Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: கவலையில் இருக்கும் `மகான்' இயக்குநர் டு `பீஸ்ட்' பொண்ணின் அதிரடி ஸ்டேட்மென்ட் வரை!

கோலிவுட் ஸ்பைடர்

வணக்கம் மக்களே! இனி வார வாரம் தமிழ் சினிமா சீக்ரெட்ஸ், பரபர அப்டேட்ஸ், உங்க ஃபேவரைட் செலிபிரெட்டியோட அடுத்தடுத்த திட்டங்கள் என நிறைய தகவல்கள் சும்மா நச்சுன்னு நாலே வரில உங்ககிட்ட வரப்போகுது. இந்த வார ஸ்பெஷல் இதோ...

கோலிவுட் ஸ்பைடர்: கவலையில் இருக்கும் `மகான்' இயக்குநர் டு `பீஸ்ட்' பொண்ணின் அதிரடி ஸ்டேட்மென்ட் வரை!

வணக்கம் மக்களே! இனி வார வாரம் தமிழ் சினிமா சீக்ரெட்ஸ், பரபர அப்டேட்ஸ், உங்க ஃபேவரைட் செலிபிரெட்டியோட அடுத்தடுத்த திட்டங்கள் என நிறைய தகவல்கள் சும்மா நச்சுன்னு நாலே வரில உங்ககிட்ட வரப்போகுது. இந்த வார ஸ்பெஷல் இதோ...

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்

* 'மகான்' படத்தை தியேட்டரில் வெளியிடத்தான் விக்ரம் விரும்புகிறாராம். ஆனால் தயாரிப்பாளர் ஒடிடியில் கண் வைக்கிறார். தனது முந்தைய படமான 'ஜகமே தந்திரம்' போலவே இதையும் ஒடிடிக்கு அனுமதித்தால் படம் எப்படி எந்த விதத்தில் இருக்கிறது, அதற்கு மக்களின் கருத்து நமக்கு தெரியவராதே... என்ற கவலையில் இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஆனாலும், இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார் தயாரிப்பாளர். சீக்கிரம் வாங்க சீயான்!

விக்ரம், துருவ் | மகான்
விக்ரம், துருவ் | மகான்

* அஜய் தேவ்கன், ஜான் ஆப்ரஹாம் படங்கள்... என இந்தியில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத்சிங். ஆனாலும் தமிழ்ப் பக்கமும் தங்க மனசு வைத்திருக்கிறார். "ஷங்கரின் 'இந்தியன் 2' பேலன்ஸ் ஷூட் எப்போது துவங்கினாலும் உடனே வரக் காத்திருக்கிறேன்..." என ஆர்வமாகச் சொல்லியிருக்கிறாராம். மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்தால் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான அயர்ன்மேனின் படங்களைப் பார்த்து ரசிப்பதில் ரொம்பவே இஷ்டமாம். ஸ்பைடர்மேன் பாத்துட்டீங்களா?

* சூர்யாவின் நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று, சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்துவிட வேண்டும் என்பதே! அவர் சினிமாவில் நடிக்க வந்த பிறகு அந்த ஆசையை இன்னமும் நிறைவேற்றவில்லை என அவர் எண்ணுவதுண்டு. அவர் கல்லூரியில் படிக்கும் சமயங்களில் தன் தி.நகர் வீட்டிலிருந்து லயோலா கல்லூரிக்குப் பல நாள்கள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்தது மகிழ்வான அனுபவமாக மாறியதே, இப்படி ஓர் ஆசைக்குக் காரணமாம். பயணங்கள் முடிவதில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* கைவசம் 13 படங்கள் வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதில் ஏழு படங்கள் சென்ஸாரும் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டனவாம். தமிழ் சினிமா உலகில் இப்படி ஒரு ஹீரோ இவ்வளவு படங்கள் வைத்துக் கொண்டிருந்ததில்லை என்கிறார்கள். இனிமே இப்படித்தான்!

அபர்ணா பாலமுரளி
அபர்ணா பாலமுரளி

* 'சூரரைப் போற்று' அபர்ணா பாலமுரளி, இப்போது மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். ஆர்க்கிடெக்ட் படித்திருந்தாலும், முறைப்படி நடனம் கற்ற பிறகே, சினிமாவிற்குள் வந்தவர் அபர்ணா. சின்ன வயதிலேயே பரதம் பயின்றவர்... அதன்பிறகு மோகினியாட்டம், குச்சிப்புடி என அசத்தினார். இது தவிர பல பாடல்களையும் சிறப்பாகப் பாடி தன் யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார். சமீபத்திய மலையாள நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு அவரும் கீர்த்தி சுரேஷும் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்களாம். ஆல்ரவுண்டர் பொம்மி!

வெங்கட் பிரபு, பிரேம்ஜி
வெங்கட் பிரபு, பிரேம்ஜி

* 'மாநாடு' வெற்றிக்குப் பிறகு கங்கை அமரன் குடும்பத்தில் அத்தனை பேரும் பண்ணைப்புரம் சென்று குலசாமிக்குப் படையல் போட்டுத் திரும்பியிருக்கிறார்கள். கூட வருவதாகச் சொல்லியிருந்த யுவன் ஷங்கர் ராஜா மட்டும் கடைசி நேரத்தில் ஆப்சென்ட். குடும்ப மாநாடு!

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

* 'பீஸ்ட்' பொண்ணு பூஜா ஹெக்டேவின் ஸ்டேட்மென்ட் இது. "நான் மும்பையில பிறந்து வளர்ந்தாலும் எனக்குள் எப்பவும் நான் கர்நாடகா பொண்ணாதான் இருந்துருக்கேன். எங்க பூர்வீகம் கர்நாடகாவின் மங்களூருங்கறதுல பெருமையே! என் நண்பர்கள் சிலர் என்கிட்ட 'கர்நாடக தண்ணீர்னாலதான் அங்கே இருந்து குட்லுக்கிங் பெண்கள், நடிகைகள் வர்றாங்களா'ன்னு கேட்பாங்க... கேட்டிருக்காங்க!" என ஆச்சரியமாகச் சொல்லி பெங்களூரு ரசிகர்களின் தலையில் ஒன்றரை டன் ஐஸ் கட்டி வைத்துக் குளிர வைத்திருக்கிறார் பூஜா. மங்களூர் டு மும்பை, வழி சென்னை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism