Published:Updated:

"அசிஸ்டென்ட் டு டான்ஸ் மாஸ்டர், குஷ்பு கொடுத்த சான்ஸ்!" - பிருந்தா மாஸ்டர் #FriendshipDay

பிருந்தா, நடன இயக்குநர் ( instagram )

"ஒவ்வொரு ஆங்கில வருஷப் பிறப்புக்கும் குஷ்பு எனக்கு ஒரு பர்ஸ் கிஃப்ட் பண்ணுவாங்க. அந்த பர்ஸில் 101 ரூபாய் பணமும் இருக்கும்."

"அசிஸ்டென்ட் டு டான்ஸ் மாஸ்டர், குஷ்பு கொடுத்த சான்ஸ்!" - பிருந்தா மாஸ்டர் #FriendshipDay

"ஒவ்வொரு ஆங்கில வருஷப் பிறப்புக்கும் குஷ்பு எனக்கு ஒரு பர்ஸ் கிஃப்ட் பண்ணுவாங்க. அந்த பர்ஸில் 101 ரூபாய் பணமும் இருக்கும்."

Published:Updated:
பிருந்தா, நடன இயக்குநர் ( instagram )

தற்போதைய சினிமா இன்டஸ்ட்ரியில் மோஸ்ட் வான்டட் கோரியோகிராபர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர். ஜோதிகா, ரேவதி, குஷ்பு, நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நடிகைகள் பலருக்கும் கோரியோகிராப் செய்திருப்பவர். எல்லோருடனும் இயல்பாகப் பழகக்கூடிய பிருந்தா, நடிகை குஷ்புவுக்கு மிகவும் நெருக்கமான தோழி. குஷ்புவும் பிருந்தாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இருவருமே அடிக்கடி தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவிடுவார்கள்.

பிருந்தா, குஷ்பு
பிருந்தா, குஷ்பு
instagram
"நண்பர்கள் தினமான இன்று உங்களுக்கும் குஷ்புவுக்கும் இடையே இருக்கும் நட்பு பற்றி விகடன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்" என்றவுடன் "நிச்சயமாக" என ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தார் பிருந்தா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட் ஃபிரெண்ட்ஸ்தான். நான் சோர்ந்து விடுகிற நேரங்களில் எல்லாம் என் மனசுக்குள்ள நம்பிக்கையை விதைச்சு, என்னைப் புதுசா உணர வெச்சுருக்காங்க. என்னோட வாழ்க்கையில், என் கரியர் எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு என் ஃப்ரெண்ட்ஸும் முக்கியம். நிறைய ஆர்டிஸ்ட்டுகளுடன் வேலை பார்த்திருக்கேன். அதனால் சினிமா துறையில், எனக்கு ஃப்ரெண்ட்ஸ் அதிகம். எல்லாரையும்விட குஷ்பு ரொம்ப க்ளோஸ்.

"ஒவ்வொரு ஆங்கில வருஷப் பிறப்புக்கும் குஷ்பு எனக்கு ஒரு பர்ஸ் கிஃப்ட் பண்ணுவாங்க. அந்த பர்ஸில் 101 ரூபாய் பணம் இருக்கும்."
பிருந்தா

அடுத்தடுத்து குஷ்பு நடித்த நிறைய படங்களில் நான் அசிஸ்டென்ட் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்தேன். அதனால் எங்களோட நட்பு இன்னும் அதிகமாச்சு. அடிக்கடி போனில் பேசிக்க ஆரம்பிச்சோம். நாள்கள் செல்ல செல்ல ரெண்டு பேருக்கும் இடையேயான ஷேரிங்ஸ் இன்னும் அதிகமாச்சு. நான் சீனியர், நீ ஜூனியர் என்ற எந்த வித்தியாசமும் குஷ்பு பார்க்க மாட்டாங்க. கேமரா மேன், கோ ஆர்டிஸ்ட், டான்ஸ் மாஸ்டர் என எல்லாரிடமும் ரொம்ப சகஜமாகப் பழகுவாங்க. அந்தக் குணத்தைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஸ்பாட்டுக்கு வரும்போதே சிரிச்ச முகத்தோட எல்லோருக்கும் 'ஹாய்' சொல்லிட்டே வருவாங்க. அந்த பாசிட்டிவ் எனர்ஜி அங்க இருக்கும் எல்லோரையும் உற்சாகப்படுத்திடும். என்னதான் நான் அவங்க ஃப்ரெண்ட்டாக இருந்தாலும் ஷூட்டிங் ஆரம்பிச்சுருச்சுனா மாஸ்டர்னுதான் கூப்பிடுவாங்க. நானும் ஆர்டிஸ்ட்னுதான் கூப்பிடுவேன். துறை வேறு; நட்பு வேறு என்ற தெளிவு எங்க ரெண்டு பேருக்குமே இருக்கு.

குஷ்பு, பிருந்தா
குஷ்பு, பிருந்தா
instagram

என்னோட கரியரில் எனக்கு மிகப்பெரிய ஆரம்பத்தைக் கொடுத்தது குஷ்புதான். அசிஸ்டென்ட் மாஸ்டராக வேலைபார்த்துட்டு இருந்த எனக்கு சுந்தர்.சி சார் இயக்கிய 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரியும் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தாங்க. அது என்னோட திறமைக்கான வாய்ப்புனு குஷ்பு சொன்னாலும், அதில் நட்பைத்தான் நான் அதிகமா உணர்ந்தேன்" என்றவரிடம் உங்க ரெண்டு பேருக்கும் இடையேயான ஷேரிங்ஸ் பத்தி சொல்லுங்க என்றோம்.

