Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல் டீமின் ப்ளான்; இயக்குநரை தட்டிக்கொடுத்த அஜித்; தனுஷ் எடுத்த புது முடிவு!

கோலிவுட் ஸ்பைடர்

இந்த வாரம் கோலிவுட் ஸ்பைடரில் தனுஷின் புது முடிவு, வெற்றிமாறனின் வாடிவாசலுக்காக ஈ.சி.ஆர் செல்லும் சூர்யா, பட புரமோஷனுக்கு கண்டிசனோடு வந்த நடிகர், நடிகை என பல எக்ஸ்க்ளூசிவ் செய்திகள்!

கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல் டீமின் ப்ளான்; இயக்குநரை தட்டிக்கொடுத்த அஜித்; தனுஷ் எடுத்த புது முடிவு!

இந்த வாரம் கோலிவுட் ஸ்பைடரில் தனுஷின் புது முடிவு, வெற்றிமாறனின் வாடிவாசலுக்காக ஈ.சி.ஆர் செல்லும் சூர்யா, பட புரமோஷனுக்கு கண்டிசனோடு வந்த நடிகர், நடிகை என பல எக்ஸ்க்ளூசிவ் செய்திகள்!

Published:Updated:
கோலிவுட் ஸ்பைடர்

* `அந்நியன்', `தசவதாரம்' உள்பட பெரிய படங்களைத் தயாரித்தவர் 'ஆஸ்கார் பிலிம்ஸ்' ரவிச்சந்திரன் கடந்த ஏழு ஆண்டுகளாகவே சினிமா தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். 'ஆஸ்கார் பிலிம்'ஸின் சரிவு பலரையும் திகைக்க வைத்தது. முகமே வெளிக்காட்டாமல் இருந்ததால் சினிமா உலகில் இருக்கும் பலருக்குமே அவர்தான் ரவிச்சந்திரன் எனத் தெரியாது. 'சரி இப்போது அவருக்கென்ன?' என கேட்கிறீர்களா.. பழைய பிரச்சனைகளை தள்ளி வைத்துவிட்டு விரைவில் படம் ஒன்றை தயாரிக்கப் போகிறார் ரவிச்சந்திரன். இதனால் கே.கே நகரில் உள்ள அவரது ஆபீஸ் களைகட்டியிருக்கிறது. ரொம்ப நாளாகவே ஆஸ்கர் பிலிம்ஸ் - ரஜினி காம்பினேஷன் பேசப்பட்டு வருகிறது. அது கைகூடலாம் என்கிறார்கள்.

ரஜினி காந்த்
ரஜினி காந்த்

* இப்போது மறுபடியும் கதை கேட்கத் தொடங்கிவிட்டார் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். அவர்களே பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதற்காக கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்னும் அடுத்தகட்ட இயக்குநர்களிடம் செல்லலாமா என்றும் யோசித்து வருகிறார்கள். வீட்டில் குணமடைந்து வரும் விஜயகாந்தின் ஆலோசனைப்படிதான் இந்த ஏற்பாடு நடந்து வருகிறதாம். தொற்று எதுவும் ஏற்பட்டுவிடாமல் கேப்டன் பாதுகாப்பில் இருப்பதால்தான் இயக்குநர்களோடு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனச் சொல்லப்படுகிறது. விரைவில் சண்முகபாண்டியனின் பெரிய பட அறிவிப்பு வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சண்முக பாண்டியன்
சண்முக பாண்டியன்

`வலிமை' கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் என்பதால் இயக்குநரை மாற்றி விடுவார்கள் என ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலா வந்தது. அஜித் உடனே வினோத்தை அழைத்து, 'இதை எதையும் நீங்கள் மனதில் போட்டுக்கொள்ள வேண்டாம். உங்கள் ஒர்க்கை தொடருங்கள். நீங்கள் தான் இந்த படத்தின் டைரக்டர்.' எனச் சொல்லிவிட்டாராம். ஆனந்தமாக இருக்கிறார் வினோத்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* தன் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாததால் அப்செட்டில் இருக்கிறார் தனுஷ். அதனால் கதை கேட்டு முடிவு செய்யும் குழுவில் தன் அண்ணன் செல்வராகவனையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார். கூடவே நண்பர் அமீரின் ஆலோசனையையும் கேட்டு நடக்க முடிவு செய்திருக்கிறாராம். இனி கதை கேட்பது இவர்களுக்கு இடையே தான் நடக்கும் என்கிறார்கள். இதனிடையே அடுத்த வருடம் தனுஷுக்கு திருமணம் செய்து விடலாமா என்று பேச்சு எழுந்திருக்கிறது. `மூச்' என தடை போட்டு விட்டார் தனுஷ்.

