Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: தயாரான `வாடிவாசல்' சூர்யா; இந்தியன்-2 படத்தின் புதிய மாற்றம்!

கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல்

கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல், இந்தியன்-2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

கோலிவுட் ஸ்பைடர்: தயாரான `வாடிவாசல்' சூர்யா; இந்தியன்-2 படத்தின் புதிய மாற்றம்!

கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல், இந்தியன்-2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல்

* 'இந்தியன் 2' படப்பிடிப்பு சென்னை, திருப்பதியில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. கமலின் போர்ஷன் படமாகி வருகிறது. படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவாம். ஊழல் பெருக்கெடுக்கும் சமூகத்தில் ஒருவர் அதற்கு எதிராக என்ன மாதிரியெல்லாம் களத்தில் இறங்குகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். இதற்கு முன் எழுதி வைத்த கதையில் வசனங்கள் கடுமையாக அரசியல்வாதிகளை சாடியும் சிலரை குறிப்பால் உணர்த்தியும் இருந்ததாம். இப்போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் முக்கியமானவர் படப் பிரச்சனைகளில் பஞ்சாயத்து செய்து சரி செய்து விட்டதால் அவரும் இந்த தயாரிப்பில் கலந்துவிட்டார். அவருக்கு எதிர்காலத்தில் பிரச்னை வராமல் இப்போதே அதில் கடுமையை குறைத்து விட்டார்கள். அதற்கு பதிலாக அரசியல் தவிர வேறு சில கருத்துக்களை சேர்க்க இப்போது எழுத்தாளர்கள் வேலை செய்கிறார்கள்.

கார்த்தி
கார்த்தி

* 'பொன்னியின் செல்வன்' புரொமோஷனில் இருக்கிறார் கார்த்தி. இதனையடுத்து தீபாவளிக்கு 'சர்தார்' படத்தை கொண்டு வரும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அடுத்து அவர் நடிக்கும் ராஜுமுருகன் படத்திற்கு 'ஜப்பான்' என டைட்டில் வைத்திருப்பதாக பேச்சு. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் அதன் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். கதாநாயகியாக ராஷ்மிகாவிடம் பேசிவருவதாகவும் தகவல்.

* நடிகர் ஜெய்க்கு வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவரது பெரியப்பா இசையமைப்பாளர் தேவா இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து விட்டார். ஏராளமான காதல் தோல்விகளை சந்தித்த பிறகு ஜெய்யும் இந்த ஏற்பாட்டுக்கு ஓகே சொல்லிவிட்டார். சமீபத்தில் டிவி நடிகை வரைக்கும் காதல் வந்து பிரேக்அப் ஆனதால் வீட்டில் கெடுபிடியாய் அவரை கல்யாண முடிவிற்குள் கொண்டு வந்து விட்டார்கள். கடைசியாக ஜெய் சிக்கிவிட்டார் என்று அவரது 'சென்னை 28' கேங்க்கினர் தனி பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஒருவனாக பிரேம்ஜி மட்டுமே மிஞ்சியிருக்கார்.

நடிகர் ஜெய்
நடிகர் ஜெய்

.* மறுபடியும் ஏ.வி.எம் நிறுவனம் பட தயாரிப்பை தொடங்கப் போகிறார்கள். அதற்கான ஸ்கிரிப்ட்டை முக்கியமான இளம் டைரக்டர்களிடம் கேட்டு இருக்கிறார்கள். இந்த தடவை மூன்று சகோதரர்கள் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர்கள் தயாரிப்பில் கலந்து கொள்கிறார்கள். ஏ.வி.எம் சரவணன் இதற்கான முக்கியமான ஹீரோக்களிடம் பேசியிருக்கிறார். அதற்கு முன்னதாக பெரிய பட்ஜெட்டில் இல்லாமல் மீடியம் பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மறுபடியும் ஏ.வி.எம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

* சூர்யா - `சிறுத்தை' சிவாவின் `சூர்யா42' படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. இதற்கிடையே பாலாவின் படம் எப்போது மீண்டும் துவங்கும் எனவும் கேட்க ஆரம்பித்துள்ளனர். பாலாவின் கதையில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் ஸ்கிரிப்டை வேறு மாதிரியாக மாற்றிவிட்டார். அவர் முதலாவதாக செய்த ஸ்கிரிப்ட் அதிக உடல் உழைப்பை வேண்டுவதாக இருந்தது. அதிகம் சிரமப்பட்டார் சூர்யா.

சூர்யா
சூர்யா

அதை மாற்றப் போய் அதன் தொடர்ச்சியாக கதையிலும் சில மாற்றங்கள் செய்துவிட்டாராம். இதனால் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூர்யா இப்போது ரிலாக்ஸ் ஆகிவிட்டார். தொடர்ந்து பாலாவின் படத்தில் நடித்துவிட்டு வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டார். அவர் செல்லமாக வளர்த்து வரும் மாடும் இப்போது பக்கத்தில் கயிரே இல்லாமல் நடந்து வரும் அளவுக்கு பாசமாகப் பழக ஆரம்பித்துவிட்டதாம்.