Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: `வாரிசு' ஷூட்டிங் அப்டேட்; `விக்ரம்' படத்தில் ஃபகத், அடுத்த படத்தில் மம்மூட்டி?

கமல் - மம்மூட்டி

இந்த வாரம் கோலிவுட்டில் என்ன ஸ்பெஷல்? 'விக்ரம்' வெற்றிக்குப் பிறகு அடுத்த கமல் படத்தின் அப்டேட், 'வாரிசு' ஷூட்டிங் குறித்த அப்டேட், தெலுங்கில் சிரஞ்சிவி படம் குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல். இதோ...

கோலிவுட் ஸ்பைடர்: `வாரிசு' ஷூட்டிங் அப்டேட்; `விக்ரம்' படத்தில் ஃபகத், அடுத்த படத்தில் மம்மூட்டி?

இந்த வாரம் கோலிவுட்டில் என்ன ஸ்பெஷல்? 'விக்ரம்' வெற்றிக்குப் பிறகு அடுத்த கமல் படத்தின் அப்டேட், 'வாரிசு' ஷூட்டிங் குறித்த அப்டேட், தெலுங்கில் சிரஞ்சிவி படம் குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல். இதோ...

Published:Updated:
கமல் - மம்மூட்டி

* விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாள்களோடு இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைகிறது. இப்போது ஸ்டன்ட் சீக்குவென்ஸ்களைப் படமாக்கியதைத் தொடர்ந்து சரத்குமார், குஷ்பு உள்பட, அனைத்து ஆர்ட்டிஸ்ட்களின் காம்பினேஷன் சீன்களை எடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பையும் சென்னையிலோ அல்லது ஹைதராபாத்திலோ எடுக்கத் திட்டமிட்டு வருகின்றனர். மூன்றாவது ஷெட்யூலுக்கான செட் ஒர்க்குகள் எதுவும் இன்னும் சென்னையில் துவங்கப்படாமல் உள்ளதால் ஹைதராபாத்தில்தான் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வாரிசு விஜய்
வாரிசு விஜய்

* 'விக்ரம்' 400 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்திருப்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார் கமல். அடுத்து அவர் நடிக்கப் போவது ‘இந்தியன் 2‘ படம்தான் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால், அது இல்லையாம். 'விஸ்வரூபம் 2' படத்தின் எடிட்டரும், ஃபகத் ஃபாசில் நடித்த 'மாலிக்' படத்தின் இயக்குநருமான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். 'விக்ரம்' போலவே இது ஒரு மல்டிஸ்டாரர் படமாக வேண்டும் என்பதற்காக இதில் கமலுடன் மம்மூட்டியை நடிக்க வைக்கப் பேசி வருகிறார்கள். அவரும் கதையைக் கேட்டுவிட்டதாகவும் ஆனால், அவர் தரப்பில் பதில் இன்னும் வரவில்லை என்றும் சொல்கிறார்கள். மகேஷ் படத்தை முடித்த பின்பே, 'இந்தியன் 2'வை முடித்துக் கொடுக்கிறார் கமல். இதற்கிடையே பிக் பாஸ் அடுத்த சீசனையும் கமலே நடத்த இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வந்ததை போல, சுந்தர்.சி. வீட்டிலிருந்தும் ஒரு ஹீரோயின் ரெடியாகி வருகிறார். யெஸ். குஷ்பு- சுந்தர்.சி.யின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் என்ட்ரி ஆக ரெடியாகிறார். லண்டனில் படித்தவர், இப்போது சினிமாவிற்காக நடிப்பு, டான்ஸ் இரண்டையும் கற்று வருகிறார். மகள் அவந்தியை தங்கள் பேனரிலேயே அறிமுகப்படுத்தலாமா அல்லது வேறு தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க வைக்கலாமா என சுந்தர்.சி யோசித்து வருவதாகவும் தகவல்.

மகள்களுடன் குஷ்பு - சுந்தர்.சி
மகள்களுடன் குஷ்பு - சுந்தர்.சி

* அந்த சூப்பர் ஹீரோ நடிப்பில் படுஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தை வேறு ஒரு ஹீரோவை வைத்து எடுக்கவுள்ளார் சீனியர் இரண்டெழுத்து இயக்குநர். முதல் பாகத்தில் ஹீரோயின்கள் பேசப்பட்டது போலவே, இதிலும் இரண்டு ஹீரோயின்களாம். ஒரு ஹீரோயின் கமிட் செய்யப்பட்ட நிலையில், அடுத்து கதையின் நாயகியாகத் தெலுங்கில் அசத்திவரும் ‘ராக’ நடிகையிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் இயக்குநர். கதையைக் கேட்ட நடிகை பல இடங்களில் கரெக்ஷன்களைச் சொல்லவும், இயக்குநர் கடுப்பாகித் திரும்பிவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

காட்ஃபாதர்
காட்ஃபாதர்

* தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்து வரும் 'லூசிபர்' ரீமேக்கான 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பிசினஸ் பற்றி டோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கிறது. படத்தில் சல்மான் கான் நடிக்க வருவதற்கு முன்னர் ரூ.150 கோடிக்கு மட்டுமே படம் பிசினஸாக இருந்ததாகவும் படத்திற்குள் சல்மான் கான் வந்த பின், பிசினஸ் பெரிய அளவில் (ரூ.500 கோடியாம்) அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. சிரஞ்சிவியின் படத்தில் சல்மான் நடித்து வருவது போல, சல்மானின் இந்திப் படத்தில் ராம் சரண் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.