தனுஷ், செல்வராகவன்
தனுஷ், செல்வராகவன்

* இயக்குநர் சங்கத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததில் இருந்து, வருத்தத்தில் இருக்கிறார் பாக்யராஜ். ''கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. எழுத்தாளர் சங்கத்தில் உழைத்த உழைப்பு இங்கே பிரதிபலிக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், அது இங்கே எடுபடவில்லை'' என தன் நெருங்கிய நட்பு வட்டத்தில் சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறாரம்.

கமல், லோகேஷ்
கமல், லோகேஷ்

* கமல், லோகேஷ் கூட்டணியின் 'விக்ரம்' படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டது. அதன் கடைசி நாள் ஷெட்யூலில் கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்றெல்லாம் புகைப்படங்கள் வெளியாகின அல்லவா? அப்புறம் ஏன் படத்தின் ரிலீஸை ஜூனுக்குத் தள்ளி வைத்தார்கள் என விசாரித்ததில்.. புதுத்தகவல் வருகிறது. படப்பிடிப்பு வேலைகள் இன்னும் பத்து நாள் இருக்கிறது என்கிறார்கள். மேலும் பேட்ச் ஒர்க்குகள் இருக்கின்றனவாம். அனேகமாக இம்மாத கடைசியில் தான் படப்பிடிப்புகள் நிறைவு பெறும் என்கின்றனர். அதனால்தான் ரிலீஸை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்ததாகச் சொல்கிறார்க

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* மிஷ்கினின் 'பிசாசு2' படம் கடந்த ஆண்டு, தண்ணீர் தொட்டிக்கு வெளியே இரண்டு கால்கள் தரையை தொட்டபடி இருக்கும் பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு 'திரையரங்குகளில் 2021' என அறிவித்திருந்தனர். ஆனால் இன்னமும் படத்தின் ரிலீஸ் குறித்து மௌனம் காத்து வருவதன் பின்னணியை விசாரித்தால்.. அதிர வைக்கிறார்கள். படத்துக்காக ரிஸ்க் எடுத்து ஆண்ட்ரியா நடித்திருந்தாலும் அவருக்கு இன்னும் சம்பள பாக்கி இருப்பதால், டப்பிங் வராமல் இருக்கிறாராம். அதனால்தான் பட வெளியீடு தாமதம் ஆகிறது என்ற தகவல் கோலிவுட்டில் ஓடுகிறது.

பிசாசு 2
பிசாசு 2

* 'பாகுபலி'க்குப் பிறகு சத்யராஜ் நடித்த படமொன்று சீனாவில் வெளியாகியிருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' சீனா மொழியில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒரு தென்னிந்திய நடிகர் நடித்த இரண்டு படங்கள் சீன மொழியில் வெளியாகியிருக்கிறது என்ற பெருமை சத்யராஜுக்கு கிடைத்திருக்கிறது. இதற்காகஷ சத்யராஜை பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.

‘வாடிவாசல்’ திரைப்படம்
‘வாடிவாசல்’ திரைப்படம்

* வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்திற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. வரும் வாரத்தில் ஈ.சி.ஆரில் படத்திற்கான டெஸ்ட் ஷூட் நடக்க உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளுடன் போஸ்டர் டிசைனுக்கான ஷூட்டில் சூர்யாவும் பங்கேற்கிறார். 'வாடி வாசல்' மூலம் வெற்றிமாறனின் உதவியாளராக வேலை செய்யப் போகிறார் நடிகர் கருணாஸ்.

* பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படம் வெளிநாட்டில்தான் அதிகளவில் படமாக்கப்பட்டது. அங்கே பிரபாஸுக்கும், பூஜா ஹெக்டேவுக்கு முட்டிக்கிச்சு. அதன் பனிப்போர் படத்தின் புரோமோஷன்களிலும் வெளியானது. அதாவது 'பிரபாஸைப் பற்றி பூஜா..'வும் 'பூஜாவை பற்றி பிரபாஸும்' கேள்விக்கு இருவருமே அவாய்டு செய்துவிடுவோம் என முன்பே சொல்லிவிட்டுத்தான் புரோமோஷனுக்கே வந்திருக்கிறார்கள் என்ற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism