்கிவிட்டார். பொங்கல் பண்டிகையைக் கொண்டாடின கையோடு, இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறார். சென்னையில்தான் அதன் ஷூட்டிங்காம். இதுல சீயானுக்கு எத்தனை கெட்டப்?!

கொரோனா இரண்டாவது தடவை வடிவேலைத் தொட்டு பதம் பார்த்தாலும், அசராமல் லண்டன் போய்விட்டார். அங்கே ஒலிப்பதிவு கூடத்தில் சந்தோஷ் நாராயணன் ஆட்டம் பாட்டத்தோடு டியூன் போடுகிறார். அந்த டியூனுக்கு ஏற்றவாறு பாட்டும் பாடுகிறார் வடிவேலு. இங்கே 'நாய் சேகர்' வெளியாகிவிட, அங்கே ஒரிஜினல் எனச் சொல்லிக்கொள்ளும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' பக்காவாக ரெடியாகி வருகிறது. படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கியாம். அதுவும் மூன்று மாதம் இடைவிடாத படப்பிடிப்பாம். வந்துட்டாருய்யா, வந்துட்டாருய்யா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிறைய இயக்குநர்களை கைக்குள் வைத்துக்கொண்டு படம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் தனுஷ். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வருடத்திலிருந்து கால்ஷீட்களை ஒதுக்கவிருக்கிறார் அவர். இந்த லிஸ்ட்டில் முதலாவதாகத் துண்டைப் போட்டு இடம்பிடித்திருப்பது 'பியார் பிரேமா காதல்' படத்தைத் தந்த இயக்குநர் இலன். தனுஷை வைத்து இவர் இயக்கும் படம் வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வரவிருக்கிறது. இதே மாதிரிதான் விஜய் சேதுபதியும் இயக்குநர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு!

தனுஷ்
தனுஷ்

'மாஸ்டர்' படம் ரிலீஸாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. கடந்த வருடம் இந்தப் பட ரிலீஸின்போதுதான் துவண்டு போயிருந்த தமிழ் சினிமா கொஞ்சம் துளிர்விட்டது. இதையொட்டி 'மாஸ்டர்' படத்துக்கு ஆதரவாகவும், பாராட்டும் வகையிலும் பல்வேறு ஹேஷ்டேகுகள் இணையத்தில் உலா வந்தன.

சுவாரஸ்யம் என்னவென்றால், சமீபத்தில் விஜய்யும் விஜய் சேதுபதியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலைபேசியில் உரையாடி இருக்கிறார்கள். "நம் இருவரின் கூட்டணியில் இன்னொரு படம், அதுவும் 'தளபதி' மாதிரி செய்யலாமா?!" எனப் பேசியிருக்கிறார்கள். தொடர்ந்து இருவரும் ஆர்வத்துடன் இது குறித்து நான்கு, ஐந்து இயக்குநர்களிடம் விவாதித்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு ரகசியமாக ஸ்கிரிப்ட் தயாரிக்கிற வேலைகள் நடக்கின்றன. தளபதி பார்ட் 2!

விக்ரம் பட படப்பிடிப்பு
விக்ரம் பட படப்பிடிப்பு

பிக் பாஸ் சீசன் 5 கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அரசியல் பக்கமும் முன்புபோல கமல் ஆக்டிவ் மோடில் இல்லை. 'இந்தியன் 2'-வின் படப்பிடிப்பு எப்போது மீண்டும் தொடங்கும் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. இதனால் கமல் ரசிகர்களின் தற்போதைய ஒரே நம்பிக்கை லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படம்தான். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என ஒரு பெரிய பட்டாளமே இதில் நடித்துவர, கமலின் பிறந்தநாளுக்குப் படத்தின் சிறிய க்ளிம்ப்ஸ் ஒன்றை மட்டும் காட்டிவிட்டு அமைதியாகிவிட்டது படக்குழு.

'விக்ரம்' படம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று விசாரித்ததில், நிறைவு கட்ட படப்பிடிப்பு பெங்களூரூவைத் தொடர்ந்து சென்னையில் வேகமாக நடந்து வருகிறது என்கிறார்கள். இம்மாத இறுதியில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு உடனடியாக டப்பிங் வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார்களாம். 'விக்ரம்' கமலின் விஸ்வரூபம் விரைவில்!