Published:Updated:

கூகுள் குட்டப்பா - சினிமா விமர்சனம்

கூகுள் குட்டப்பா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கூகுள் குட்டப்பா - சினிமா விமர்சனம்

பிக் பாஸ் தர்ஷனுக்கு நடிகராக முதல் படம். காட்சிகள் கேட்கும் உணர்ச்சிகளைக் கொண்டு வருவதில் சிக்கல்கள் பெரிதாக இல்லை.

கூகுள் குட்டப்பா - சினிமா விமர்சனம்

பிக் பாஸ் தர்ஷனுக்கு நடிகராக முதல் படம். காட்சிகள் கேட்கும் உணர்ச்சிகளைக் கொண்டு வருவதில் சிக்கல்கள் பெரிதாக இல்லை.

Published:Updated:
கூகுள் குட்டப்பா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கூகுள் குட்டப்பா - சினிமா விமர்சனம்

வயதான அப்பாவைப் பார்த்துக்கொள்ள முடியாத மகன், ரோபோ ஒன்றை அவரின் உதவிக்கு விட்டுச் செல்ல, அதற்கும் அப்பாவுக்கும் உருவாகும் பாசப்பிணைப்பே இந்த ‘கூகுள் குட்டப்பா.’

கொங்கு மண்டல கிராமம் ஒன்றில் தோப்பு, வீடு வைத்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மருந்துக்குக்கூடச் செலவு செய்யாத மனிதர். தன் மகன் தர்ஷன் ரோபோட்டிக்ஸ் படித்திருந்தாலும் சொந்த ஊரிலேயே வேலை பார்க்குமாறு வற்புறுத்துகிறார். ஒரு கட்டத்தில் புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனத்தில் தர்ஷனுக்கு வேலை கிடைக்க, அங்கே பறந்துவிடுகிறார்.

இடையில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என அழைப்பு வர, தன் நிறுவனம் தயாரித்த ரோபோ ஒன்றை அவரின் உதவிக்கு விட்டுச் செல்கிறார் மகன். அந்த ரோபோவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஒருவித பாசப்பிணைப்பு உருவாக, அதனால் நடக்கும் விபரீதங்கள்தான் படம்.

கூகுள் குட்டப்பா - சினிமா விமர்சனம்

மலையாளப் படமான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’-ஐ சிற்சில மாற்றங்களுடன் தமிழ்ப் பரப்புக்கு ஏற்றவாறு ரீமேக் செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சபரி - சரவணன். காமெடிக்கு யோகி பாபு, தர்ஷனின் காதலியாக லாஸ்லியா, காமெடியா, சீரியஸா எனத் தெரியாத வில்லனாக பிராங்க்ஸ்டர் ராகுல், சீரியஸ் வில்லன்களாக சுரேஷ் சந்திர மேனன், மாரிமுத்து என ஒரு பட்டாளமே நடித்திருந்தாலும் எல்லோரையும் ஓரங்கட்டுவது கே.எஸ்.ரவிக்குமார்தான். மலையாள வெர்ஷனில் சூரஜ் வெஞ்சரமூடு செய்ததை அப்படியே பிரதியெடுக்காமல், தனக்கே உரிய நக்கல், நையாண்டி பாணியில் சுப்பிரமணி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். ஒரு நடிகராக கே.எஸ்.ரவிக்குமாருக்கு இது மைல்ஸ்டோன் பாத்திரம்.

பிக் பாஸ் தர்ஷனுக்கு நடிகராக முதல் படம். காட்சிகள் கேட்கும் உணர்ச்சிகளைக் கொண்டு வருவதில் சிக்கல்கள் பெரிதாக இல்லை. ஆனால், அவரின் இலங்கை வட்டார மொழிதான் கொங்குத் தமிழுக்குக் கொஞ்சமும் பொருந்தவில்லை. இலங்கைத் தமிழராகவே வரும் லாஸ்லியாவுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. யோகி பாபுவின் காமெடி லைனர்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவைத்தாலும், இன்னமும் உருவக்கேலி காமெடியிலிருந்து அவர் வெளியே வராமல் இருப்பது நெருடல். பிராங்ஸ்டர் ராகுல் ஓவரோ ஓவர் ஆக்டிங்.

கூகுள் குட்டப்பா - சினிமா விமர்சனம்

ஜிப்ரானின் இசையில் ‘யாரோ யாரோ’ பாடலும், அது படமாக்கப்பட்ட விதமும் உணர்வுகளின் சங்கமம், பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

தமிழுக்கு ஏற்றவாறு மாற்றுகிறேன் என சில கதாபாத்திரங்களை வம்படியாக இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்ற வரையறைகளுக்குள் கொண்டு வந்தது ஒரு ஃபீல்குட் டிராமாவின் யதார்த்த தன்மையைச் சிதைக்கிறது. சிலபல குறைகளைக் கடந்து கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்புக்காக மட்டும் ‘என்றென்றும் நன்றிகள்’ சொல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism