Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: கமலின் அடுத்த படத்துக்காக மூன்று ஹீரோக்கள்; அஜித் 61 - தயாராகும் டைட்டில்!

கோலிவுட் ஸ்பைடர்

கோலிவுட் ஸ்பைடர்: மாதத்தில் பாதி நாட்கள் மும்பையில் இருக்கிறார் விஜய் சேதுபதி. மூன்று படங்களில் நடித்து வருவதால் இந்த ஏற்பாடு. அவருக்காக பிரமாண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு தனி பிளாட்டையே ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்: கமலின் அடுத்த படத்துக்காக மூன்று ஹீரோக்கள்; அஜித் 61 - தயாராகும் டைட்டில்!

கோலிவுட் ஸ்பைடர்: மாதத்தில் பாதி நாட்கள் மும்பையில் இருக்கிறார் விஜய் சேதுபதி. மூன்று படங்களில் நடித்து வருவதால் இந்த ஏற்பாடு. அவருக்காக பிரமாண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு தனி பிளாட்டையே ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார்கள்.

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்

கிட்டத்தட்ட அரசியலை மறந்து விட்டார் கமல். தொடர்ந்து படங்கள் தயாரிப்பதிலும், நடிப்பதிலும், பிறர் நடிக்க படங்கள் தயாரிப்பதிலும், ஆர்வமாக இருக்கிறார். அடுத்தடுத்து மல்டி ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் ஸ்கிரிப்ட்கள் அவரிடம் தயாராக இருக்கிறது. இதற்காக சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என மூன்று பேரிடம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தி.மு.கவோடு கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவருக்கும் சேர்த்து குறிப்பிடத்தக்க அளவுக்கு போட்டியிட இடங்கள் பெற்றுத் தருவதாக பேசி வருகிறார்கள். இந்த தேர்தலுக்கு நாடாளுமன்றத் தொகுதிகள் ஜனத்தொகையை பொறுத்து உயரும் என மத்திய அரசு அறிவித்திருப்பது ஞாபகத்தில் இருக்கலாம். அதனால் கமல் கட்சிக்கான சீட்கள் ஒதுக்குவது சுலபம் எனப் பேசிக்கொள்கிறார்கள். 'விக்ரம்' படத்திலிருந்து வீறு நடை போடுகிறார் கமல்.

சூர்யா, கமல்
சூர்யா, கமல்

சிவகார்த்திகேயனுக்கு இருந்த கடன்களை எல்லாம் அடைத்துவிட்டார். முன்பு 'சீம ராஜா' செய்த வகையில் தான் அவருக்கு பெரும் பிரச்னை வந்து சேர்ந்தது. அதன் பிறகான வெற்றிகள் வந்த பிறகு, சொந்தத் தயாரிப்பில் அவரே கவனம் செலுத்தி வருகிறார். லைகா, விஷாலின் கடன்களுக்கு பொறுப்பேற்று கொண்ட மாதிரி சிவகார்த்திகேயன் கடன்களையும் ஏற்றுக்கொண்டு செட்டில் செய்து விட்டது. விஷால் மாதிரி இல்லாமல் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்கள் விரைவாக செய்து கொடுப்பதன் மூலம் நல்ல பெயரை சம்பாதித்து விட்டார். கௌதம் மேனனுக்கு ஒரு ஐசரி கணேஷ் கிடைத்த மாதிரி, சிவகார்த்திகேயனுக்கு சுபாஸ்கரன் கிடைத்துவிட்டார். தொடர்ந்து வருஷம் ஒரு படம் சொந்த படமாகவும், மீதி மூன்று படங்களை ஒன்று லைகா, மற்றவை பிற கம்பெனிகளுக்கு ஒதுக்கி விட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* எழுத்தாளர் ஜெயமோகனின் 'வெண்கடல்' சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'கைதிகள்' கதை படமாகிறது. அறிமுக இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கும் இப்படத்தை கமலின் 'விக்ரம்' படத்தை தயாரித்த டர்மெரிக் மீடியா, ஆஹா தமிழ் ஒடிடி இரண்டும் இணைந்து தயாரிக்கிறது. ''இது படத்தின் கதை 'கைதிகள் கதையை தழுவிய கதையாகும். டைட்டில், நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.'' என்கிறார் தயாரிப்பாளரான அனிதா மகேந்திரன்.

