Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: சிம்பு எடுத்த புது முடிவு டு திருமணத்துக்கு ஓ.கே சொன்ன கதாநாயகி வரை

கோலிவுட் ஸ்பைடர்: ரஜினி, சிம்பு

கோலிவுட் ஸ்பைடர்: தனுஷ்-ஐஸ்வர்யா இருவர் குறித்த செய்திகளால் அப்செட் ஆகியிருக்கிறார் தனுஷ்.

கோலிவுட் ஸ்பைடர்: சிம்பு எடுத்த புது முடிவு டு திருமணத்துக்கு ஓ.கே சொன்ன கதாநாயகி வரை

கோலிவுட் ஸ்பைடர்: தனுஷ்-ஐஸ்வர்யா இருவர் குறித்த செய்திகளால் அப்செட் ஆகியிருக்கிறார் தனுஷ்.

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்: ரஜினி, சிம்பு

கோலிவுட் ஸ்பைடர்:

* தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து விட்டதாகவும் மறுபடியும் சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதில் அதிகமும் தனுஷ் நொந்து போய்விட்டாராம். இதில் மக்களுக்கு விவரம் தெரிய ஒரு சிறிய அறிக்கை கொடுக்கலாம் என அவரின் நண்பர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டாம் என அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம் தனுஷ். இதற்கு ஒரே மாற்று என அதிகமாக நடிப்பதுதான் என நினைத்து விட்டார். எனவே இப்போது அவர் வரிசையாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா தரப்பிலிருந்து இந்த இணைப்பை விரும்புகிறார்கள் என்பது உண்மை. தனுஷ் தரப்பிலிருந்து இதற்கான எந்த ஆதரவும் இல்லையாம். முன்பே இந்த திருமணம் எவ்வளவு தூரம் சரியாக வரும் என குடும்பம் நினைவூட்டியதை இப்போதும் தனுஷிடம் ஞாபகப்படுத்துகிறார்களாம். இனி ஒரு நாளும் சேரப்போவதில்லை என தனுஷ் உறுதியாக நிற்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

ரஜினி, ஐஸ்வர்யா, தனுஷ்
ரஜினி, ஐஸ்வர்யா, தனுஷ்

* விஜய், அஜித் இருவருமே இப்போது வெளியிடங்களுக்கு வருவதில்லை. பத்திரிகையாளர்கள் யாருக்கும் இவர்களோடு எந்தப் பேச்சுவார்த்தையும், தொடர்பும் இல்லாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். அஜித் வெளி உலகில் சரளமாக வந்து போகாமல் இருப்பது அவருக்கு புகழ் கூட்டுவதாக கருதிக் கொண்டு விஜய், தனுஷ் போன்றவர்களும் அதையே இப்போது கடைபிடிக்கிறார்கள். இதில் இப்போது புதிதாக சூர்யாவும் சேர்ந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தி பட உலகின் ஸ்டார் நடிகர்களான சல்மான், ஷாருக் போன்றவர்கள் அவர்களின் பட வெளியீட்டின்போது மக்களைச் சந்திக்கிறார்கள் இங்கே அதுவும் இல்லை என கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.

* சிம்பு ரொம்பவும் மாறிவிட்டார். இதற்கு முன்னால் அவர் வீட்டில் கூட தங்குவதில்லை. ஹோட்டலில் தான் தங்கினார். வார இறுதி நாட்களில் மட்டும் வந்து அம்மா, அப்பாவை பார்த்துவிட்டுப் போவார். இப்போது ஹோட்டலிலிருந்து வீட்டிற்கு வந்து விட்டார். அப்பாவைக் கூடவே இருந்து கவனிக்கிறார். மெடிக்கல் செக்கப்பிற்கு அப்பாவை அழைத்துப் போவதும் அவர்தான்.

 சிம்பு
சிம்பு

அப்பா இரண்டு மாதத்திற்கு வெளியே வராமலும், கூட்டத்திற்கு மத்தியில் சென்று விடாமலும் இருக்க மருத்துவர்கள் எச்சரித்து இருந்தார்கள். அதைக் கண்டிப்புடன் சிம்பு அப்பாவை கடைபிடிக்க வைக்கிறார். இதற்கு நடுவில் படப்பிடிப்புக்கு நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கிறார். அவரது நண்பர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இதுதான் இப்போது ஆச்சரியம். இதோடு அவர் கல்யாணமும் செய்து கொண்டு விட்டால் போதும் என நினைக்கிறார்கள் சிம்புவின் பெற்றோர்கள்.

* கௌதம் மேனனை காப்பாற்றியது போல சிவகார்த்திகேயனையும் லைகா நிறுவனம் காப்பாற்றிவிட்டது. கிட்டத்தட்ட கடனை நெருக்கி முடிக்கிற அளவுக்கு வந்துவிட்டார் சிவா. வருடத்திற்கு ஒரு படமாவது லைகாவிற்கு செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவரது மொத்த கடனையும் க்ளியர் செய்வதாக லைகா சொல்லிவிட்டது. இதனால் அவரது ஈ.சி.ஆர் வீடு தப்பிவிட்டது என்கிறார்கள். இப்போதைக்கு தனது நிறுவனத்தில் படம் தயாரித்தாலும், அதன் பின்னால் லைகா இருப்பது மாதிரி பார்த்துக் கொள்கிறார். விஷால் போல் இல்லாமல் சுமுகமாக எல்லோரிடமும் நடந்து கொள்வதால் எல்லாமே அவருக்கு சுபமாக முடிந்து விட்டது. எல்லாமே பையன் பிறந்த யோகம் என்கிறார்கள்.

வரலட்சுமி
வரலட்சுமி

* வரலட்சுமி சரத்குமாருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அடுத்து தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் இப்போது திருமண ஏற்பாட்டிற்கு ஓ.கே சொல்லிவிட்டார். நீண்ட நாள் இருந்த காதலும் கல்யாணத்தில் முடியாத காரணத்தால் அவரைக் கல்யாணத்திற்கு அணுக அவரது தங்கையின் பொருட்டு சம்மதம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அப்பா சரத்குமார் ஒரு பக்கம் மாப்பிள்ளை தேட, அம்மா சாயா மறுபக்கம் மாப்பிள்ளை தேடுகிறார்கள். ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு திரும்பப் போகிறார் வரலட்சுமி.