Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலை வியந்த நடிகர்; தயாரானது கமலின் அடுத்த படத்தின் கதை!

கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்: இப்போது புது காதல் ஜோடிகளாக அந்த ஜோடியைச் சொல்கிறார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருக்கிறார்கள் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் கேட்கிறது.

கோலிவுட் ஸ்பைடர்: நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலை வியந்த நடிகர்; தயாரானது கமலின் அடுத்த படத்தின் கதை!

கோலிவுட் ஸ்பைடர்: இப்போது புது காதல் ஜோடிகளாக அந்த ஜோடியைச் சொல்கிறார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருக்கிறார்கள் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் கேட்கிறது.

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்

இன்னும் நாலைந்து படங்களில் நடித்து முடித்த பிறகு நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் பட உலகில் இருந்து விலகி விடாமல் தொடர்ந்து பட தயாரிப்புகளில் ஈடுபட போகிறார். இப்போது அவர், அட்லியின் இந்திப் படமான `ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். அதனால், அவர் தயாரிப்பதாக இருந்த படங்களை தொடங்காமல் தள்ளி வைத்துள்ளார். நயனின் கூடவே பாதுகாப்புக்காக விக்னேஷ் சிவன் சென்று வருவதால் இப்போது வேலைகள் போட்டது போட்டபடி நிற்கின்றன. அவர் சென்றுதான் நயனை வற்புறுத்தி சாப்பிட வைப்பதாகச் சொல்கிறார்கள். தன் மகளின் உடல்நலத்தில் அதிக அக்கறையுடன் செயல்படும் மருமகனின் மேல் நயனின் அம்மாவுக்கு பிரியம் அதிகமாகியிருக்கிறது. இதனால் விக்கியை `மகன்' என்றே அழைக்கிறாராம். இன்னொரு தகவல், விக்கி, தன் மனைவியை அன்பும் அக்கறையுமாக கவனித்துக் கொள்வதை பார்த்துவிட்டு ஷாருக் கானே ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

* விஷால் பொருளாதார பிரச்னையில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். இப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் 'மார்க் ஆண்டனி'க்கும் சரியான நேரத்திற்கு போகாமல் வீட்டிலேயே இருந்து விடுகிறாராம். அல்லது மிகவும் லேட்டாக வருவதால் உடன் இரட்டை வேடத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா டென்ஷன் ஆகிவிடுகிறாராம். அவர் இப்போது பல படங்களில் நடித்து வருவதால் மீண்டும் 'மார்க் ஆண்டனி'க்கு கால்ஷீட் கேட்கும் போது, அவரால் தேதி ஒதுக்க முடியாமல் போகிறதாம். படப்பிடிப்புக்கு வராமல் இழுத்து அடிப்பவர் மைசூர் போய் புனித்குமாரின் ஆசிரமத்திற்கு போய் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியிருக்கிறார். இதுதான் 'மார்க் ஆண்டனி தயாரிப்பாளரை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கி விட்டது என்கிறார்கள். இடையே உள்ள நண்பர்கள் விஷாலிற்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பெரிய விரிசலை குறைக்க பார்க்கிறார்கள். அது நடக்கவில்லையென்றால் விஷால் மறுபடியும் தயாரிப்பாளர் சங்கத்தின் படியேற வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ராஜ்கிரண் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அறிக்கைப் போர் நடத்தி வருகிறார். புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியர்கள் இப்போது ராஜ்கிரணின் மனைவியிடம் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். அனேகமாக அடுத்தடுத்த நாட்களில் நாங்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டோம் இடையில் நடந்தவை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் நடந்து விட்ட நிகழ்வு. மகளையும் மருமகனையும் ஆசீர்வதிக்கிறேன் என்று அறிக்கை வரப்போகிறது என பேசிக்கொள்கிறார்கள். அதற்கான பேச்சுக்கள் நடந்து வருகின்றன என்பதே உண்மை.

முனீஸ்ராஜா, ஜீனத் பிரியா, ராஜ்கிரண்
முனீஸ்ராஜா, ஜீனத் பிரியா, ராஜ்கிரண்

* சிவாஜி குடும்பத்திலிருந்து விக்ரம்பிரபு, துஷ்யந்த் என சிலர் சினிமாவிற்கு வந்துவிட்டனர். இந்தக் குடும்பத்திலிருந்து மேலும் இரண்டு வாரிசுகள் வரப்போகிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள். ராம்குமாரின் மகன் சினிமாவில் நுழைவதற்கான எல்லா பயிற்சிகளையும் முடித்து விட்டார் பெயர் மாற்றம் செய்து பெயருக்கு பின்னால் கணேசன் என்று முடிவதாக வைத்திருக்கிறார்கள். அவருடைய மகள் வயிற்று பேரன்களும் சினிமாவில் குதிக்கத் தயாராகி வருகிறார்கள். ஆக மொத்தத்தில் சிவாஜி குடும்பத்திலிருந்து அடுத்த வருடத்தில் நாலு பேராவது ஹீரோவாக இறங்கப் போவது நிச்சயம் என்கிறார்கள்.

* கோலிவுட்டில் பல நடிகர்களின் காதல் குறித்து தகவல் கிளம்பும் போதெல்லாம் முதலில் மறுப்பார்கள். பின்னர், அந்த தகவலை உறுதி செய்யும் விதத்தில் திருமணம் வரை செல்வார்கள். சினேகா - பிரசன்னாவில் இருந்து இப்போது கௌதம் கார்த்தி - மஞ்சிமா வரை நாம் பார்த்து வரும் காதல்கள்தான். இப்போது புது காதல் ஜோடிகளாக சித்தார்த்- அதிதிராவ் ஜோடியை சொல்கிறார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருக்கிறார்கள் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் கேட்கிறது.

வேட்டையாடு விளையாடு
வேட்டையாடு விளையாடு

* கௌதம் மேனன், கமல் கூட்டணியின் 'வேட்டையாடு விளையாடு 2' அடுத்தாண்டு துவங்குகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதை இதுதான் என ஒரு கதை கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் கமல் டெப்டி கமிஷனர் ராகவனாக இருப்பார். இரண்டாம் பாகத்தில் அவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகி விடுவார். அவரது மனைவியான ஆராதனா (ஜோதிகா) இதில் இறந்துவிடுவதாக கதையை அமைத்து இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற கமலிடம் புது வழக்கு ஒன்று விசாரிக்க வருகிறது. அது என்ன வழக்கு? கமல் விசாரணையில் கண்டுபிடித்தது என்ன? என்பதெல்லாம் மீதிக்கதை என்கிறார்கள்.