அஜித்
அஜித்

* அஜித்தின் பெயரிடப்படாத 'அஜித் -61' படத்தின் ஷூட்டிங் வைசாக்கில் நடந்து. அதனைத் தொடர்ந்து ஒரிசாவில் நடந்த நிலையில் திடீரென படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுவிட்டார்கள். அஜித்தோ பைக்கில் லடாக், இமயமலை என ரிலாக்ஸ் ட்ரிப் அடிக்க சென்று விட்டார். பொதுவாக படப்பிடிப்பில் முழுக்க கவனம் செலுத்தும் அவர், இப்படி ஷூட்டிங் நடுவே பைக்கில் கிளம்பிப் போனது ஏன் என பலரும் திகைக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர், 'அன்பான'வரிடம் ஃபைனான்ஸ் வாங்கித்தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் என்றும் அவர் ஒவ்வொரு ஷெட்யூல் ஆகும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை ரிலீஸ் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். இன்னொன்றையும் சொல்கிறார்கள். சமீபத்திய ரெய்டுக்கு பிறகு அவர் யாருக்கும் பணத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்கிறார். அவரிடமிருந்து பணம் வந்த பிறகுதான் படப்பிடிப்பை மீண்டும் துவங்குவார்கள் என்கிறார்கள். இப்படி பேச்சுக்கள் எழுந்த நிலையில் விரைவில் படத்தின் டைட்டிலையும் அறிவிக்க திட்டமிட்டும் வருகிறார்களாம்.

* மாதத்தில் பாதி நாட்கள் மும்பையில் இருக்கிறார் விஜய் சேதுபதி. மூன்று படங்களில் நடித்து வருவதால் இந்த ஏற்பாடு. அவருக்காக பிரமாண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு தனி பிளாட்டையே ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார்கள். அதிலேயே தங்கிக் கொள்கிறார். தமிழ்நாட்டு உணவுக்காக சமையல்காரர் ஒருவர் அவருக்கு உணவை தயாரிக்கிறார். இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னைக்கு வந்து குழந்தைகளோடு இருந்துவிட்டு ஞாயிறு இரவே மும்பைக்கு பயணமாகி விடுகிறார். அவரது நடிப்பு வகை அங்கே பிரபலமாகி வருகிறதாம். அங்கே மல்டி ஸ்டார் வகை படங்கள் சாதாரணம் என்பதால் அவர் மேலும் அங்கே ஒப்பந்தமாகிறார். தமிழ் படங்கள், இந்தி படங்களென 50/50 என பாதி பாதியாக அவர் நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

தனுஷ்
தனுஷ்

* தனுஷ் 'திருச்சிற்றம்பலம்' வெற்றியில் உற்சாகமாகிவிட்டார். ஆனால் அவர் அந்தப் படத்தை இயக்குநராகவே இருந்துக் கொண்டு நடித்ததை எல்லோரும் கண்கூடாக பார்த்தார்கள். கமலும் இது மாதிரி ஒரு டைரக்டரை மேற்பார்வையாளராக வைத்துக் கொண்டு முழு படத்தையும் தன் கண்ட்ரோலில் வைப்பார். இதனால் அடுத்து பெரிய பட்ஜெட்டில் அவர் டைரக்சனிலேயே ஒரு படம் செய்து தருமாறு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் அவரை கேட்டுக் கொண்டிருக்கிறது. ரெடியாகி விட்டார் தனுஷ். இதில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க நண்பர்கள் சிம்பு, விக்ரமை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல்.

* முன்பு சிம்புவுக்கு இருந்த கெட்டப்பெயர் இப்போது விஷாலுக்கு ஒட்டிக்கொண்டுவிட்டது. விஷால் இப்போது நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்புக்கு அவர் வராமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் பல நாட்கள் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டம் எனவும் சொல்கிறார்கள். விஷால் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுக்கவும் ரெடியாகி வருதாக தகவல். ஏற்கெனவே லைகா விவகாரத்தில் இன்னமும் அவர் மெத்தனமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு. `விஷாலுக்கு என்னாச்சு?' என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.