"எல்லா பர்ஷனல் விஷயத்தையும் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிப்போம். எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ஏதாவது ஒரு பிரச்னைனா நான் முதலில் குஷ்புக்குத்தான் போன் பண்ணுவேன். அவங்களும் எனக்குத்தான் போன் பண்ணுவாங்க. அவங்க சொல்லுற 'ஹலோ'விலே அவங்க என்ன மைண்ட் செட்டில் இருக்காங்கனு நானும் கண்டு பிடிச்சிருவேன், அதுமாதிரி அவங்களும். பர்ஷனல் விஷயங்கள் தாண்டி அடிக்கடி சின்ன கிஃப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. ஒவ்வொரு ஆங்கில வருஷப் பிறப்புக்கும் குஷ்பு எனக்கு ஒரு பர்ஸ் கிஃப்ட் பண்ணுவாங்க. அந்த பர்ஸில் 101 ரூபாய் பணம் இருக்கும்.

குஷ்பு, பிருந்தா
குஷ்பு, பிருந்தா
instagram

அவங்க எனக்குக் கொடுக்குற அந்தப் பர்ஸ் ரொம்ப ஸ்பெஷலானது; லக்கியானதும்கூட. உண்மையைச் சொல்லனணும்னா வேற யார்கிட்ட இருந்தும் நான் பர்ஸை கிஃப்ட்டாக வாங்க மாட்டேன். குஷ்பு இத்தனை வருஷமாகக் கொடுத்த எல்லா பர்ஸும் பணமும் என்கிட்ட பத்திரமா இருக்கு. நான் ஷூட்டிங் போகும் இடத்தில் ஏதாவது ஒரு பொருள் தனித்துவமா இருந்தா அதை குஷ்புக்காக வாங்கிட்டு வந்து கொடுப்பேன். சின்ன பரிசாக இருந்தாலும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. எந்தப் பொருளையும் ரொம்ப பத்திரமாக வெச்சுப்பாங்க. ஆரம்ப காலங்களிலிருந்து இப்ப வரை நாங்க ஒண்ணா எடுத்துக்கிட்ட எல்லா போட்டோக்களும் குஷ்பு வீட்டில் ஆல்பமாகப் பாத்திரமாக இருக்கு. நினைவுகளுக்கு எப்போதும் அதிக மதிப்பு கொடுப்பது குஷ்புவின் ஸ்பெஷல்.

அடிக்கடி வெளியூர் போறது, தனியா பார்த்துப் பேசிக்கிறது எல்லாம் எங்க நட்புக்குள் கிடையாது. அனு பார்த்தசாரதி, சுஜாதா, சுப்பு, குஷ்பு, நான் என எங்களோட நட்பு வட்டாரம் 5 பேர் கொண்ட டீம். எப்போவது ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து ஒரு இடத்தில் மீட் பண்ணி மணிக்கணக்கில் நேரம் செலவிடுவோம். ஆனால், ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது போனில் பேசிப்போம். ரொம்ப கஷ்டமான சில சூழல்களில் காரில் நானும் குஷ்புவும் ஒரு லாங் டிரைவ் போயிட்டு வருவோம். நான்தான் கார் ஓட்டுவேன். குஷ்பு பேசிக்கிட்டே வருவாங்க. அந்த டிரிப் முடிஞ்சு வரும்போது எல்லாப் பிரச்னைகளையும் முடிஞ்ச மாதிரி ஒரு ஹேப்பி கிடைக்கும்.

friendship day
friendship day
instagram

குஷ்பு ரொம்ப தைரியமான பாசிட்டிவ் கேரக்டர். அவங்க கூட இருந்தாலே நமக்கும் ஒரு பாசிட்டிவ் உணர்வு கிடைக்கும். ஒரு பொண்ணு எப்படித் தைரியமா இருக்கணும்ங்கிறதை அவங்ககிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். வதந்திகள், கிசுகிசுக்கள் என எல்லாத்தையும் அசால்ட்டாகக் கடந்துருவாங்க. குஷ்பு பற்றி வந்த எந்த வதந்திகளையும் நான் நம்புனது கிடையாது. அதே மாதிரி அவங்க பண்ற விஷயங்களில் சரி எது தப்பு எதுனு முகத்துக்கு நேராகச் சொல்லும் உரிமையும் எனக்கு கொடுத்திருக்காங்க.

சினிமா, சீரியல், நிகழ்ச்சி தொகுப்பாளினி என பிஸியாக இருந்த சமயத்தில் "நான் அரசியலில் கவனம் செலுத்தலாம்னு இருக்கேன்"னு சொன்னாங்க. கண்டிப்பாக அவங்களால் அதில் சாதிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு ஒரு ஃப்ரெண்டா அவங்களை ஊக்கப்படுத்தினேன். இப்பவரை அரசியலிலும் அவங்களுடைய கருத்துகள் ரொம்ப சரியா இருக்கிறதை நான் உணர்ந்திருக்கேன்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு ஃப்ரெண்ட் இருப்பாங்க. அவங்களை ஒரு டைம் பாஸ்ஸாக மட்டும் நினைக்காமல் நம்முடனே பயணிப்பவங்க. நமக்காக யோசிப்பவங்கனு நினைக்க ஆரம்பிச்சு அவங்களுக்கு உண்மையாக நடந்துக்க ஆரம்பிச்சா நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி தான்" என்றார் நட்பின் புன்னகையோடு.

உங்களுக்கு இப்படி யாராவது க்ளோஸ் ஃப்ரெண்ட் இருந்தா, அவங்களப் பத்தி ஒரு வரி கமென்ட்ல சொல்லுங்களேன்!