சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

‘இது புழுதி படிந்த குருதி!’

குருதி ஆட்டம் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
குருதி ஆட்டம் படத்தில்...

அவ்வளவு அமைதியாக வந்து நிற்பார். இறங்கிட்டார்னா கொடுக்கிற எக்ஸ்பிரஷன்ஸ் அள்ளும். எல்லாத்துக்கும் மேலே அவர் என்மேல் வைத்த நம்பிக்கை அசாத்தியமானது.

"வாழ்க்கையில ஒளிஞ்சு புதைஞ்சிருக்கிற மனித உணர்ச்சிகளை, உறவுகளை ஒப்பனையில்லாமல் பிரிச்சு அள்ளி சினிமாவில் வந்து தந்திடணும்னு எனக்கு எப்பவும் ஆசை உண்டு. ‘8 தோட்டாக்கள்’ அந்த வகையில் சில ஏரியாக்களை எடுத்துக்காட்டியது. அந்தப் படம் கொடுத்திருந்த மரியாதையைத் தக்க வைக்க இந்தக் ‘குருதி ஆட்டம்' எடுத்திருக்கேன். அந்தப் படத்தைவிடப் பெருசா பண்ணிடலாம்னு நெனச்சு செய்யவில்லை. ஆனால் வந்திருப்பதைப் பார்க்கும்போது அப்படித் தோணுது” தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர்  கணேஷ். முதல் படத்திலேயே பளிச்சென அறியப்பட்டவர்.
‘இது புழுதி படிந்த குருதி!’
‘இது புழுதி படிந்த குருதி!’
‘இது புழுதி படிந்த குருதி!’

“ ‘குருதி ஆட்டம்'னு தலைப்பே ஆக்‌ஷன் அதிரடியைத் தருதே...”

“வன்முறையும் பகையும் நிறைஞ்சுவழிகிற இடத்தில் ஒரு இளைஞனுக்கும் 10 வயதுச் சிறுமிக்கும் இருக்கிற அழகான உறவைப் பேசும் கதை. உறவுகளுக்காக நடக்கிற போராட்டம். இதை நீங்க வழக்கமான கதையா எடுத்துக்க முடியாது. மதுரைப் புழுதியை அப்பிக்கிட்டு கோயில், குளம், ரோட்டுக்கடைன்னு மதுரையைச் சுத்தி நடக்கிற கதைதான். இதுக்கு முன்னாடி மதுரையை நிறையவே நீங்கள் பார்த்திருக்கலாம். அது எது மாதிரியும் இல்லாத ஒரு பார்வையைக் கொண்டு வந்திருக்கேன். ஒரு நல்ல சினிமாவுக்கான பொறுப்பை நான் என்றைக்கும் உணர்ந்திருக்கிறதைச் சொல்கிற படமாகவும் ‘குருதி ஆட்டம்’ இருக்கும். ரோட்டோரம் புளியமரத்தடி மெஸ்ல காரைப் போட்டுட்டு சாப்பிடுவோம். தண்ணி வைக்கிற பையன் டவுசர் கிழிஞ்சிருந்தா மனசுக்குள்ளே ஒரு மூலையில ஊசி குத்துமே... அப்படியான இடங்களும் படத்தில் நிறைய இருக்கு. நிறைய புது மனிதர்கள், புரிபடாத குணாதிசயங்கள்னு யதார்த்தமும் உண்மையும் கலந்திருக்கிற படம்தான் ‘குருதி ஆட்டம்.' நிச்சயம் மனசுக்குள்ள இறங்கிற கதையா இருக்கும்.”

‘இது புழுதி படிந்த குருதி!’
‘இது புழுதி படிந்த குருதி!’
‘இது புழுதி படிந்த குருதி!’

“அதர்வா எப்படி நடிச்சிருக்கார்?”

“அவ்வளவு அமைதியாக வந்து நிற்பார். இறங்கிட்டார்னா கொடுக்கிற எக்ஸ்பிரஷன்ஸ் அள்ளும். எல்லாத்துக்கும் மேலே அவர் என்மேல் வைத்த நம்பிக்கை அசாத்தியமானது. இவ்வளவு குறைந்த வயதில் அவருடைய புரிதல் ஆச்சரியமானது. படத்துல ஆக்‌ஷன் எல்லாமும் ஒரு நல்ல உணர்வுபூர்வமான கதையின் மேல் அமைஞ்சிருக்கு. ‘ரவுடி, தாதா'ன்னு நாம கற்பனை பண்ணி வச்சிருக்கிற மாதிரி அவங்க இல்லை. மதுரை ஏரியா முழுவதும் சுற்றித் திரிந்ததில் அவ்வளவு விவரம் தெரிஞ்சது. அவங்க தனி மனுஷங்கதான். ஆனால் அரசாங்கம் போல இருக்காங்க. அவங்க வெட்டுறது, குத்துறது வெறும் பணத்துக்காக மட்டும் இல்லை. அது ஒரு ஹீரோயிசம். இன்னொருத்தனோட பயம் தன்னோட பலம் என்பதில் சந்தோசமாகிடறாங்க. இதில் படம் முழுவதும் எங்கோ ஓரிடத்தில் ஆக்‌ஷன் இருந்துகிட்டே இருக்கு. ஆனால் அது சினிமாவாக இல்லாமல் அசலில் நடக்கிற மாதிரியே இருக்கும்.’’

“பிரியா பவானி சங்கர் ரோல் என்ன?”

“ஒரு விஷயத்தை எப்படி நடிப்பில் கொண்டுவருவது எனத் தெளிவா இருக்காங்க. இன்னைக்கு அவங்கதான் புது நாயகிகளில் முதலிடத்தில் இருக்காங்க. எல்லா முக்கியமான படங்களிலும் அவங்கதான். போன படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் அண்ணே இருந்தது மாதிரி ராதிகா மேடம் இதில் வர்றாங்க. என் அனுபவத்திற்கு முன்னாடி அவங்க அனுபவம் எல்லாம் ரொம்பப் பெரிசு. ஆனால் ஒரு வார்த்தை பேசாமல் நடிச்சுக் கொடுத்ததெல்லாம் பெரிய மனசு.”

‘இது புழுதி படிந்த குருதி!’
ராதிகா - இயக்குநர்  கணேஷ்
ராதிகா - இயக்குநர்  கணேஷ்

“யுவனோட அனுபவம்...”

“பாடல்கள் கேட்டே வளர்ந்த இளமைக்காலம் நம்மோடது. உணர்ந்து எழுதுகிற கவிஞனின் பாடல் வரிகளும் நல்ல மனநிலையில் இருக்கிற இசையமைப்பாளரும் ஒரே நேர்க்கோட்டில் இணைஞ்சாதான் அந்தப் பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிப் பார்த்தால் அந்தக் கலவை இந்தப் படத்தில் அமைஞ்சிருக்கு. நான் இந்த மாதிரி வேணும்னு யுவன்கிட்ட சொல்றதில்லை. அவரே படத்தின் தேவையுணர்ந்து இசையமைச்சிருக்கார்.பின்னணியிலும் பாடலிலும் பொறி பறக்குது.”