Published:Updated:

உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்ட அனுபவம்! #MyVikatan

Shooting
News
Shooting

ஆனந்த விகடனுக்கு சிறுகதை எழுதி நம் கதை விகடனில் பிரசுரமானால் அந்தக் கதையை இயக்குனரிடம் காட்டி உதவி இயக்குனராக சேர்ந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து சிறுகதைகள் எழுதி அனுப்புவேன்.

பாரதிராஜா என்னும் நடிகனை வெளி கொண்டு வந்த ஆக சிறந்த படம் . சில காரணங்களால் பாரதிராஜாவிற்கு இப்படத்திற்கு தேசிய விருது நிராகரிக்கப்பட்டது என்று குரங்கு பொம்மை படத்தை பற்றி முகநூலில் உள்ள ஒரு சினிமா குழுவினர் எழுதியிருந்தனர். இந்த வரிகளை பார்த்ததும் குரங்கு பொம்மை படம் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.

செப்டம்பர் 1ம் தேதியை என்னால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. ஏனென்றால் இந்த தேதியில் தான் "குரங்கு பொம்மை" என்கிற அற்புதமான திரைப்படம் வெளியானது. ப்ளூ சட்டை மாறனே இதுதான் உண்மையான உலக சினிமா என்று பாராட்டி இருந்தார். அவரே பாராட்டி விட்டார் படத்தை பார்ப்போம் என்று பேராவலுடன் படத்தை பார்த்தேன். படத்தின் தொடக்க காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை அவ்வளவு சுவாரஸ்யம். ப்பா... யாருடா இந்த இயக்குனர் என்று வியக்கும் வகையில் மிரட்டியிருந்தார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

நான் லீனியர் திரைக்கதை நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படி எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக குமாரவேல், கல்கிராஜா, பாரதிராஜா, பிஎல் தேனப்பன் ஆகியோர் கதாபாத்திரங்கள் அவ்வளவு சிறப்பாக எழுதப்பட்படிருக்கும். அப்படிபட்ட படத்தை இந்த தமிழ் சமூகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கும்போது தான் வருத்தமாக இருக்கிறது. சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை பிரிவில் தேசிய விருது பெற்றிருக்க வேண்டியது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.

குரங்கு பொம்மை
குரங்கு பொம்மை

குரங்குபொம்மை படம் பார்த்து முடிந்ததும் இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவரிடம் சேர வேண்டுமென்றால் அவரை இம்பிரெஷ் செய்ய வேண்டும். ஆனால் எப்படி செய்வதென்று தெரியவில்லை. குறும்படம் எடுத்து இம்ப்ரெஷ் செய்ய என்னிடம் போதிய பணம் இல்லை... குறும்படம் எடுப்பதற்கான கதையும் இல்லை. ஆனந்த விகடனுக்கு சிறுகதை எழுதி நம் கதை விகடனில் பிரசுரமானால் அந்தக் கதையை இயக்குனரிடம் காட்டி உதவி இயக்குனராக சேர்ந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து சிறுகதைகள் எழுதி அனுப்புவேன். அதில் ஒரு சிறுகதை கூட பிரசுரமானது இல்லை. இப்போது அந்த சிறுகதைகளை படித்து பார்த்தால் அவ்வளவு அமெச்சூர்டாக இருக்கிறது.

வேறு வழியை யோசித்தேன்

குரங்குபொம்மை படத்தை லேப்டாப்பில் ஏற்றி அதை சீன் பை சீனாக பார்த்து படத்தின் சீன்களை அப்படியே திரைக்கதை புத்தக வடிவத்துக்கு மாற்றினேன். முழுப்படத்திற்கும் திரைக்கதை புத்தகம் உருவாக்கிவிட்டேன். அதை இயக்குனருக்கு அனுப்பி அவரிடம் உதவி இயக்குனர் சான்ஸ் கேட்டேன். (பாலுமகேந்திராவிடம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இந்த முறையை பின்பற்றி தான் உதவி இயக்குனர் வாய்ப்பை பெற்றார். ) ஆனால் அந்த முயற்சியும் பெரிதாக எடுபடவில்லை. குடும்ப சூழலும் ஒத்துழைக்காததால் நமக்கு சினிமா செட் ஆகாது... என்றுணர்ந்தேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்து முழுவதுமாக மறைந்தது. சினிமாவில் சாதிக்க மிக மிக மிக கடுமையான உழைப்பு தேவை என்பது புரிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஒவ்வொரு காட்சியும் ஒரு சிறுகதையை போல, ஒருபக்கக் கதையை போல அமைய வேண்டும் என்று எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருப்பார்.

"பீச் காத்து பார்சல் என்ன வில...?", "எதிர்காலம் கவர் போட்டு வித்திடும்டா தாய்ப்பால..." போன்ற வரிகள் இந்தப் படத்தில் உள்ள "பீச் காத்து" பாடலில் இடம்பெற்றிருக்கும். நா.முத்துக்குமாரின் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. நா. முத்துக்குமார் எழுதிய ஆகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இதெபோல மடோன் அஸ்வினின் வசனங்களும் நறுக்கென்று இருக்கும். மடோன் அஸ்வினும் நித்திலனும் நாளைய இயக்குனர் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். மடோன் அஸ்வினின் மண்டேலா படத்திற்கு பணியாற்றிய உதவி இயக்குனர்கள் பெயரை கவனித்தேன். குரங்கு பொம்மை படத்தில் பணியாற்றிய அதே உதவி இயக்குனர்கள் தான் மண்டேலா படத்திலும் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அதே சமயம் இப்படிப்பட்ட இயக்குனரிடம் உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தமாகவும் இருக்கிறது.

இருப்பினும் உறுதியாக சொல்கிறேன்... நித்திலன் சுவாமிநாதன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருவார். ஒவ்வொரு காட்சியும் ஒரு சிறுகதையை போல, ஒருபக்கக் கதையை போல அமைய வேண்டும் என்று எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருப்பார். அதற்கு சரியான உதாரணம் தான் இந்த "குரங்குபொம்மை".

- மா. யுவராஜ்